நான் 'வீட்டோ' அதிகாரத்தை கையில் எடுப்பேன்.. டிரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை! தேர்தலில் வென்றும் நிர்கதியாக நிற்கும் எதிர்க்கட்சிகள்? White House
உலகம்

நான் 'வீட்டோ' அதிகாரத்தை கையில் எடுப்பேன்.. டிரம்ப் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை! தேர்தலில் வென்றும் நிர்கதியாக நிற்கும் எதிர்க்கட்சிகள்?

ட்ரம்ப் அதிபராக இருந்தாலும் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளையும் ஜனநாயக கட்சி கைப்பற்றியுள்ளது. இதனால் ட்ரம்ப் புதிய சட்டங்கள் இயற்றும்போது நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற முடியாமல் போகும்.

Antony Ajay R

அமெரிக்காவில் நடந்த இடைக்காலத் தேர்தல் முடிவில் காங்கிரஸின் (நாடாளுமன்றம்) இரண்டு அவைகளிலும் தங்கள் பெரும்பான்மையை இழந்துள்ளது ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி.

அமெரிக்க காங்கிரஸில் ஒரு மாகாணத்துக்கு 2 செனட்டர்கள் என்று 100 செனட்டர்கள் உள்ளனர். 2 ஆண்டுக்கு ஒருமுறை 3ல் ஒரு பங்கு செனட்டர்களுக்கு தேர்தல் நடைபெறும். அந்தவகையில் 2026ம் ஆண்டு ஓகையோ, ஃபுளோரிடா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற 2 சிறப்புத் தேர்தல்கள் உட்பட 35 செனட்டர்கள் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இதில் ஏற்கெனவே இருந்த இடங்களுடன், குடியரசு கட்சி கையிலிருந்த இடங்களையும் பறித்து, செனட்டில் பெரும்பான்மை பெரும் வகையில் 54 இடங்களை கைப்பற்றியிருக்கிறது ஜனநாயக கட்சி.

ஹவுஸ் ஆஃப் ரெப்ரெசென்டேடிவ்ஸ் காங்கிரஸின் கீழாவையாக பார்க்கப்படுகிறது. இதில் தொகுதிகள் அடிப்படையில் 435 உறுப்பினர்கள் உள்ளனர்.

ஹவுஸ் ஆஃப் ரெப்ரெசென்டேடிவ்ஸ் பதவிக்காலம் 2 ஆண்டுகள் என்பதனால், ஒவ்வொரு அதிபர் தேர்தலின்போதும், இடைக்கால தேர்தலின்போதும் இவர்களுக்கு தேர்தல் நடக்கும். இந்தமுறை நடந்த தேர்தலில் இதுவரை 228 இடங்களை வென்று பெரும்பான்மையை அடைந்துள்ளனர்.

ட்ரம்ப்புக்கு என்ன இழப்பு?

ட்ரம்ப் அதிபராக இருந்தாலும் நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளையும் ஜனநாயக கட்சி கைப்பற்றியுள்ளது. இதனால் ட்ரம்ப் புதிய சட்டங்கள் இயற்றும்போது நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற முடியாமல் போகும்.

மேலும் ட்ரம்ப் நிர்வாகத்தில் ஏதாவது முறைகேடு நடப்பதாக சந்தேகித்தால் அதனை நாடாளுமன்ற குழு விசாரிக்க முடியும். பட்ஜெட் உள்ளிட்டவற்றில் அழுத்தம் கொடுக்க முடியும்.

அமைச்சர்கள், முக்கிய அரசு அதிகாரிகள், நீதிபதிகள் நியமனத்தில் அதிபர் பரிந்துரைக்கும் நபரை செனட் ஏற்க வேண்டும். ஆனால் இப்போது செனட் ஜனநாயக கட்சியின் காட்டுப்பாட்டில் இருப்பதனால் நியமனங்கள் ட்ரம்ப்புக்கு எளிதாக இருக்காது. அரசை கேள்வி கேட்கும் அதிகாரம் நாடாளுமன்றத்தில் ஜனநாயக கட்சியிடம் இருக்கிறது.

ஆனாலும் ட்ரம்ப் தான் அதிபர். அவரிடம் வீட்டோ அதிகாரம் இருப்பதனால், நாடாளுமன்றம் கொண்டுவரும் சட்டங்களை அவர் தடுக்க முடியும். வெளியுறவு கொள்கை, நிர்வாக உத்தரவுகள் போன்ற அதிபருக்கு உரிய அதிகாரங்கள் ட்ரம்ப்பிடமே இருக்கும். இதையே குறிப்பிட்டு அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.

ட்ராம்ப்பை பதவியில் இருந்து நீக்க முடியுமா?

ஜனநாயக கட்சி நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்தினாலும் 4 ஆண்டு பதவிக்காலம் முடியும் வரை ட்ரம்ப்தான் ஆட்சியில் இருப்பார்.

அவர் மீது தேச துரோக வழக்கு, ஊழல் வழக்கு போன்ற தீவிரமான வழக்குகளைத் தொடுத்து விசாரணைக்கு உத்தரவிட ஹவுஸ் ஆஃப் ரெப்ரெசென்டேடிவ்ஸ் சபையால் முடியும்.

அப்படியான குற்றச்சாட்டுகளை செனேட் விசாரிக்கும். செனட்டில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் அதாவது 67 செனட்டர்கள் அதிபருக்கு எதிராக வாக்களித்தால் பதவியில் இருந்து இறக்க முடியும். இந்த நடவடிக்கையை இம்பீச்மெண்ட் என்று பெயர்.

இதற்கு முன்னர் ட்ரம்ப் மீது இரண்டு முறை இம்பீச்மெண்ட் கொண்டுவரப் பட்டிருக்கிறது. ஆனால் செனட்டில் 3ல் இரண்டு பேர் அவருக்கு எதிராக வாக்களிக்கவில்லை.

இப்போதும் ஜனநாய கட்சியிடம் உள்ள பெரும்பான்மை அதற்கு போதுமானது அல்ல. ஒருவேலை இம்பீச்மெண்ட் கொண்டுவரப்பட்டு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட்டர்கள் சிலரும் ட்ரம்ப்புக்கு எதிராக வாக்களித்தால் பதவியில் இருந்து நீக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவு!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.