அமெரிக்க அதிபர், டொனால்ட் டிரம்ப் கொண்டுவந்த வரி விதிப்பு திட்டமான "டாரிஃப் திட்டதிற்கு" எதிராக சிங்கப்பூர் பிரதமர் "லாரன்ஸ் வாங்" பேசி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது, அதில் அவர் என்ன பேசி இருக்கிறார் என தெரிந்து கொள்ளவோம்.
சிங்கப்பூர் மாதிரியான சின்ன திறந்த பொருளாதார நாடுகள், உலக மாற்றங்களால எப்படி பாதிக்கப்படுதுனு பார்க்கும்போது, இப்போதைய சூழல் நிறைய கேள்விகளை எழுப்புது. உலகம் ஒரு புது திசையில போயிட்டு இருக்கு, அதுவும் அமெரிக்காவோட சமீபத்திய அறிவிப்பு வந்த பிறகு, இது உலகளாவிய நிலைப்பாடுல, நில அதிர்வு மாதிரி ஒரு மாற்றத்தை காட்டுது.
விதிமுறைகளை அடிப்படையா வெச்சு நடந்த உலகமயமாக்கலும், சுதந்திர வர்த்தகமும் ஒரு முடிவுக்கு வந்த மாதிரி தெரியுது. இப்போ பல சகாப்தங்களா பாதுகாப்புவாதமும், ஆபத்து நிறைஞ்ச ஒரு புது காலகட்டத்துக்கு நாம அடியெடுத்து வைக்கிறோம். இது உலக சுதந்திர சந்தை, பொருளாதாரங்களுக்கு பெரிய சவாலா இருக்கப்போகுது.
முன்னாடி வர்த்தகத்துல, நாடுகள் ஒருத்தருக்கு ஒருத்தர் பயனடையிற மாதிரி, தெளிவான விதிகளும் நியமனங்களும், இருந்த பலதரப்பு வர்த்தக முறையை பயன்படுத்தினார்கள். உலக வர்த்தக அமைப்பு (WTO) இதை உருவாக்கி, உலகுக்கு ஒரு முன்னோடி இல்லாத ஸ்திரத்தன்மையையும் செழிப்பையும் கொண்டு வந்துச்சு. ஆனா, இப்போ அமெரிக்கா இதை சீர்திருத்தி மாத்துறதுக்கு பதிலா, ஒரு புது அணுகுமுறையை கையில எடுத்திருக்கு.
அமெரிக்காவோட பரஸ்பர கட்டணங்கள், WTO-வோட அடிப்படை கட்டமைப்பை முழுசா நிராகரிக்கிற மாதிரி இருக்கு. சிங்கப்பூரை பொறுத்தவரை, அமெரிக்கா 10% கட்டணத்தோட மிகக் குறைந்த அடுக்குல வெச்சிருக்கு. இப்போதைக்கு நேரடி தாக்கம் சின்னதா இருந்தாலும். அமெரிக்கா மாதிரியே மத்த நாடுகளும் இதே மாதிரி WTO-வை ஒதுக்கி, புது வழியை பின்பற்றினா, அதோட விளைவுகள் அதிகமானதாகவும், கடினமானதாகவும் இருக்கும். இதனால சிங்கப்பூர் மாதிரியான நாடுகள் ஓரங்கட்டப்படலாம்.
இதுக்கு ஒரு பலமான உலகளாவிய பதிலை எதிர்பார்க்கிறோம். சிங்கப்பூர் பதிலடி கட்டணங்கள் விதிக்க வேண்டாம்னு முடிவு பண்ணியிருக்கோம். ஆனா, மத்த நாடுகள் இதை பயன்படுத்தி, பெரிய கட்டணங்களை விதிச்சா, அது ஒரு முழுமையான உலக வர்த்தகப் போருக்கு வழிவகுக்குறமாதிரி இருக்கும். இது உலகளாவிய வளர்ச்சியை பாதிக்கும், எனவும் சர்வதேச வர்த்தகத்தையும் முதலீட்டையும் தடுமாற வைக்கும்.
இதனால நிச்சயமற்ற தன்மை அதிகமாகி, பொருளாதாரத்துல பல சிக்கல்கள் வரும். 1930-கள்ல நடந்த வர்த்தகப் போர்கள் ஆயுத மோதல்களா மாறி, இறுதியில இரண்டாம் உலகப் போருக்கு வழி அமைச்ச மாதிரி, இப்போதைய சூழல் எங்க போகும்னு யாராலயும் சரியா சொல்ல முடியாது. ஆனா, உலகளாவிய ஆபத்துகள் அதிகமாகிட்டு இருக்குறது மட்டும் தெளிவ தெரியுது. பலவீனமான சர்வதேச விதிமுறைகளை நம்பி நிறைய நிறுவனங்கள் இயங்கிட்டு இருக்கு.
இந்த சூழல்ல, சிங்கப்பூர் மாதிரியான நாடுகள் விழிப்பா இருக்கணும். நமக்கு பிடிச்ச, நம்பிக்கையான நாடுகளோட கூட்டணியை வலுப்படுத்தணும். பல நாடுகளை விட நாம கொஞ்சம் தயாரா, ஒத்திசைவோட இருக்கோம். ஆனாலும், உலக அமைதியும் ஸ்திரத்தன்மையும் தொடரணும்னா, இன்னும் பெரிய அதிர்ச்சிகளை தாங்குற அளவுக்கு நம்மை தயார் படுத்தணும் என கூறியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்