வரலாற்றில் முதன்முறை.. பெண்கள், இஸ்லாமியர், பூர்வகுடிகள், Gay ஆணுக்கு அதிகாரம்.. ட்ரம்ப்புக்கு பாதகமான முடிவு; அமெரிக்காவுக்கு புதிய தொடக்கம்! 
உலகம்

வரலாற்றில் முதன்முறை.. பெண்கள், இஸ்லாமியர், பூர்வகுடிகள், Gay ஆணுக்கு அதிகாரம்.. ட்ரம்ப்புக்கு பாதகமான முடிவு; அமெரிக்காவுக்கு புதிய தொடக்கம்!

இந்த வெற்றியை "அமெரிக்க மக்கள் தங்களை இணைக்கும் அரசியல்தான் வேண்டும்; பிரிவினை அரசியல் அல்ல என்று முடிவெடுத்துள்ளனர்" என முன்னாள் அதிபர் ஒபாமா வர்ணிக்கிறார்.

Antony Ajay R

அமெரிக்காவில் நடந்து முடிந்த இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி மிகப் பெரிய வெற்றியைப் பெற்று, காங்கிரஸின் இரு அவைகளையும் கைப்பற்றியுள்ளது.

இது அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு மிகப் பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை இல்லாமல் எந்தவொரு சட்டத்தையும் எளிதாக நிறைவேற்ற முடியாது.

இந்த வெற்றியை, "அமெரிக்க மக்கள் தங்களை இணைக்கும் அரசியல்தான் வேண்டும்; பிரிவினை அரசியல் வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளனர்" என முன்னாள் அதிபர் ஒபாமா வர்ணிக்கிறார்.

ட்ரம்ப்பின் தோல்வி அமெரிக்க அரசியல் வரலாற்றில் பல புதிய தொடக்கங்களுக்கு வித்திட்டுள்ளது. இது அமெரிக்க மக்களின் மனநிலையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

முதல் கறுப்பின பெண் ஆளுநர்

ஜார்ஜியா மாகாணத்தில் கேய்ஷா லயன்ஸ் பாட்டம்ஸ் வெற்றிபெற்றுள்ளார். இவர் அந்த மாகாணத்தின் முதல் கறுப்பின மற்றும் முதல் ஆளுநரும் ஆவார். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜார்ஜியாவில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

முதல் முஸ்லிம் செனட்டர்

எகிப்திய - அமெரிக்கரான அப்துல் எல்-செய்யது, மிச்சிகன் மாகாணத்தின் செனட்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மருத்துவரான இவர், அமெரிக்க செனட்டில் இடம் பெரும் முதல் இஸ்லாமியர் ஆவார்.

முதல் வெளிப்படையான ஓரினச்சேர்க்கையாளர் (ஆண்) செனட்டர்

நியூ ஹாம்ஸ்பியர் மாகாணத்தில் தன்னை ஓரினச்சேர்க்கையாளராக வெளிப்படையாக அறிவித்துக்கொண்ட கிறிஸ் பாப்பாஸ் செனட்டராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்த இடமும் குடியரசு கட்சியிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெக்சாஸ் மாகாணத்தின் முதல் லத்தீன் அமெரிக்க கவர்னர்

டெக்சாஸ் மாகாணத்தின் முதல் லத்தீன் அமெரிக்க (Latino/Latina) ஆளுநராக ஜினா ஹினோஜோசா (Gina Hinojosa) வரலாறு படைத்துள்ளார். இவரது வெற்றியின் மூலம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு டெக்சாஸ் மாகாணத்தில் ஜனநாயக கட்சியின் ஆளுநர் பதவியேற்க உள்ளார்.

முதல் அமெரிக்க பூர்வகுடி பெண் கவர்னர்

நியூ மெக்சிகோ மாகாணத்தின் கவர்னராக வெற்றி பெற்றுள்ளார் டெப் ஹாலண்ட். இவர் லகுணா பியூப்லோ என்ற இனத்தைச் சேர்ந்தவர். கடந்த 2018ம் ஆண்டு பைடன் ஆட்சியில் இவர் முதல் பூர்வகுடி கேபினேட் செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

முதல் கறுப்பின சபாநாயகர்

இந்த வெற்றி ஹக்கீம் ஜெஃப்ரீஸை அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் முதல் கறுப்பின சபாநாயகராகும் நிலைக்கு உயர்த்தியுள்ளது. 

நியூயார்க் நகர நாடாளுமன்றத் தொகுதியின் பிரதிநிதியான இவர், கடந்த நான்கு ஆண்டுகளாக சபையைக் கட்டுப்படுத்தி வந்த குடியரசுக் கட்சியினரிடமிருந்து பொறுப்பை ஏற்று, ஜனவரி முதல் வாரத்தில் பதவியேற்கவுள்ள ஜனநாயக கட்சி பெரும்பான்மை வகிக்கும் அவைக்கு தலைமை தாங்குவார்.

முதல் அமெரிக்க பூர்வகுடி பெண் செனட்டர்

பெக்கி ஃப்லனகான் மின்னசோட்டா மாகாண செனட்டராக வெற்றி பெற்றுள்ளார். இவர் ஓஜிப்வெ இனக்குழுவைச் சேர்ந்தவர்.

ட்ரம்ப்பின் குடியேறிகள் கொள்கைக்கு எதிராக தீவிர பிரசாரம் மேற்கொண்டு இந்த வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறார்.

கலிஃபோர்னியாவின் முதல் லத்தீன் அமெரிக்க கவர்னர்

கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்குப் பிறகு கலிஃபோர்னியாவின் லத்தீன் அமெரிக்க கவர்னராக பதவியேற்கவுள்ளார் சேவியர் பேசெரா.

தெற்கு கரோலினாவின் முதல் பெண் செனட்டர்

அன்னி ஆண்டிரூஸ் 1998ம் ஆண்டு முதல் குடியரசுக் கட்சியின் பிடியில் இருந்த தெற்கு கரோலினாவின் செனட்டராக வெற்றி பெற்று, மாகாணத்தின் முதல் பெண் செனட்டராகவும் வரலாறு படைத்துள்ளார்.

ஒகியோவின் முதல் பெண் கவர்னர்

ஏமி ஆக்டன் குடியரசுக் கட்சியின் விவேக் ராமசாமியை வீழ்த்தி மாகாணத்தின் முதல் பெண் கவர்னராக வரலாறு படைத்துள்ளார். 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாகாணத்தில் ஜனநாயக கட்சி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்