சிறப்பு செய்திகள்

EXCLUSIVE: "சீமான் யார் தெரியுமா?" - ரகு கேட்ட கேள்வி.. பட்டாசாய் பொரிந்து தள்ளிய ரவீந்திரன் துரைசாமி!

ஆனால் சீமான், சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தில், "எம்.ஜி.ஆர் ஒரு மலையாளி மேனன், அவர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்...

மாலை முரசு செய்தி குழு

மாலை முரசு நிகழச்சியின் "நெற்றிக்கண்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மூத்த பத்திரிக்கையாளர் ரவீந்திரன் ரவீந்திரன் துரைசாமி பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். முழு விவரமும் அவரது வார்த்தைகளாக..

ரவீந்திரன் துரைசாமி: முதல்ல மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை பற்றி சொன்னார், நான் மறுக்கவில்லை. எம்.ஜி.ஆர் கலைஞரை விட ஒரு 'இன்டலக்சுவல் லீடர்' (Intellectual Leader). மகத்தான மாமனிதர், பல சமூக நீதி விஷயங்களை செய்திருக்கிறார். கிராமப்புறத்தில் பரம்பரை கிராம அதிகாரங்களை ஒழித்து, அட்டவணைப் பிரிவு மக்கள், ஓபிசி மக்களெல்லாம் அதிகாரத்திற்கு வந்தது மிகப்பெரிய சமூக நீதிப் புரட்சி.

ஆனால், கமலஹாசன் "எம்.ஜி.ஆர் ஆட்சி கொடுப்போம்" என்று சொன்னபோது, சீமான் என்ன சொன்னார் தெரியுமா? "எம்.ஜி.ஆர் ஊழல் பெருச்சாளி, சாராய வியாபாரிகளை கல்வித் தந்தையாக்கினார், முல்லைப் பெரியாறு உரிமையை மலையாளி எம்.ஜி.ஆர் விட்டுக்கொடுத்தார்" என்று சீமான் சொன்னார்.

இன்னைக்கு கமலஹாசன் என்ன நிலைமையில் இருக்கிறார்? சீமான் என்ன நிலைமையில் இருக்கிறார் என்பதை நண்பருக்கு நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். இப்போ "எம்.ஜி.ஆர் ஜெயில் தான்" என்று இரண்டு ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு விஜய் நடக்கிறார். ஆனால் சீமான், சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தில், "எம்.ஜி.ஆர் ஒரு மலையாளி மேனன், அவர் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் இங்கே மேனன், மலையாளி எவ்வளவு என்று வெட்டவெளிச்சமாகிவிடும். அதனால் தான் அவர் நடத்தவில்லை" என்று களத்தில் நிற்கிறார்.

விஜய் ஊன்றுகோலை வைத்து நடக்கிறார். ஆனால் சீமான் சுத்த வீரனாட்டம், "பார்ச்சூன் ஃபேவர்ஸ் தி பிரேவ்" (Fortune favors the brave) என்று இன்னொருத்தரை நம்பாமல், தன்னை நம்பி, தன்னுடைய கொள்கையை நம்பி சீமான் நிற்கிறார்.

ரகு: (குறுக்கிடுகிறார்) இல்ல இல்ல.. நான் ஒரே ஒரு விஷயம் சொல்றேன்..

ரவீந்திரன் துரைசாமி: நான் முடிச்சுடுறேன்.. களத்தை விட்டு ஓடினதுங்கற போது, "கோழை நாய்கள் களத்தை விட்டு ஈரோடு கிழக்கில் ஓடிவிட்டார்கள்" என்று எடப்பாடியை, என்.டி.ஏ-வை, விஜயை முதல்ல அடிச்சது சீமான் தான். களத்துக்குள்ள வராம லெட்டர் பேடா இருந்ததுனால தான் அடிச்சாரு.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் கட்சி ஆரம்பிச்சு திண்டுக்கல்ல நின்னார், கோயம்புத்தூர்ல நின்னார். இவரு களத்துக்குள்ள வராம இருந்ததுனால தான் "கோழை நாய்கள் களத்தை விட்டு ஓடிட்டாங்க"னு சீமான் அடிச்சாரு. இதே சீமான் வளர்ந்தது நாங்குநேரி, விக்கிரவாண்டி, வேலூர் களத்துக்குள்ள நின்னதுனால தான். கமலஹாசனும் தினகரனும் நிக்காததுனால தான் இன்னைக்கு அவங்க வீழ்ந்திருக்காங்க, சீமான் வளர்ந்திருக்காரு. லெட்டர் பேட் கட்சியா, பார்ட் டைம் பொலிட்டிஷியனா இருக்கக்கூடிய ஒருத்தரை, நிரூபிக்கப்பட்ட ஒருத்தரை, வேணா வெறுப்பா இவர் சேர்க்கிறார். அவரு ஊன்றுகோலை விட்டு, எம்.ஜி.ஆர் ஜெயில் தான் என்று போறவரை அடிச்சுத் தூக்கி மேல போறாரு.

