உலகம்

ஈரானுக்கும் பெருகும் ஆதரவு… களம் இறங்குகிறதா வடகொரியா? இஸ்ரேல் - அமெரிக்காவின் அடுத்த நகர்வு!

ஒரு நாட்டின் உச்ச தலைவர் கொல்லப்படுவதும் அதற்கு மௌனம் காப்பதும் நல்லது இல்லை....

மாலை முரசு செய்தி குழு

ஈரான் மீதான அமெரிக்கா- இஸ்ரேல் நடத்திய கூட்டுதாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் காமேனி கொல்லப்பட்டார். மேலும் 40-க்கும் மேற்பட்ட முக்கியத்தலைவர்கள், காமேனியின் குடும்பம் மற்றும் 870-க்கும் மேற்பட்ட ஈரான் மக்கள் கொல்லப்பட்டனர்.

அதனை தொடர்ந்து பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் அரசும் பதில் தாக்குதல் நடந்தும் எனும் தெரிவித்திருந்தது. அதற்கு சில நாடுகள் ஆதரவு தெரிவித்தும் எதிர்த்தும் வந்தன. இருப்பினும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரானின் முக்கியப் பகுதிகளில் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்க, ஈரான் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக துபாயில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவப் பயன்பாட்டிலுள்ள கட்டிடம் மற்றும் ஆஸ்திரேலிய ராணுவத் தளம் ஆகியவற்றை இலக்கு வைத்து ஈரான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அதிகாரப்பூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மத்திய கிழக்கில் அமைதியா நிலவ வேண்டும் எனவும் வழியுது வருகிறது.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்பதட்டம் இப்போது உச்ச கட்டம் எட்டிய நிலையில், இன்னும் உடன்பாடு எதுவும் எட்டப்படதா நிலையில் இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் வடகொரியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக இருக்குமெனவும், அமெரிக்கா- இஸ்ரேலுக்கு எதிராகவும் கருது தெரிவித்து வருகிறது. அமெரிக்கவின் இந்த இராணுவ நடவடிக்கையும் "சட்டவிரோத ஆக்கிரமிப்புச் செயல்" மற்றும் "தேசிய இறையாண்மையை மீறுவதாக உள்ளது" எனவும் வட கொரியாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அறிக்கையில் தெரிவித்ததாக அரசு ஊடகமான கொரிய மத்திய செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இந்த கூட்டு தாக்குதல் "ஆக்கிரமிப்புப் போர்" என்றும் "தங்கள் சுயநல மற்றும் மேலாதிக்க செயல்களை நிறைவேற்ற இராணுவ சக்தியை துஷ்பிரயோகம் செய்ய கூடாது" எனவும் குறிபிட்டு, இதை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த போர்தாக்குதல் குறித்து இந்திய பிரதமர் மோடி எதுவும் கருத்து கூறாத நிலையில் இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல்காந்தி கடுமையாக விமரிசித்து கேள்வி எழுப்பியுள்ளார். ஈரான் மீதான ஒருதலைப்பட்ச தாக்குதல்களும், மத்திய கிழக்கு நாடுகள் மீதான ஈரானின் தாக்குதல்களும் கண்டிக்கப்பட வேண்டும் எனவும் அயோத்துல்லா சையத் அலி ஹொசைனி கமேனியின் இலக்கு வைக்கப்பட்ட படுகொலை குறித்து இந்தியாவின் மௌனம் "ஒரு நடுநிலை நிலைப்பாடு அல்ல, மாறாக அதன் துறப்பு" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு நாட்டின் உச்ச தலைவர் கொல்லப்படுவதும் அதற்கு மௌனம் காப்பதும் நல்லது இல்லை என்றும் கூறியுள்ளார். ஒரு நாட்டின் தலைவரின் படுகொலையை அவர் ஆதரிக்கிறாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இரு நாடுகளும் ஈரானின் மீதான தாக்குதலை நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும், ஈரானின் பதில் தாக்குலும் கண்டிக்கதக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் வன்முறைக்கு வன்முறை பதிலகத்து எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.