தற்போது நடக்கும் இந்த ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு இடையேயான இந்த போர் பதட்டம் என்பது அதிர்க்கரித்துக் கொண்டே வருகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் "நான் விரும்பினால் இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவேன்" என்று தெரிவித்த நிலையில், ஈரானில் அவர்களுடைய ஐஆர்ஜிசி "போர் முடிவது செய்வோம் பற்றி நாங்கள்தான் முடிவு செய்வோம்" என்று கூறியுள்ளது. இதனால் 2019 போன்ற ஒரு காலகட்டம் மீண்டும் வந்துவிடுமோ? என்று சாதாரண மக்கள் மத்தியில் பதட்டம் நிலவி வருகிறது. இந்த பதட்டத்திற்கு என்னக் காரணம்? என்று விரிவாக பார்ப்போம்.
தொடரும் போர் சூழல்: கடந்த ஆண்டு ஜூன் மாதம் இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதலை தொடுத்தது. அந்த தாக்குதலின் போது ஈரான் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. பின்பு ஈரானை பேச்சு வார்த்தைக்கு அழைத்து, அனைத்தையும் சுமூகமாக முடிவிற்கு கொண்டு வந்தநிலையில் ஈரானும் பல ஒப்பந்தங்களுக்கு தனது சம்மதத்தை தெரிவித்தது. இந்த நிலையில்தான் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக பிப்ரவரி 28ம் தேதி தாக்குதலை நடத்தின. இதனால் இரு நாடுகளும் பெரிய அளவில் சேதத்தை சந்திக்க நேரிட்டது. இந்த போர் சூழலில்தான் ஈரானில் உச்சத்தலைவர் ஆயத்துல்லாஹ் அலி காமேனி இஸ்ரேல் மற்றும் அமெரிக்க படைகளால் பிப்ரவரி 28ம் தேதி அன்று கொல்லப்பட்டார். அதன் பின்பு அந்நாட்டின் 111வது விதிப்படி தற்காலிக தலைவராக மூத்த மதகுரு ஆயத்துல்லாஹ் அலிரேசா அராபி பதவியேற்றார். பின்பு காமேனியின் மகனான மொஜ்தபா காமேனி பதவியேற்றார். தற்போது 10 நாட்களுக்கும் மேலாகவே இந்த போர் சூழல் ஒரு முடிவிற்கு வர முடியாத நிலையிலேயே இருந்து வருகிறது.
போரின் தாக்கம்: இந்த போரின் தாக்கத்தால் உலகளவில் பொருளாதாரம் பெருமளவில் பாதித்துள்ளது. மேலும் குறிப்பாக, விமான நிறுவனங்கள் தங்களது கட்டண விலையை கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டினால் உயர்த்தியுள்ளனர். மேலும், "எண்ணெய் விலை அல்லது எரிவாயு விலை அதிகரிப்பு நிகழும்போது எல்லாம், அது ஒவ்வொரு நிறுவனத்திலும், ஒவ்வொரு துறையிலும் மேலும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும" என்று இத்தாலிய பானங்கள் தயாரிப்பாளரான காம்பாரி (VTYV.L) இன் தலைமை நிர்வாக அதிகாரி சைமன் ஹன்ட் கூறுகிறார். கோல்ட்மேன் சாக்ஸ் ஆய்வாளர்கள் எண்ணெய் விலைகள் பீப்பாய்க்கு $100 ஆக தற்காலிகமாக அதிகரிப்பது உலகளாவிய வளர்ச்சியை ஒரு சதவீத புள்ளியில் 0.4 குறைக்கக்கூடும் என்று கூறியுள்ளனர்.
