உலகம்

நம்பிக்கை இழந்த சவுதியின் தலைநகரம்! முக்கிய எரிசக்தி தளத்தை தாக்கி பழிதீர்த்தது ஈரான்.. டிரம்ப்-ன் வார்னிங் என்ன?

"பெரும் சேதத்தை" ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஈரானிய பாதுகாப்பு மற்றும் இராணுவ அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு கத்தார் உத்தரவிட்டுள்ளது..

மாலை முரசு செய்தி குழு

மேற்கு ஆசியாவில் தொடரும் போரினால் ஈரான் பெரும் உயிர்மற்றும் பொருளாதார இழப்பிற்கு உள்ளான ஈரான் மீண்டும் கத்தார், சவூதி அரேபிய எரிசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு உள்ளன

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் ஈரானின் பதில் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது.  ரியாத், அரேபிய தீபகற்பத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரம், அந்நாட்டின் அரசியல், நிர்வாகம் மற்றும் நிதி மையமாகத் திகழ்கிறது. மேலும் ராஸ் லஃபானில் உள்ள தனது முக்கிய எரிவாயு நிலையத்திற்கு ஈரானிய ஏவுகணைகள் "பெரும் சேதத்தை" ஏற்படுத்தியதை தொடர்ந்து, ஈரானிய பாதுகாப்பு மற்றும் இராணுவ அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு கத்தார் உத்தரவிட்டுள்ளது. தலைநகர் ரியாத் மற்றும் நாட்டின் "கிழக்குப் பகுதிகள்" முழுவதும் 17 ஆளில்லா விமானங்களையும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்தியதாக சவூதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயல்களில் ஒன்றான ஈரானின் சவுத் பார்ஸ் எரிவாயு நிலையம் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த பதில் தாக்குதல் நடந்தாக தெரிகிறது. மேலும் நேற்று நள்ளிரவு லெபனான் தலைநகரான பெய்ரூடில் வான் வழி தாக்குதலை நடத்தியது. இது அங்குள்ள ஹிஸ்புல்லா எனும் அமைப்பை குறி வைத்த தாக்குதல். ஹிஸ்புல்லா லெபனானை தளமாகக் கொண்டு இயங்கும், ஈரானின் ஆதரவு பெற்ற, ஷியா முஸ்லிம் அரசியல் மற்றும் இராணுவ அமைப்பாகும். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, கத்தாரில் உள்ள ஒரு முக்கிய திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதி நிலையத்தை ஈரான் குறிவைத்துத் தாக்கியதில் "பெரும் சேதம்" ஏற்பட்டுள்ளது. இதனால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படும் எனவும் தெரிகிறது. முன்னதாக “கத்தார் மீது தாக்குதல் நடத்தினால், சவுத் பார்ஸ் எரிவாயு வயலைத் தகர்த்துவிடுவோம்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்திருந்தார். மேலும், ஈரானின் எரிசக்தி தளம் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தாது என்றும் அவர் கூறியிருந்தார். ஆனால் இஸ்ரேல் ‘சவுத் பார்ஸ்’ எரிவாயு தளத்தில் புதன்கிழமை தாக்குதல் நடத்தியுள்ளது.

தனது சவுத் பார்ஸ் எரிவாயு வயல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, வளைகுடாவில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய "எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு நிலையங்கள்" மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் அச்சுறுத்தியதை  அடுத்து, மத்திய கிழக்கு நாடுகள் மீதான தாக்குதல்கள் இரவு முழுவதும் தொடர்ந்தன.

இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பின், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் 'சவுத் பார்ஸ்' எரிவாயு வயல் மீது புதன்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து, ட்ரூத் சோஷியல் தளத்தில் ஒரு நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார். "மத்திய கிழக்கில் நடந்த நிகழ்வுகளால் ஏற்பட்ட ஆத்திரத்தில், இஸ்ரேல் இத்தகைய வன்முறையை நடத்தியுள்ளது" என்று டிரம்ப் பதிவிட்டிருக்கிறார் மேலும் அவர், "இந்தக் குறிப்பிட்ட தாக்குதலைப் பற்றி அமெரிக்காவிற்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை, மேலும் கத்தார் நாடு எந்த வகையிலும் இதில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை, இது நடக்கப்போகிறது என்பது பற்றியும் அறிந்திருக்கவில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனையடுத்து "ஈரான் மீண்டும் கத்தார் மீது தாக்குதல் நடத்தினால், ஈரான் இதற்கு முன் கண்டிராத அல்லது பார்த்திராத அளவு வலிமையுடனும் சக்தியுடனும் சவுத் பார்ஸ் எரிவாயு வயல் முழுவதையும் அமெரிக்கா பெருமளவில் தகர்க்கும்" என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானுக்கான நீண்டகாலப் பின்விளைவுகள் காரணமாக, "இந்த அளவிலான வன்முறைக்கும் அழிவுக்கும் நான் அங்கீகாரம் அளிக்க விரும்பவில்லை, ஆனால் கத்தாரின் LNG மீண்டும் தாக்கப்பட்டால், அவ்வாறு செய்ய நான் தயங்க மாட்டேன்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகம் அங்குள்ள இந்தியர்களுக்குப் பாதுகாப்பு ஆலோசனைகளை வழங்கியுள்ளது. ஈரான்-இஸ்ரேல் போர் சூழலில் அவசர உதவிக்குத் தூதரகத்தைத் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த போர் பதற்றதில் குறிவைத்து தாக்கப்படும் எண்ணெய் வள தளங்கள்  கச்சா எண்ணெய்  மற்றும் எரிவாயு தட்டு படு உலகளாவிய பிரச்னையாகியுள்ளது. அமெரிக்காவில் கச்ச எண்ணெய் 4% அதிகரித்துள்ளது மேலும் இங்கிலாந்தில் எரிவாயு விலை 25% மற்றும் எண்ணெய் 5% உயர்ந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.