3150 வைரங்கள் பாதித்த கிரீடம், திடீரென விலகிய 17 நாடுகள்.. என்ன நடக்கிறது மிஸ் யூனிவர்ஸ் 2026ல்? இந்தியாவின் அழகி யார்? கசியா லிஸ் மெஜோ (Kaziah Liz Mejo)
உலகம்

3150 வைரங்கள் பாதித்த கிரீடம், திடீரென விலகிய 17 நாடுகள்.. என்ன நடக்கிறது மிஸ் யூனிவர்ஸ் 2026ல்? இந்தியாவின் அழகி யார்?

ஒவ்வொரு ஆண்டும் 100 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டியிலிருந்து 17 நாடுகள் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

Antony Ajay R

மிஸ் யுனிவெர்ஸ் 2026 (Miss Universe 2026) போட்டி நடைபெற்று வருகிறது. திடீரென 15 நாடுகள் இந்தப் போட்டியிலிருந்து விலகியதாகக் தகவல் வெளியாகியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த குழப்பங்களுக்கு மத்தியிலும், நவம்பர் 12 அன்று பியூட்டோ ரிகோவில் உள்ள பிளாசா லாஸ் அமெரிக்காஸில் (Plaza Las Américas) நடைபெற்ற 'தி மிஸ் யுனிவெர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ்' நிகழ்ச்சியில், போட்டியாளர்கள், முன்னாள் அழகிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில், போட்டி அமைப்பு அதன் புதிய கிரீடத்தை அறிமுகப்படுத்தியது.

புதிய கிரீடம்: "தி ரேடியேன்ஸ் ஆஃப் அன் எடர்னல் லெகசி" (The Radiance of an Eternal Legacy)

பாரிஸைச் சேர்ந்த உயர் நகைத் தயாரிப்பு நிறுவனமான 'மெசன் டி’ஓர்' (Maison d’OR)-டன் இணைந்து வெனிசுலா வடிவமைப்பாளர் ஜார்ஜ் விட்டில்ஸ் (George Wittels) இதை வடிவமைத்து உருவாக்கியுள்ளார்.

சர்வதேச அழகிப் போட்டியின் 75வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலும், "மிஸ் யுனிவெர்ஸின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைக் கொண்டாடும் வகையிலும்" உருவாக்கப்பட்ட இந்த வெண்கல கிரீடத்தில் 3,150 வைரங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

புதிய கிரீடம்: "தி ரேடியேன்ஸ் ஆஃப் அன் எடர்னல் லெகசி" (The Radiance of an Eternal Legacy)


கடைசி கிரீடம்: "லைட் ஆஃப் இன்ஃபினிட்டி" (Light of Infinity)

2024ல், 73வது மிஸ் யுனிவெர்ஸ் அழகிப் போட்டியை முன்னிட்டு 'லுமியர் டி எஃப்ளினி' (Lumière de l’Infini) அல்லது 'லைட் ஆஃப் இன்ஃபினிட்டி' என்ற கிரீடம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பெண்கள் அதிகாரம் பெறுவதை கொண்டாடடும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கிரீடம், போட்டியின் அதிகாரப்பூர்வ நகை பங்குதாரரான ஜூவெல்மர் (Jewelmer) நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

மிஸ் யுனிவெர்ஸ் 2026, நவம்பர் 24 ஆம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் இருந்து பல போட்டியாளர்களும் தேசிய அமைப்புகளும் விலகியதாக அதிகாரப்பூர்வ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சிலர் விலக உரிமையாளர் தகராறுகள், உடல் மற்றும் மனநலப் போராட்டங்கள் காரணமாக சொல்லப்படுகின்றன. அமெரிக்காவின் கடுமையான விசா கட்டுவப்பாடுகளும் காரணமாக சொல்லப்படுகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் 100 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்கும் இந்தப் போட்டியிலிருந்து 17 நாடுகள் விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.


மிஸ் யுனிவெர்ஸ் ஆஸ்திரியா விக்டோரியா எமர்சன் "மன மற்றும் உடல்நல" காரணங்களைக் கூறி விலகியதாகவும், மிஸ் யுனிவெர்ஸ் பல்கேரியா அனா-மரியா கார் விபத்தில் சிக்கியதால் விலகியதாகவும் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளம் தெரிவிக்கிறது.

மறுபுறம், மிஸ் யுனிவெர்ஸ் மொராக்கோ "திடீர் நிதி மற்றும் பொருளாதாரக் கட்டுப்பாடுகள்" காரணமாக விலகியுள்ளார், அதே நேரத்தில் மிஸ் யுனிவெர்ஸ் மால்தீப்ஸ் அமினாத் யுயின் முகமது விளக்கியதற்கான காரணங்களை வெளியில் கூறவில்லை.
தாய்லாந்து, வியட்நாம், லாவோஸ், சிங்கப்பூர், இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய ஆறு தென்கிழக்காசிய நாடுகள், உரிமையியல் ஒப்பந்தங்கள் மற்றும் உரிம உரிமைகள் தொடர்பான தகராறு காரணமாக இந்த முறை பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளனர்.

நேபாளம், அங்கோலா, ஜாம்பியா, காங்கோ குடியரசு மற்றும் செயிண்ட் மார்ட்டின் போன்ற நாடுகளின் பங்கேற்பில் விசா/பயணக் கட்டுப்பாடுகளும் முட்டக்கட்டை போட்டுள்ளன, அதே நேரத்தில் ஜிம்பாப்வையின் பங்கேற்பு இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்த போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்கும் கசியா லிஸ் மெஜோ (Kaziah Liz Mejo) மீது அனைவரின் கவனமும் குவிந்துள்ளது. சட்ட மாணவியான கசியா லிஸ் மெஜோ, போட்டியில் இதுவரை வந்திருப்பது தான் நீண்டகாலமாகச் சுமந்து வந்த ஒரு கனவு சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

மிஸ் யூனிவர்ஸ் 2027, 76வது போட்டியை நடத்தும் நாடாக வியட்நாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.