மெட்டா நிறுவனம் விளம்பரங்களை, தவிர வேறு தொழில்நுட்ப வழியிலும் பணம் சம்பாதிக்க முடியும் என்பதை மீண்டும் நிரூபிக்க ஒரு முயற்சியை தொடங்கவுள்ளது. இந்த வாரம் வெளியான மெட்டா நிறுவனத்தின் அறிவிப்பின்படி, அந்நிறுவனம் பிரீமியம் சந்தா திட்டம் (Subscription) என்ற அம்சத்தை கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு செயற்கை நுண்ணறிவு சிறந்த முடிவுகளை தரும் என்று தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் நம்புவதாக தெரிவித்துள்ளார்.
Open AI நிறுவனத்தின் ChatGPT-ஐப் போன்ற Meta AI நிறுவனமும் இந்த சாந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. மெட்டா நிறுவனம் செயலி மற்றும் இணையதளத்திற்கு இரண்டு சந்தா சேவைகளை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சோதிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. சிங்கப்பூர், குவாத்தமாலா மற்றும் பொலிவியாவில் முதலில் கிடைக்கவிருக்கும் இந்தக் கட்டண சேவைகள், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பிற்கான பிரீமியம் சந்தா திட்டங்களின் தொடக்க சோதனையாக இருக்கும் என தெரிகிறது.
2004-ம் ஆண்டு கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு, பேஸ்புக் மார்க் ஸக்கர்பெர்க் அவர்களால் தொடங்கப்பட்டது. முதலில் டிஜிட்டல் விளம்பரங்களை விற்கத் தொடங்கியது, பின்னர் பயனர்களின் எண்ணிக்கையை மையமாக கொண்டு இயங்கியது. தற்போது விளம்பரமே அதன் பொருளாதார மூலமாக இருந்து வருகிறது. கடந்த மாதம் வெளியான வருவாய் அறிக்கையில், மெட்டா நிறுவனம் தனது முதல் காலாண்டு வருவாயான $56.3 பில்லியனில் கிட்டத்தட்ட 98% விளம்பரங்கள் மூலம் கிடைத்ததாகக் கூறியுள்ளது. இது தொழில்நுட்பத் துறையிலேயே மிக உயர்ந்த லாப வரம்புகளைக் கொண்டதாகும். மேலும், கூகுளுடன் இணைந்து மெட்டா நிறுவனம் அமெரிக்காவில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
2021-ஆம் ஆண்டிற்குப் பிறகு எந்தவொரு காலாண்டிலும் இல்லாத அளவிற்கு மெட்டா தனது அதிவேக வளர்ச்சி விகிதத்தை பதிவு செய்துள்ளது. இந்த வளர்ச்சி ஆன்லைன் மார்க்கெட்டிங் முன்னெப்போதையும் இல்லாததை விட வலுவாக இருப்பதை காட்டுகிறது. ஆனால், செயற்கை நுண்ணறிவின் (AI) அசுர வளர்ச்சியால், பயனாளர்கள் திரை நேரத்தைச் செலவிடுவதை நிறுத்தும்போது என்ன நடக்கும் என்பது குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் விளம்பரங்களை தவிர்த்து வேறு ஏதாவது வழியில் பயனாளர்கள் பணம் செலவழிக்குமாறு நிறுவனம் இயங்குகிறதா என்ற கேள்விக்கு பதில் பொதுவாக ‘இல்லை’ என்றே இருந்துள்ளது. ஆனால் அதற்கு முன் அந்நிறுவனத்தின் ரியாலிட்டி லேப்ஸ் பிரிவு, 2020-ன் பிற்பகுதியிலிருந்து 80 பில்லியன் டாலருக்கும் அதிகமான இயக்க நஷ்டங்களை சந்தித்துள்ளது. இது போன்ற கடுமையான சவால்கள் இருந்தபோதிலும், மெட்டா நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத் துறையில் வருவாய்க்கான ஒரு புதிய வழியைக் கண்டறியும் என்று சில ஆய்வாளர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். இந்த வாரம் அறிவிக்கப்பட்ட மெட்டா AI சந்தாக்கள், குறிப்பிட்ட அம்சங்கள் மற்றும் திறன்களைப் பொறுத்து, மாதத்திற்கு $7.99 மற்றும் $19.99 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்தச் செய்தி வெளியான பிறகு மட்டுமே புதன்கிழமை அன்று அதன் பங்கு விலை கிட்டத்தட்ட 4% உயர்ந்தது. இது இந்த திட்டம் வருவதற்கான மற்றும் நிறுவனத்தின் மார்க்கெட் விலை அதிகரிப்பதற்கான சாத்திய கூறுகளை குறிப்பிடுகிறது.
