உலகத்தின் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்கும் அமெரிக்காவின் பிரதமர் டிரம்ப் சமீப காலமாக அமெரிக்க இளைஞர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகி வாழ்க்கையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது என பேசி வந்த நிலையில் இதற்கு காரணம் வெனிசுலா நாட்டில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக கடத்தப்படும் போதை பொருட்கள் தான் எனவும் தெரிவித்திருந்தார். மேலும் இதற்கு வெனிசுலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோ துணையாக இருக்கிறார் என பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார்.
இதனை தொடர்ந்து வெனிசுலாவின் கடற்பகுதியில் அமெரிக்க ராணுவ கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டது. அப்போது வெனிசுலாவின் இருந்து போதை பொருட்கள் கடத்தி வந்ததாக பல்வேறு கப்பல்கள் அமெரிக்க ராணுவ படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனை தொடர்ந்து வெனிசுலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோ அமெரிக்காவின் இந்த அத்து மீறல்களால் அமெரிக்க உடனான ஏகாதிபத்தியத்தை முறியடிப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் நகரில் அமெரிக்க விமான படை திடீர் தாக்குதலை நடத்தியது இதில் 7 இடங்களில் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் உயிரிழப்பு குறித்து இரு நாடுகளும் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை. இந்த தாக்குதலை தொடர்ந்து வெனிசுலாவின் ராணுவ தளத்திற்கு அருகிலும் முக்கிய நகரங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனை தொடர்ந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெனிசுலாவின் அதிபர் நிகோலஸ் மதுரோ அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இதுகுறித்து வெனிசுலா நாட்டின் சார்பில் எந்த அறிவிப்பு வெளியிட படாமல் இருந்த நிலையில் தற்போது வெனிசுலாவின் துணை அதிபர் “அதிபர் மற்றும் அவரது மனைவியை காணவில்லை” என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். மேலும் அமெரிக்க ராணுவத்தின் எலைட் பிரிவு ராணுவத்தால் இந்த ரகசிய தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.