China unemployment crisis China unemployment crisis
உலகம்

"ஆடு மேய்க்கும் வேலைக்கு இவ்ளோ சம்பளமா?" படையெடுக்கும் பட்டதாரி இளைஞர்கள் - '966' வேலை கலாச்சாரத்தால் வேதனையில் தொழிலாளர்கள்!

வாரத்தில் ஆறு நாட்கள், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை செய்யும் '996' கலாச்சாரம் குறித்து நீலக்காலர் மற்றும் வெள்ளைக் காலர் தொழிலாளர்கள் இருவருமே புகார்கள் தெரிவிக்கின்றனர்.

Vinvizhi Leninton

மங்கோலியாவின் தெற்கே உள்ள தொலைதூர மற்றும் கரடுமுரடான புல்வெளிகளில் அவரது ஆடுகளை மேய்க்க விருப்பமுள்ள மேய்ப்பர்களுக்காக சீனப் பண்ணை உரிமையாளர் ஸுவோ சியாயோங் வெளியிட்ட வேலைவாய்ப்பு விளம்பரம், சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்ட பதிவாக மாறியதைக் கண்டு அவர் திகைத்துப் போயுள்ளார்.

அவரது ஆடுகளை மேய்க்க ஷாங்காய் மற்றும் சோங்கிங் போன்ற பெருநகரங்களைச் சேர்ந்த அலுவலகப் பணியாளர்கள், சீனா முழுவதிலும் உள்ள தொழிற்சாலைத் தொழிலாளர்கள், மற்றும் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் உட்பட 700-க்கும் மேற்பட்டோர் அந்த இரண்டு பதவிகளுக்கு விண்ணப்பித்துள்ளனர். சீனாவின் X தளமான 'வெய்போ'வில், சில மணி நேரங்களிலேயே 59 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. இந்த வேலைவாய்ப்பு விண்ணப்பத்தை சாதாரணமாக கடந்துவிட முடியாது. ஏனெனில், அந்நாட்டின் வேலைவாய்ப்புச் சந்தையில் அதிகரித்து வரும் நெருக்கடிகளை இது வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

"இது வைரலாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை," என்று கூறிய ஸுவோ, விண்ணப்பதாரர்களில் பத்தில் ஒரு பங்கினர் சமீபத்தில்தான் பல்கலைக்கழகப் படிப்பை முடித்தவர்கள் என்றும், மற்றவர்கள் கடன் சுமை, கடினமான தொழிற்சாலை வேலைகள் அல்லது பணியிட அரசியலால் மன உளைச்சலுக்கு ஆளாகியவர்கள் என்றும் அவர் கூறினார். மேலும், கடுமையான போட்டி நிறைந்த, குறைந்த ஊதியம் தரும் வேலைச் சந்தை

ஒட்டுமொத்த வேலையின்மை 5%-க்கு சற்று அதிகமாகவே இருந்து வரும் நிலையில், சீனாவில் வேலையின்மை அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த பத்தாண்டுகளில் பெரும்பாலான காலங்களில் தனியார் துறை வருமானம் பொருளாதார வளர்ச்சியை விட பின்தங்கியே இருந்துள்ளது. வாரத்தில் ஆறு நாட்கள், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை வேலை செய்யும் '996' கலாச்சாரம் குறித்து நீலக்காலர் மற்றும் வெள்ளைக் காலர் தொழிலாளர்கள் இருவருமே புகார்கள் தெரிவிக்கின்றனர்.

ஈரான் போரின் காரணமாக தொழிற்சாலைகள் அதிக செலவுகளைச் சந்திப்பதாலும், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு வேகமடைவதாலும், 12.7 மில்லியன் பல்கலைக்கழக பட்டதாரிகள் வேலை தேடத் தொடங்குவதாலும் இந்த சூழல் நிலவுவதாக கூறப்படுகிறது. மேலும், வரும் மாதங்களில் தொழிலாளர் சந்தை மேலும் மோசமடையும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்ப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவில் நகர்ப்புற வேலைகள் கவர்ச்சியற்றவையாகவும், அரிதானவையாகவும் மாறி வருகின்றன. மேலும், கப்பல் கொள்கலன்களைத் தயாரிக்கும் தொழிற்சாலையில் தனது வேலையால் ஏற்பட்ட சோர்வின் காரணமாக ஜேம்ஸ் குவோ அந்த ஆடுகளை மேய்க்கும் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். இது குறித்து அவர் கூறியது, "கழிவறைக்குச் செல்லக்கூட நேரம் இல்லாமல், கைகள் வீங்கி கொப்புளங்கள் வரும் வரை திருகுகளைப் பொருத்திக்கொண்டு, ஒரு நாளைக்கு 13 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்வது எப்படி இருக்கும் என்று உங்களுக்குத் தெரியாது," என்று அந்த 21 வயது இளைஞர் தனது வேதனையை தெரிவித்தார்.

ஸுவோ, கோடைக்காலத்தில் 2,000 ஹெக்டேர் (4,942 ஏக்கர்) மேய்ச்சல் நிலத்தில் 3,000 செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லவும், மேலும் வெப்பநிலை மைனஸ் 30°C (மைனஸ் 22°F) க்கும் கீழே குறையக்கூடிய குளிர்காலத்தில், அவற்றிற்கு கொட்டகையில் தீவனமளித்தல் மற்றும் சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொள்ளவும், மேய்ப்பர்களை, குறிப்பாக ஒரு தம்பதியினரை அவர் தேடிக்கொண்டிருந்தார்.

அதற்காக, மேய்ப்பர்கள் ஒவ்வொருவருக்கும் மாதத்திற்கு 8,000 யுவான் ($1,178) வழங்கப்படும் என்றும் வர கூறியிருந்தார். இது, தனியார் நிறுவனங்களில் வழங்கப்படும் தேசிய நகர்ப்புற சராசரியான சுமார் 6,000 யுவானை விடக் கணிசமாக அதிகமாகும். மேலும், அவர்களுக்குத் தங்குமிடம் மற்றும் மளிகைப் பொருட்களும் வழங்கப்படும் என்றும் அவர் கூறியது இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்