தற்போதைய அறிவிப்பின்படி 2026-ல் மெட்டா நிறுவனம் செயற்கை நுண்ணறிவுத் துறைகளில் தனது முதன்மைச் செயலிகளான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கிற்கு பிரீமியம் சந்தாக்களை அறிமுகப்படுத்துகிறது. தற்போது முன்னெப்போதும் இல்லாத உள்கட்டமைப்பு செலவுகளை எதிர்கொள்ளும் ஒரு நிறுவனமாக விளங்குகிறது. நீண்டகாலப் பயனாளர்களை கொண்ட நிறுவனமான மெட்டா இன்றைய தொழில்நுட்ப உலகில் 'இலவசம்' என்ற கருத்து அதன் அசல் அர்த்தத்தை படிப்படியாக இழந்து வருகிறது என்பதை குறிக்கிறது. காரணம், ஆரம்ப நாட்களில் வாட்ஸ்அப் முதல் வருடப் பயன்பாட்டிற்குப் பிறகு ஆண்டுக்கு 1 டாலர் கட்டணம் வசூலித்தது. ஆனால் 2016-ல், மெட்டா அந்த அடையாளக் கட்டணத்தையும் ரத்து செய்து, வணிக Application Programming Interface (APIs) மூலம் மட்டுமே வருமானம் ஈட்டப்படும் என்று உறுதி அளித்திருந்தது. மேலும் இந்தச் செயலி என்றென்றும் இலவசமாகவே இருக்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தற்போது வெளியாகியுள்ள இந்த சந்தா கடந்தகால வாக்குறுதிகளை கேள்விக்குறியாகியுள்ளது.
அந்த சப்ஸ்கிரிபிஷன் பிளானில் மாதத்திற்கு $3.99 செலுத்தி இன்ஸ்டாகிராம் பிளஸ், மாதத்திற்கு $3.99 செலுத்தி ஃபேஸ்புக் பிளஸ் அல்லது மாதத்திற்கு $2.99 செலுத்தி வாட்ஸ்அப் பிளஸ் அடங்கும். சந்தா செலுத்தும் பயனர்கள், சுயவிவரத் தனிப்பயனாக்கம் (Private account), ஸ்டோரி இன்சைட்ஸ் மற்றும் சூப்பர் ரியாக்ஷன்ஸ் உள்ளிட்ட கூடுதல் அம்சங்களுக்கான ஆக்டிவேஷன்களை பெறுவார்கள். இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஸ்டோரியை, இந்த இன்ஸ்டா பிளலில் மேலும் 24 மணி நேரம் வரை கிடைக்கச் செய்வது மற்றும் ப்ரொபைல் காண்பிக்காமல் மற்றொரு பயனரின் ஸ்டோரியை பார்ப்பது போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கும். பேஸ்புக் பிளஸ், பயனர்கள் ஸ்டோரிகளை 24 மணிநேரத்திற்குப் பதிலாக 48 மணி நேரம் வரை கிடைக்கச் செய்ய அனுமதிக்கும். வாட்ஸ்அப் பிளஸ், கூடுதலாக 20 chat-களை PIN செய்து கொள்வது போன்ற அம்சங்களை பெற்றிருக்கும். இந்தப் புதிய சோதனைகள் “மெட்டா ஒன்” என்ற பெயரில் நடத்தப்படும், இதில் நிறுவனத்தின் அனைத்து பிரீமியம் சந்தாக்களும் அடங்கும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்