மேலும், எண்ணெய் விலை உயர்வு, புவிசார் அரசியலின் அழுத்தம் போன்றவற்றின் காரணமாக கடல் வழி போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் போன்றவை உலக பொருளாதாரத்தில் ஒரு நிலையில்லாத நிலையை உருவாக்கியுள்ளது என்று கூறியிருக்கிறார். "நாம் மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் இருக்கிறோம்," என்று சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் தலைமைப் பொருளாதார நிபுணரும் ஹார்வர்டில் பேராசிரியருமான கென்னத் எஸ். ரோகாஃப் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் கூறியிருக்கிறார். உலகின் 30 சதவீத எண்ணெயையும், 17 சதவீத இயற்கை எரிவாயுவையும் உற்பத்தி செய்யும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து உற்பத்தி செய்யப்படுவதால் கச்சா எண்ணெய் உலக நாடுகளுக்கு இறக்குமதியாவதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இந்தியாவின் நிலை: இந்தியாவில் தற்போதைய நிலை மேலும் கவலையளித்துள்ளது. இந்தியாவில் போதுமான அளவிற்கு கச்சா எண்ணெய் கையிருப்பில் உள்ளதாக கூறி வருகின்றனர். எல்பிஜி நெருக்கடியைக் கட்டுப்படுத்த முயற்சிகள் தொடர்ந்து வருவதாக தற்போது மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி கூறுகிறார். சர்வதேச அரங்கில் கச்சா எண்ணெயின் விலை 100 டாலராக உயர்ந்துள்ள நிலையில் மக்களிடையே எரிவாயு குறித்து பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் தங்களது சிலிண்டர்களை தூக்கிக்கொண்டு ஓடி நீண்ட வரிசையில் நிற்கும் காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களோடு நீண்ட வரிசையில் பெட்ரோலுக்காக காத்திருக்கின்றனர். நாட்டின் 80% எரிவாயு இறக்குமதியை இந்தியா வளைகுடா நாடுகளையே சார்ந்திருப்பதால் இது, நிலைமையை இன்னும் மோசமாக்க கூடுமோ? என்ற கேள்வியை வெகுவாக எழுப்பியுள்ளது. இது மட்டுமின்றி இந்தியாவில் உள்ள பெரு நகரங்களின் உணவகங்கள் தற்போது மூடப்பட்டுள்ளது. மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.
அரசு வணிக எரிவாயுக்களை நிறுத்தி வைத்து விட்டு சமையல் எரிவாயுக்களை உற்பத்தியை அதிகரித்துள்ளனர். இருந்தும் இந்தியாவில் தமிழகம் உட்பட பல இடங்களில் மக்கள் சமையல் எரிவாயுவிற்காக காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது. இதுமட்டுமின்றி பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படக்கூடுமோ என்ற அச்சத்தில் பலரும் பெட்ரோல் பங்க்குகளை நோக்கி படையெடுத்துள்ளனர். இதனால் இது குறித்து வதந்திகளை மக்கள் நம்பவேண்டாம் என்று இந்திய எண்ணெய் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த போர் பதட்டத்தால் மக்களின் இயல்புக்கு வாழ்கை பெருமளவில் பாதித்துள்ளது.
விலைவாசி உயர்வு: தமிழகத்தில் பல இடங்களில் உணவு, டீ மற்றும் காபி போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது. பெருவாரியான உணவகங்களில் 'வெரைட்டி ரைஸ்' மட்டுமே வழங்கப்படும் என்றும் 'சைடு டிஷ்'களின் எண்ணிக்கையையும் குறைந்துள்ளதாக உணவாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். பல உணவகங்களில் விறகு அடுப்பு கொண்டு சமைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சமையல் எரிவாயு முன்பதிவு 25 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், முன்பதிவு செய்தும் வரவில்லை என்றும், சிலிண்டர்களுக்கான அழைப்புகள் பயன்பாட்டில் இல்லை என்றும் கூறி இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். எல்பிஜி எரிவாயு பயன்படுத்தும் ஆட்டோ ஓட்டுனர்கள் பெரிய சவால்களை சந்திப்பதாக கூறுகின்றனர். அதிக விலை வசூலிக்கப்படுவதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர். தொழிற்சங்க பிரதிநிதிகளின் கூற்றுப்படி, சென்னையில் சுமார் 40,000 எல்பிஜி மூலம் இயக்கப்படும் ஆட்டோக்களும், கிட்டத்தட்ட 20,000 சிஎன்ஜி மூலம் இயக்கப்படும் ஆட்டோக்களும் உள்ளன, அதே நேரத்தில் எல்பிஜி விநியோகிக்க பொருத்தப்பட்ட நிலையங்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது என்று தங்களது வேதனையை பதிவு செய்தனர்.
