ட்ரம்ப்புக்கு நேரடியாக விழுந்த அடி.. குடியரசு கட்சியின் கோட்டையை உடைத்த மருத்துவர்.. தெற்கு கரோலினாவில் வந்த மாற்றம்!

1960கள் மற்றும் 1970களில் இனப் பாகுபாட்டை ஆதரித்து வலுவாகக் குரல் கொடுத்த ஸ்ட்ரோம் தர்மண்ட், கரோலினா மாகாணத்தின் வலுவான அரசியல் வாதியாக உயர்ந்து, செனட்டராக வெற்றி பெற்றார்.
Direct blow to Trump: Doctor breaks Republican stronghold, change in South Carolina after 28 years!
ட்ரம்ப்புக்கு நேரடியாக விழுந்த அடி.. குடியரசு கட்சியின் கோட்டையை உடைத்த மருத்துவர்.. தெற்கு கரோலினாவில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த மாற்றம்!
Published on: 
Updated on: 
1 min read

அமெரிக்காவின் இடைக்காலத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது ஜனநாயக கட்சி. இதில் தெற்கு கரோலினா மாகாணத்தில் குடியரசு வேட்பாளர் டார்லீன் கிரஹாமின் தோல்வி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

செனட்டர் லிண்ட்சே கிரஹாம் மரணத்தைத் தொடர்ந்து அவரது சகோதரியான டார்லீன் கிரஹாம் செனட்டராக பொறுப்பேற்றார். அவரது தோல்வி ட்ரம்ப்புக்கு விழுந்த அடியாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் 1998ம் ஆண்டு முதல் குடியரசு கட்சியின் கோட்டையாக இருந்த தெற்கு கரோலினா மாகாணத்தில் முதல் ஜனநாயக கட்சி வேட்பாளராக வெற்றி பெற்றுள்ளார் அன்னி ஆண்ட்ரூஸ்.

1960கள் மற்றும் 1970களில் இனப் பாகுபாட்டை ஆதரித்து வலுவாகக் குரல் கொடுத்த ஸ்ட்ரோம் தர்மண்ட், கரோலினா மாகாணத்தின் வலுவான அரசியல் வாதியாக உயர்ந்து, செனட்டராக வெற்றி பெற்றார். அவரைத் தொடர்ந்து 23 ஆண்டுகள் லிண்ட்சே கிரஹாம் வெற்றி பெற்று வந்தார்.

US Senetor  லிண்ட்சே கிரஹாம்
லிண்ட்சே கிரஹாம்

இவர் உக்ரைன் நாட்டின் தீவிர நல விரும்பி. ட்ரம்ப் ரஷ்யா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500% வரி விதிக்கும் முடிவை முன்னின்று வழிநடத்தினார்.

ரஷ்யாவிடம் அதிக அளவில் எண்ணெய் வாங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால் இவரது நடவடிக்கைகள் இந்தியாவையும் பாதித்தன.

லிண்ட்சே கிரஹாம் மறைவுக்கு பிறகு பதவிக்கு வந்த சகோதரியும் இன்று வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார். 28 ஆண்டுகள் குடியரசு கட்சியின் பிடியில் இருந்த தெற்கு கரோலினா தொகுதியை ஒரு குழந்தை மருத்துவரான அன்னி ஆண்ட்ரூஸ் வென்று காட்டியிருக்கிறார்.

தேர்தலுக்கு முந்தைய இறுதி இரண்டு வாரங்களில் ஆண்ட்ரூஸ் சுமார் 4.6 மில்லியன் டாலர் செலவழித்ததாகவும், அதே காலகட்டத்தில் கிரஹாமின் பிரச்சாரக் குழுவால் சுமார் 90,000 டாலர் திரட்டி, ஏறத்தாழ 65,000 டாலர் செலவழிக்கப்பட்டதாகவும் என்பிசி நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது வெற்றிக்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Direct blow to Trump: Doctor breaks Republican stronghold, change in South Carolina after 28 years!
``ஒருவாரத்துக்கு தேவையான உணவை வீட்டில் வைத்திருங்கள்.." வருகிறதா 'மூன்றாம் உலகப் போர்'? உக்ரைன் - ரஷ்யா மோதல்.. மேற்குலக அரசுகள் எச்சரிக்கை!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்