``வாக்கு திருடனே அரியணையில் இருந்து இறங்கு" இத்தாலி அரசியல் தலைவரின் பேச்சால் கொந்தளித்த பாஜக.. 'anti-indian' விமர்சனம்!

ஜியாகோமோ ஃபிலிபெக், "காங்கிரஸ் கட்சி நவீன இந்தியாவின் ஜனநாயக அடித்தளத்தை அமைத்தது. இன்று, அது அவற்றைப் பாதுகாக்கப் போராடுகிறது, மேலும் உலகெங்கிலும் உள்ள முற்போக்குவாதிகள் உங்களுக்குத் துணை நிற்கிறார்கள்." எனப் பேசியிருந்தார்.

Published on: 
Updated on: 
2 min read

காங்கிரஸ் முன்னெடுப்பில் ஹைதராபாத்தில் நடந்த பாரத் 2026 மாநாட்டிற்கு இத்தாலியின் ஐரோப்பிய சோசலிஸ்டுகள் கட்சியின் (PES) பொதுச் செயலாளர் ஜியாகோமோ ஃபிலிபெக் பேச்சு தெலங்கானா மாநிலத்தில் அரசியல் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தெலங்கானாவில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் நவம்பர் 13, 14 தேதிகளில் நடத்திய அந்த மாநாட்டில், "வாக்கு திருடனே.. அரியணையில் இருந்து இறங்கு" என அவர் பேசியது பாரதிய ஜனதா கட்சியினரை கோபப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி பாஜகவின் SIR நடவடிக்கைகள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் முறைகேடுகளை விமர்சிக்க இந்த கோஷத்தை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஜியாகோமோ ஃபிலிபெக், "காங்கிரஸ் கட்சி நவீன இந்தியாவின் ஜனநாயக அடித்தளத்தை அமைத்தது. இன்று, அது அவற்றைப் பாதுகாக்கப் போராடுகிறது, மேலும் உலகெங்கிலும் உள்ள முற்போக்குவாதிகள் உங்களுக்குத் துணை நிற்கிறார்கள்." எனப் பேசியிருந்தார்.

காங்கிரஸின் நடவடிக்கை தேசத்துக்கு எதிரானது (anti-indian) என பாஜக விசாரித்து வருகிறது.

பாஜக கடும் எதிர்ப்பு

தெலங்கானா பாஜக தலைவர் என். ராம்சந்தர் ராவ் மற்றும் அக்கட்சியின் மேலும் ஏழு தலைவர்கள், வெளிநாட்டினர் மண்டலப் பதிவு அலுவலகம் (FRRO), ஹைதராபாத் காவல் ஆணையர் மற்றும் டிஜிபி ஆகியோரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளனர். “எந்தவொரு வெளிநாட்டு அரசியல் பிரமுகருக்கும் இந்தியச் சட்டத்தை மீறுவதற்குச் சலுகை அளிக்கப்படுவதில்லை” என்று அதில் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து தனியார் செய்தி தளத்தில் பேசிய என். ராம்சந்தர் ராவ், “இந்தக் கருத்துக்கள், உலகம் பெருமை கொள்ளும் இந்தியாவிற்கும் அதன் ஜனநாயகத்திற்கும் இழைக்கப்பட்ட அவமானம். ஒரு வெளிநாட்டவர் எப்படி இந்தியாவின் உள் விவகாரங்களில் தலையிட முடியும்? ராகுல் காந்தி சில பொய்க் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார், மேலும் சில வெளிநாட்டவர்கள் இந்தக் கூக்குரலில் இணைந்து கொள்கிறார்கள். அவர்கள் நமது பிரதமரை அவமதிக்கும்போது காந்தி சிரிப்பதைப் பார்ப்பது வெட்கக்கேடானது.” எனக் கூறியுள்ளார்.

Giacomo Filibeck – Rahul gandhi
Giacomo Filibeck – Rahul gandhi

இந்தியாவில் மட்டுமல்ல இத்தாலியில் இருந்தும் ஜியாகோமோ ஃபிலிபெக்கின் பேச்சுக்கு விமர்சனம் எழுந்துள்ளது.

பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் கூட்டாளியும், இத்தாலியின் மிதவாத-வலதுசாரிக் கட்சியுமான 'ஃபோர்ஸா இத்தாலியா'வின் மூத்த தலைவர் டெபோரா பெர்கமினி.

இவர், இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களுக்கு ஆதரவாக, உள்நாட்டு அரசியல் விவகாரங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த ஐரோப்பிய சோசலிசத் தலைவர் ஜியாகோமோ ஃபிலிபெக்கை விமர்சித்துள்ளார்.

``வாக்கு திருடனே அரியணையில் இருந்து இறங்கு" இத்தாலி அரசியல் தலைவரின் பேச்சால் கொந்தளித்த பாஜக.. 'anti-indian' விமர்சனம்!
4 மாநிலங்களில் MLC தேர்தல்.. ஒரு தொகுதியை கூட வெல்லாத காங்கிரஸ்.. பகடி செய்த PM மோடி! ஆனால் சொந்த தொகுதி வாரணாசியில் வந்த பின்னடைவு!

யார் இந்த ஜியாகோமோ ஃபிலிபெக்?

ஜியாகோமோ ஃபிலிபெக் (48) 1999ம் ஆண்டு முதல் இத்தாலியின் மாணவர் இயக்கங்களில் செயல்பட்டு வந்த அரசியல்வாதி ஆவார். OBESU (ஐரோப்பியப் பள்ளி மாணவர் சங்கங்களின் அமைப்புக் குழு) தலைமை பொறுப்பில் இருந்துள்ளார்.

2002 முதல் 2009 வரை, அவர் ஐரோப்பிய இளைஞர் மன்றத்திற்கும் (ஐரோப்பிய நிறுவனங்களின் இளைஞர் கொள்கைகள் குறித்த கலந்தாலோசனைகளுக்கான இளைஞர் அமைப்புகளின் தளம்) மற்றும் இளம் ஐரோப்பிய சோசலிஸ்டுகள் (YES) அமைப்பிற்கும் தலைவராக இருந்தார்; அதன் சார்பாக அவர் PES தலைமைத்துவக் குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.

சமீபத்திய ஆண்டுகளில் ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய கவுன்சில், ஐ.நா. மற்றும் உலக வங்கி ஆகியவற்றில் நடைபெற்ற மிக முக்கியமான கலந்தாய்வு செயல்முறைகளில் அவர் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானா காவல்துறை பாஜகவிடம் புகாரை பெற்றுக்கொண்டாலும் FIR எதுவும் பதியப்படவில்லை.

``வாக்கு திருடனே அரியணையில் இருந்து இறங்கு" இத்தாலி அரசியல் தலைவரின் பேச்சால் கொந்தளித்த பாஜக.. 'anti-indian' விமர்சனம்!
``அவள் எங்களை எதிரியாக பார்த்தாள்.." மனேகா காந்தி பாஜகவில் இருப்பது ஏன்?.. உள்வீட்டு பகையை வெளிப்படையாக பேசிய சோனியா காந்தி!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.