பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, எல்லையில் பதற்றம் நிலவுகிறது. மேலும் நேற்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர், பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்கள் தேடிக்கண்டுபிடித்து பழிவாங்கப்படுவார்கள் எனக்கூறியுள்ளார்.
மேலும் நாட்டின் முப்படைகளும் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் போர் மூண்டால் எந்த மாதிரியான சூழல் உருவாகும் இந்தியா- பாகிஸ்தானை ஆகிய இரு நாடுகளின் ராணுவ வலிமை மற்றும் வல்லரசு நாடுகளின் ஆய்வுக்குறித்து இந்தப்பதிவில் காண்போம்.
இந்தியாவும் பாகிஸ்தானும் தங்கள் ராணுவங்களிலும், ஆயுத உற்பத்தியில் அதிகம் செலவழிகின்றன என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பல தசபதங்களாக தொடரும் பிராந்திய பிரச்சனையும், எல்லை சார்ந்த பதற்றமும் இந்த தீவிர ராணுவ செயல்பாட்டுக்கு காரணமாக அமைந்துள்ளன.
“Global Firepower Index’ என்ற நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி இந்தியா உலகிலேயே நான்காவது மிகப்பெரிய மற்றும் வலிமையான ராணுவப்படையை கொண்டுள்ளது. அதே நிறுவனத்தின் தரவரிசை பட்டியல்படி பார்த்தல் பாகிஸ்தான் 12 ஆவது இடத்தில் உள்ளது. மேலும் கடந்த 2024 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 73.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள பணத்தை ராணுவ மேம்பாட்டுக்காக இந்தியா செலவிட்டுள்ளது.
மனித வளம்
மேலும் மனித வளத்தில் இந்தியா கணிசமான வளத்தை கொண்டுள்ளது. இந்தியாவில் 662 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர், ஆனால் பாகிஸ்தானில் உள்ள மக்களின் எண்ணிக்கை 108 மில்லியனாக உள்ளது.
இந்திய ராணுவத்தில் தற்போது 1.45 மில்லியன் ராணுவ வீரர்கள் உள்ளனர், பாகிஸ்தானில் 6,54,000 பேர் உள்ளனர்,
இந்தியா பாகிஸ்தானை விட 801,550 அதிகளவிலான எண்ணிக்கை ஆகும். இதோடு சேர்த்து இந்தியா 1.15 மில்லியன் வீரர்களைக் கொண்ட பெரிய ரிசர்வ் படையை பராமரித்து வருகிறது. இதை வைத்து ஒப்பீட்டு அளவில் பார்க்கும்போது இந்தியாவின் படைபலம் பாகிஸ்தானை விட கணிசமான அளவு அதிகமாகும்.
வான் படை:
இந்தியா உலக அளவில் 4 ஆவது பெரிய விமானப் படையை கொண்டுள்ளது. இந்தியா 2,229 விமானங்களையும், 899 ஹெலிகாப்டர்கள், (அவற்றில் 80 பிரத்யேக தாக்குதல் ஹெலிகாப்டர்கள்) , 513 போர் விமானங்களையும் கொண்டு வான் பரப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது.
பாகிஸ்தான் வான் படை 1399 விமானங்களையும், 90 தாக்குதல் விமானங்களையும், 373 ஹெலிகாப்டர்கள் மற்றும் 57 தாக்குதல் ஹெலிகாப்டர்களையும் கொண்டுள்ளது.
காலாட் படை
தரப்படையை பொறுத்த வரையில் இந்தியா 4,201 டாங்கிகளையம் பாகிஸ்தானின் 2,627 டாங்கிகளையும் கொண்டுள்ளது. இது 1,574 டாங்கிகளை விட அதிகமாகும். ஆனால் பாகிஸ்தானின் இயக்கப்படும் பீரங்கி எண்ணிக்கையானது 662 யூனிட்கள்ஆகும். ஆனால் இந்திய 552 யூனிட்டுகளை மட்டுமே கொண்டிருக்கிறது
கூடுதலாக, இந்தியா 3,975 யூனிட் இழுவை பீரங்கிகளையும் பாகிஸ்தான் 2,629 யூனிட் இழுவை பீரங்கிகளையும் கொண்டுள்ளது. இந்தியாவின் 264 மொபைல் ராக்கெட் அமைப்புகள் பாகிஸ்தானின் 600 யூனிட்களுடன் ஒப்பிடும்போது சிறிய எண்ணிக்கையாகும், மொபைல் பீரங்கிகளில் இந்தியா பின்தங்கியுள்ளது.
இந்தியாவில் 4,201 டாங்கிகளும், பாகிஸ்தான் 2,627 டாங்கிகளும் வைத்துள்ளன.
இந்தியா பாகிஸ்தான் இடையேயான தரைப்படை பலம் ஏறத்தாழ சமமாகவே உள்ளது.
கடற்படை;
293 கப்பல்களைக் கொண்ட கடற்படை இந்திய பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்தியது என்றே சொல்ல வேண்டும். பாகிஸ்தானிடம் 121 கப்பல்கள் மட்டுமே உள்ளன. மேலும் இந்தியா இரண்டு விமானம் தாங்கிக் கப்பல்களை இயக்குகிறது, ஆனால் பாகிஸ்தானிடம் விமானம் தங்கிய கப்பல்கள் ஏதும் இல்லை. இந்தியாவிடம் உள்ள 18 நீர்மூழ்கிக் கப்பல்கள் 14 போர்க்கப்பல்கள்,18 கொர்வெட்டுகள் மற்றும் 135 ரோந்து கப்பல்கள் எண்ணிக்கையிலும் தொழில்நுட்ப நுட்பத்திலும் பாகிஸ்தானின் விட அதிகம்.
ஆனால் போர் என்ற ஒன்று மூண்டால் அண்டை நாடுகளின் உதவியை பெறும்போது இந்த எண்ணிக்கையிலும் பல மதிப்பீட்டிலும் மாறுதல்கள் ஏற்படலாம்..
வல்லரசு நாடுகள் என்று சொல்லப்படுகிற அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் ஆகிய நாடுகள் யாருக்கு ஆதரவு அளிக்கின்றனர் என்பது இதில் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது.
தாக்குதலுக்கு பிறகு பல முக்கிய நாடுகள் இந்தியாவை தொடர்புகொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளன.இந்த தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபரான ட்ரம்ப் பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு பேசினார், மேலும்
கொடூரமான தாக்குதலுக்கு" காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்த இந்தியாவுக்கு முழு ஆதரவையும் தருவோம் எனக்கூறியிருந்தார்.
மேலும் அமெரிக்க அதிபர் புதின் “இந்த கொடூர குற்றத்தை நியப்படுத்த முடியாது” எனக்கூறியுள்ளார்
பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டமர் “இது மிகவும் மோசமான தாக்குதல் இதில் பாதிக்கப்பட்ட அனைவரோடும், இந்திய மக்களோடும் என் நினைவுகள் இருக்கும்” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சூழலை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், இந்த போக்கு கவலையளிப்பதாகவும் ஐநா தெரிவிக்கிறது.
இந்த தாக்குதலுக்கு இந்தியா எப்படி பதிலடி கொடுக்கப்போகிறது அதை, பாகிஸ்தான் எப்படி சமாளிக்கும் என்ற கேள்விக்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்