இன்னொன்னு கேக்குறாரு, "நீங்க இன்னைக்கு எடப்பாடியில ஜெயலலிதா வீரப்பனை என்கவுண்டர் பண்ணது நியாயம்னு சொல்ல முடியுமா?"னு சீமான் கேக்குறாரு. எடப்பாடியே அத சொல்ல முடியல.

ரகு: சீமானை உதாசீனப்படுத்துறோம் அல்லது அவர் பாலிடிக்ஸே பண்ணக்கூடாதுனு நான் சொல்லல. 'ரைட் விங் பாலிடிக்ஸ்'-க்கும் (Right wing politics), இங்க 'டெமாக்ரடிக் ஸ்பேஸ்' (Democratic space) இருக்குதுங்க. அவர் பேசுற அந்த வலதுசாரி அல்லது ஒரு இனத்தை மையமாக வைத்து பேசுற 'எத்னோ சென்ட்ரிக் பாலிடிக்ஸ்' (Ethnocentric politics)க்கும் இடம் இருக்குது.

நெறியாளர் தமிழரசன்: அவர் வலதுசாரி கருத்து பேசுறாருங்கறீங்களா?

ரகு: அது ஒரு வகையான வலதுசாரி தான். பிஜேபி பேசுறது மட்டும் வலதுசாரி கிடையாது. இது தமிழ் தேசியம்னு ஒரு இனத்தை மையமா வெச்சு பேசுறது. சரி ஓகே.. அவர் பேசுற எக்ஸ்ட்ரீமான சில கருத்துக்களுக்கும் இடம் இருக்குதுங்க இங்க. நான் என்ன சொல்ல வரேன்னா, ரவீந்திரன் துரைசாமிக்கு என்ன சொல்றேன்னா, விஜய்யோட அரசியல்ல பயங்கரமா அர்த்தம் இருக்குது, பெரிய பாலிசிஸ்லாம் வெச்சிருக்காரு, ரொம்ப கமிட்டட் கொள்கைவாதினு நான் சொல்லல. மக்கள் ஓட்டு போடுறதுக்கான வாய்ப்பு இருக்கு.

'அன்-டெஸ்டட்' (Un-tested)ங்கறது எல்லாருக்கும் தெரியும். சீமான் எல்லா விஷயத்தையும் பத்தி பேசுறாரு, நல்லாவே பேசுறாரு. அதுல லாஜிக்லாம் அடுத்தது. தெளிவா எல்லா விஷயத்தையும் டச் பண்றாரு. மண்ணு, மலை, கடல் எல்லாத்த பத்தியும் பேசுறாரு. ஆனா அவருக்கு அதுதான் வாக்குகளை கொடுக்கும் அல்லது ஜெயிக்க வைக்கும்னு சொல்ல முடியாது. இதுவரைக்கும் ஜெயிக்க வைக்கல.

ரவீந்திரன் துரைசாமி: ஒரே ஒரு கருத்து மட்டும் சொல்லிடுறேன்.. சீமான் எல்லா விஷயத்தையும் பேசுறாரு. கலைஞர் அருந்ததியர் சகோதரர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுத்தது தவறு, பறையர் தேவேந்திர குல வேளாளருக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடை உயர்த்தி கொடுக்கணும்னு சீமான் பேசுறாரு. இதுல அருந்ததியர் மக்கள் கலைஞரை தெய்வமா வணங்குறாங்க, மு.க.ஸ்டாலினுக்கு தான் வாக்களிப்பாங்க.

ஈரோடு கிழக்குல நடந்த கூட்டத்துல, ஸ்டாலினை எதிர்த்து விஜய் பேசும்போது, "உங்களுக்கு வேணும்னா வன்மம் இருக்கலாம் ஸ்டாலின் மேல. நாங்க எங்களை வாழ வெச்சவரு ஸ்டாலினுக்கு தான்"னு அந்த கூட்டம் கைதட்டல. ஆனா சீமானை எதிர்த்து பேசும்போது அந்த கூட்டம் ஆர்ப்பரிக்குதுன்னா, சீமான் எடுத்த நிலைப்பாட்டுல விஜயால நிலைப்பாடு எடுக்க முடியாம இருக்காரு.

ஒன்னு அந்த பக்கம் நில்லுங்க, அல்லது இந்த பக்கம் நில்லுங்க. அருந்ததியரோ, பறையரோ, தேவேந்திர குல வேளாளரோ.. நாலு பேரு இங்க ஊடகத்துல உக்காந்து பேசுறவள கேட்டுட்டு ஓட்டு போடுற சமூகம் இல்ல. முழுக்க எப்படி ஓட்டளிக்கணும்னு தெரிஞ்ச சமூகம். காலம் உணர்த்தும். போலரைசேஷன் (Polarization) வரும். அதுல சீமான் 'கன்ஷிராம் ஆஃப் தமிழ்நாடு' ஆக நிப்பாரு" என்று தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்