இந்தியா - பாகிஸ்தான் பிரச்சனை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது நேற்று பாகிஸ்தான் திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது, ஆனால் s- 400 வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அந்த தாக்குதலை முறியடித்தது.
இந்நிலையில் நேற்று இரவு முழுவதும் இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இருந்த பொதுமக்களுக்கு தூங்காத இரவாகவே கழிந்தது. இந்த போர் பதற்றத்தால் பாகிஸ்தானுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் பாகிஸ்தானின் அதிகாரப்பூர்வ பொருளாதார அமைச்சகத்தின் எக்ஸ் தள கணக்கில் “எதிரிகளின் தாக்குதலால் ஏற்பட்ட பெரும் இழப்புகளுக்கு பிறகு, பகிஸ்தான் மீளுவதற்கு சர்வதேச கூட்டாளிகளிடம் கூடுதல் கடனுக்காக வேண்டுகோள் விடுக்கிறது” இதில் உலக வங்கியையும் டேக் செய்துள்ளது.
இந்த நிலையில் தங்களின் எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகவும் அதில் குறிபிட்டுள்ள கடன் தொடர்பான பதிவு போலியானது என பாகிஸ்தான் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாஹல்காம் தாக்குதலுக்கு பிறகான பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடி குறித்து அண்மையில் உலகளாவிய பொருளாதார மதிப்பீட்டு நிறுவனம் மூடிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தற்போதைய நிலையை பார்த்தல் பாகிஸ்தானின் வெளிநாட்டு கடன் அழுத்தம் அதிகரிப்பதோடு, அதன் முன்னேற்றமும் பாதிக்கக்கூடும்” என்று தெரிவித்தது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்