அமெரிக்கா vs ஈரான்  
உலகம்

“அமெரிக்க வீரரை கொன்றால் ரூ.28 லட்சம் பரிசு” - ஈரான் ராணுவ தளபதியின் அதிர்ச்சி அறிவிப்பு!

ஒரு அமெரிக்க வீரரை கொல்வது பெண்ணாக இருந்தால் இரு மடங்கு சன்மானம் அதாவது 60000 டாலர்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மாலை முரசு செய்தி குழு

அமெரிக்கா ஈரான் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் எதுவும் பலனளிக்காத சூழலில் யுத்தம் புதிய உச்சங்களை எட்டி வருக்கிறது.

கடந்த வாரம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஹோர்மூஸ் நீரிணை (Strait of Hormuz) அமெரிக்காவின் பகுதியாக சேர்க்கப்படும் என அறிவித்தார்.

தற்போது ஈரான் ராணுவத் தளபதி அமீர் ஹடாமி, ஒரு அமெரிக்க ராணுவ வீரரை கொன்றாலோ அல்லது பிடித்துக் கொடுத்தாலோ 30,000 அமெரிக்க டாலர்கள் (இந்தியா மதிப்பில் சுமார் 28 லட்சம் ரூபாய்) பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருப்பது மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது.

மேலும் இந்த காரியத்தை பெண்கள் செய்தால் இரு மடங்கு சன்மானம் அதாவது 60000 டாலர்கள் வழங்கப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஈரான் தளபதி அமீர் ஹாடாமி

இந்த அறிக்கையை வெளியிட பொதுமக்களின் கோரிக்கையே காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.

கிட்டத்தட்ட 6 மாதங்களாக ஈரான் போரினை எதிர்கொண்டு வருகிறது. இதனால் அந்த நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்ததுடன் அன்றாட தேவைகளுக்கே பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியிருக்கின்றனர்.

இந்த நேரத்தில் அமீர் ஹடாமியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுமக்கள் ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட கோரிக்கைகள் வைக்கப்பட்டதால் இந்த திட்டம் உருவாக்கப்பட்டதாக அவர் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அறிவிப்புடன், அமெரிக்க வீரரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட ஆயுதம் இரட்டை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளப்படும் என்றும், அது புதிதாக அமையாவிருக்கும் அருங்காட்சியாகத்தில் வைக்கப்படும் என்றும், அதற்கு மாற்றாக புதிய ஆயுதம் வழங்கப்படும் என்றும் அவர் பேசியிருக்கிறார்.

மேலும், அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கிலிருந்து வெளியேற வேண்டும் என்ற ஈரானின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய அவர், பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதிகளுக்குள் அமெரிக்கப் படைகள் நுழைய இனி அனுமதிக்கப்படாது என்று எச்சரித்துள்ளார்.

Donald Trump

ஆனால், அமெரிக்கப் படைகள் ஈரான் மண்ணில் தரைப்படையாக நிறுத்தப்பட்டிருப்பதாகத் தகவல் இல்லாத நிலையில், இந்த அறிவிப்பு நடைமுறைக்கு சாத்தியமற்றது. இதுகுறித்து அமீர் ஹடாமி எதுவும் தெரிவிக்கவில்லை.

ஈரானின் இந்த அறிவிப்பு இராணுவ வெற்றியையோ அல்லது தாக்குதலை விரிவுபடுத்துவது தொடர்பானதாகவோ இல்லாமல் அமெரிக்காவை சீண்டுவதும், சொந்த மக்களை தூண்டுவதுமாக மட்டுமே இருக்கிறது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

ஈரானிய தலைவர்கள் தொடர்ந்து ட்ரம்ப்பை சீண்டும் வகையில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசியப் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் எப்ராஹிம் அஜிசி, "அமெரிக்க அதிபர், ஹார்முஸ் நீர்ச்சந்தி குறித்து ஓயாமல் வாய் சவடால்கள் விடுப்பதை விட்டுவிட்டு, உணவு டிரக்கிற்குள் ஓடி ஒளிந்துகொள்ளும் நிலைமை வராதபடி தனக்கான பாதுகாப்பை உறுதியாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்." என சமீபத்தில் கூறியிருக்கிறார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்