என்விடியா நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜென்சன் ஹுவாங், அவரிடம் பணியாற்றிய மற்றொரு பெண்ணுடனும் திருமணத்தை மீறிய உறவில் இருந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தில் அதிக முதலீடு செய்த ஓப்பன் ஏஐ, அந்த்ரோபிக், மெட்டா, கூகுள் நிறுவனங்கள் எல்லாம் நட்டத்தை சந்தித்துக்கொண்டிருக்க, அவற்றுக்கு சிப் விற்ற என்விடியா மட்டும் அதிகபட்ச லாபம் ஈட்டியது. இந்த சாதனைக்கு காரணமாக இருந்தவர் முன்னாள் சிஇஓ ஜென்சன் ஹுவாங்.
சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேல் அந்த பதவியில் இருக்கும் அவர், என்விடியாவின் சந்தை மதிப்பை உயர்த்திய முக்கிய தூணாக திகழ்ந்தார். இப்போது அவரது திருமணம் மீறிய உறவுகள் அவர் பதவி விலக வழிவகை செய்துள்ளன.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஜென்சன் ஹுவாங், மற்றொரு ஊழியருடன் ரகசிய உறவில் இருந்துள்ளார். அவர் எந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்பது வெளிப்படையாக கூறப்படவில்லை. ஏற்கெனவே இரண்டு பெண்களுடனான திருமணத்திற்கு மீறிய உறவுகளால் பதவியை இழந்த ஹுவாங்கிற்கு, இது மூன்றாவது அடியாக விழுந்துள்ளது.
சீன உளவுத்துறையுடன் தொடர்புடையவர் என அமெரிக்க உளவுத்துறை சந்தேகிக்கும் ஆலிஸ் ஹுவாங் என்ற பெண்ணுடன் இவருக்கு இருந்த தொடர்புதான் இந்த விவகாரத்தைத் தீவிரமாக்கியது. மெகாஸ்பீட்' (Megaspeed) கிளவுட் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியான இவருடன் ஹுவாங்கிற்கு இருந்த நெருங்கிய தொடர்பு குறித்து விசாரணையை எதிர்கொண்டு வருகிறார்.
இந்த விவகாரம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து என்விடியா நிறுவனத்தின் சுகாதாரப் பிரிவு துணைத் தலைவராகப் பணியாற்றிய கிம்பர்லியுடனும் ஹுவாங்கிற்கு உறவு இருந்ததாகத் தகவல்கள் கசிந்தன.
தற்போது நிறுவனத்தின் மற்றொரு பெண் ஊழியருடனும் ஹுவாங் நெருக்கமாக இருந்ததாக இரண்டு ஆதாரங்கள் வெளியாகியிருக்கின்றன.
என்விடியாவின் நிதி அதிகாரி கோலெட் கிரெஸ் (Colette Kress) இடைக்கால சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டுள்ளார். புதிய சிஇஓ பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. போட்டியில் நீண்டகாலப் பொறியாளர் இயன் பக் (Ian Buck) பெயரும் அடிபடுகிறது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜென்சன் ஹுவாங்கிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார். "நாட்டிற்காக ஹுவாங் அற்புதமான பணிகளைச் செய்துள்ளார்; ஆலிஸ் ஹுவாங்கிற்குச் சீன உளவுத்துறையுடன் தொடர்பு இருப்பது தனக்குத் தெரியாது என்று ஹுவாங் என்னிடம் கூறினார்" என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நெருக்கடி நேரத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் சி.இ.ஓ டிம் குக், என்விடியாவுக்குத் தலைமை ஏற்கலாம் என்றும் ட்ரம்ப் யோசனை தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் தடைகளை மீறி, மூன்றாம் நாடுகள் வழியாகச் சீனாவிற்கு அதிநவீன AI சிப்களைக் கடத்த 'மெகாஸ்பீட்' நிறுவனம் உதவியதா என அமெரிக்க நீதித்துறையும், சிங்கப்பூர் அரசும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த திட்டத்தை செயல்படுத்த ஆலிஸ் ஹுவாங் சீன உளவாளியாகச் செயல்பட்டாரா என்ற கோணத்தில் என்விடியா நிறுவனமும் வெளிப்புற சட்ட நிபுணர்களைக் கொண்டு உள்விசாரணை நடத்தி வருகிறது.
இவர் உளவாளிதானா என அமெரிக்க உளவுத்துறை இறுதி முடிவை எடுக்கவில்லை. சீனாவும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
பதவியை ராஜினாமா செய்தாலும் ஹுவாங்கிற்குப் பிரச்சினைகள் ஓயவில்லை. அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவுக் குழு முன்பு ஆஜராகி விளக்கமளிக்க ஹுவாங் சம்மதித்துள்ளார்.
சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் ஆலிஸ் ஹுவாங் விவகாரம் குறித்து அவரிடம் நேரடியாகக் கேள்விகள் எழுப்பப்பட உள்ளன. இதற்காக 'பால் வெயிஸ்' (Paul Weiss) என்ற பிரபல சட்ட நிறுவனத்தையும் ஹுவாங் நாடியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.