உக்ரைன் நாட்டில் நீண்ட நாட்கள் சட்ட விரோதமாக கருதப்பட்டு வரும் ஆபாச படங்களை உருவாக்குதல் மற்றும் வெளியிடுதலை சட்டப்பூர்வமாக அந்த நாட்டு நாடாளுமன்றம் பரீசீலித்து வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ரஷ்யா உடன் 4 ஆண்டுகள் 6 மாதங்களுக்கு மேலாக போர் நடந்துவரும் நிலையில், பெரும் நிதி சுமையை எதிர்கொண்டு வருகிறது உக்ரைன். குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு உக்ரைனுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போருக்கான நிதியை அமெரிக்கா மட்டுமே சுமக்க முடியாது என்றும், ஐரோப்பிய நாடுகளே கூடுதல் தொகையை ஏற்க வேண்டும் என்றும் ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார்.
இதனால் அரசின் வருவாயை உயர்த்த பல்வேறு வழிகளை ஆலோசித்து வருகிறது உக்ரைன் அரசு. அதன் ஒரு பகுதியாகவே ஆபாச படங்களை சட்டப்பூர்வமாக்கும் ஆலோசனையும் நடைபெறுகிறது.
ஏனென்றால் நாட்டில் ஆபசப்படங்களைத் தயாரிப்பது குற்றமாக இருந்தாலும், சட்டவிரோதமாக ரகசியமாக நடைபெற்றுக்கொண்டே தான் இருக்கிறது.
குறிப்பாக, OnlyFans தளத்தைச் சேர்ந்த தரவுகளின்படி, 2023ம் ஆண்டில் சுமார் 7,900 உக்ரேனியர்கள் 131 மில்லியன் டாலருக்கும் அதிகமான வருவாயை ஈட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இவற்றை சட்டப்பூர்வமாக்கி வரிவிதிப்பதான் மூலம் அரசின் வருவாயை கணிசமாக பெருக்க முடியும்.
இதன்மூலம் ஆண்டுக்கு 25 மில்லியன் டாலர் வரை வரி வருவாய் கிடைக்கலாம் என்றும், இந்தத் தொகை சுமார் 30,000 ராணுவ ட்ரோன்களை வாங்குவதற்குப் போதுமானதாக இருக்கும் என்றும் கூறி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இந்த யோசனையை முன்மொழிந்துள்ளன.
இதுதொடர்பான மசோதா ஏற்கெனவே நாடாளுமன்றத்தின் முதல்கட்ட வாக்கெடுப்பில் நிறைவேறி, அடுத்தகட்ட பரிசீலனைக்காக காத்திருக்கிறது.
ஆபசத்துறை சட்டவிரோதமாக இருப்பது ஊழலுக்கு வழிவகுப்பதாகவும் எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. ஆபாச படங்களைத் தயாரிப்பவர்கள் காவலர்களுக்கு லஞ்சம் கொடுப்பதை நிறுத்த சட்டப்பூர்வமாக்குவது உதவும் என்கின்றனர்.
ஆனாலும் 30,000 ட்ரோன்களுக்கான நிதி என்பது அரசின் மொத்த பாதுகாப்புச் செலவுடன் ஒப்பிடும்போது சிறிய தொகையே. மேலும் சில தார்மீக கேள்விகளும் எழுந்துள்ளதால் இது உடனடியாக அமலுக்கு வரும் எனக் கூற முடியாது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்