சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குனர், சிறந்த படம் மற்றும் ஆஸ்கார் 2026 விழாவின் அனைத்து முக்கிய பிரிவு வெற்றியாளர்களும் 98வது ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் ஓங்கியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் தொடர்ந்து கூட்டு தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், புவிசார் அரசியல் நெருக்கடிகளும் அதிகரித்து வரும் நேரத்திற்கு மத்தியில், 98வது அகாடமி விருது வழங்கும் விழா மார்ச் 16 திங்கட்கிழமை லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் நடைபெற்றது. இயக்குநர் பால் தாமஸ் ஆண்டர்சனின் 'ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்' திரைப்படம் ஆறு விருதுகளை வென்றுள்ளது, ரியான் கூக்லரின் சின்னர்ஸ் 4 ஆஸ்கர் விருதுடன் சீறி பாய்ந்துள்ளது. இந்த நிகழ்வு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றது. முக்கிய விழா மார்ச் 16 திங்கள் கிழமை இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு (மார்ச் 15 இரவு 7 மணி) தொடங்கியது. இது ஜியோஹாட்ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்த விழா ஸ்டார் மூவிஸ், ஸ்டார் மூவிஸ் செலக்ட் மற்றும் கலர்ஸ் இன்ஃபினிட்டி தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டது. மேலும் ஆஸ்கரில் பிரியங்கா சோப்ரா தொகுப்பாளர்களில் ஒருவராவகவும் இருந்துவருகிறார்.
இதில், ஸ்பானிஷ் நடிகர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்ததைத் தொடர்ந்து அது சமூகவலைத்தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. அறிவிப்பின் போது, பார்டெம், "போர் வேண்டாம், பாலஸ்தீனத்தை விடுவிப்போம்" என்று கூறினார், இது பார்வையாளர்களிடமிருந்து பலத்த கைதட்டலுக்கு வழிவகுத்தது. நடிகர் தனது டக்ஷீடோவில் "போர் வேண்டாம்" என்ற முள் அணிந்திருப்பதையும் காண முடிந்தது. ஜாமோன் ஜாமோன் (1992), போகா எ போகா (1995) மற்றும் கார்னே ட்ரெமுலா போன்ற படங்களுக்கு பெயர் பெற்ற ஸ்பானிஷ் நடிகர் ஜேவியர் பார்டெம், பாலஸ்தீனத்திற்கான ஒற்றுமை செய்தியை மேடையில் பகிர்ந்து கொண்டார், அப்போது பிரியங்கா சோப்ராவும் அவரது அருகில் இருந்தார். அவரது அறிக்கை பார்வையாளர்களிடமிருந்து மிகுந்த ஆரவாரத்தைப் பெற்றது, மேலும், அவரது கருத்துக்கு அருகில் இருந்த பிரியங்கா சோப்ராவும் ஆதரிப்பது போன்று தலையசைத்தார்.
ஜேவியர் பார்டெம் 2014 காசா போரின் போது , இஸ்ரேலின் நடவடிக்கைகளை "இனப்படுகொலை"என்று கண்டித்து எதிர்த்து குரல் கொடுத்தார். மேலும் 2022 ம் ஆண்டு ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த போது அதற்கு எதிராக போராட்டம் நடத்தி உள்ளார். மேலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை “ஏகாதிபத்தியவாதி” என்றும் குறித்து கண்டணம் செய்துள்ளார்
பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஒரு போர் எதிர்ப்பு முள் மற்றும் "போர் வேண்டாம்" ( நோ எ லா கெரா ) என்று எழுதப்பட்ட ஒரு பேட்ச் அணிந்து அவர் சிவப்பு கம்பளத்தில் போஸ் கொடுத்தபடி அரங்கிற்கு வந்தார். இது இணையதளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.