தமிழகத்தில் உள்ள ஹாஸ்டல்கள் மற்றும் பிஜிகளில் டீ மற்றும் காப்பிகளை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதோடு, சப்பாத்தி, தோசை போன்றவை வழங்கப்படாது என்றும் அறிவித்துள்ளனர். இந்த போர் சூழல் நீடிக்கும் பட்சத்தில் ஹாஸ்டல்கள் மற்றும் பிஜிகளின் நிலையும் மோசமடையும் என கூறப்படுகிறது.
ஊரடங்கு நிலை வருமா? இந்நிலையில் போர் நிறுத்தம் பற்றி டிரம்ப் கூறியிருந்தார். ஆனால் போர் நிறுத்தம் பற்றி நாங்கள்தான் முடிவு செய்வோம் என்று ஈரான் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. G7 நிதி அமைச்சர்கள் மார்ச் 8 முதல்11ல் அவசர கூட்டங்களை நடத்தி, IEA மூலம் 400 மில்லியன் பார் அவசர எண்ணெய் ரிசர்வ்களை விடுவிக்க தீர்மானித்தனர். இந்த கூட்டமானது எண்ணெய் விலையை $120+ இருந்து குறைக்க, எல்என்ஜி விலை 70-73% உயர்வை கட்டுப்படுத்தவே இந்த கூட்டத்தை கூட்டினர்.
தற்போதைய நிலவரப்படி, இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) பஹ்ரைன், இஸ்ரேல், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் 29 இடங்களை அடையாளம் கண்டுள்ளது என்றும் அங்கு அலுவலகங்கள், தரவு மையங்கள் மற்றும் ஆராய்ச்சி வசதிகள் உள்ளனதால் அவற்றை ஈரான் அழிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது. மேலும் கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது மட்டுமன்றி இந்தியாவில் இந்திய இணையசேவை மற்றும் மொபைல் சங்கம் நடத்திய ஆய்வில் 88.9% பேர் 2024ம் ஆண்டு இணையத்தை உபயோகப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த எரிவாயு பற்றாக்குறை காரணமாக நெட்வொர்க் உள்கட்டமைப்பை, குறிப்பாக மொபைல் மற்றும் இணைய சேவைகளை கணிசமாக பாதிக்கும். உதாரணமாக, இந்தியாவில், வணிக எரிவாயு பற்றாக்குறை மொபைல் கோபுரங்களை உற்பத்தி செய்வதற்கான கால்வனைசேஷன் செயல்முறையை நேரடியாக பாதிக்கும் என்றும், இது அழைப்பு துண்டிப்புகள், மெதுவான இணைய வேகம் மற்றும் 5G வெளியீட்டில் தாமதங்களை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிப்பதோடு மீண்டும் ஒரு ஊரடங்கிற்கு வழிவகுக்கலாம். எரிவாயு பற்றாக்குறை ஏற்படும் போது நிறுவனங்களை மூடும் அபாயமும் ஏற்பட வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
தற்போது இந்தியாவிற்கு ஹார்மஸ் கால்வாய் வழியாக இந்திய கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு எளிமையாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி ஆகியோருக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, மார்ச் 12, 2026 முதல், இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் மற்றும் டேங்கர்களை ஹார்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பாகக் கடந்து செல்ல ஈரான் அனுமதித்துள்ளது. போர் சூழல் மற்றும் மோதல் இருந்தபோதிலும், இந்திய எண்ணெய் மற்றும் பிற சரக்குகளை இந்தப் பாதுகாப்பான பாதை தொடர்ந்து நகர்த்த அனுமதிக்கிறது, புஷ்பக் மற்றும் பரிமல் போன்ற குறிப்பிட்ட கப்பல்கள் இந்தப் பாதையில் பயணிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் கூடிய விரைவில் நிலைமை கட்டுக்குள் வரும் என்றும் அவ்வாறு வர இயலாத பட்சத்தில் பொருளாதார சரிவோடு ஊரடங்கு வாழ்க்கையை கூட மேற்கொள்ளும் நிலை வரலாம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.