EXCLUSIVE: "விஜய் பற்றி நான் சொல்றேன்.. என்ன பிளான் வச்சிருக்காங்க தெரியுமா? திடீரென ட்விஸ்ட் உடைத்த அய்யநாதன்

தாமரை சின்னத்தில் நிற்பவர்களுக்குத்தான் பாஜகவில் மரியாதை. டிடிவி தினகரன் தனி கட்சி நடத்துகிறார்...
EXCLUSIVE: "விஜய் பற்றி நான் சொல்றேன்.. என்ன பிளான் வச்சிருக்காங்க தெரியுமா? திடீரென ட்விஸ்ட் உடைத்த அய்யநாதன்
Published on
Updated on
3 min read

மாலை முரசு நிகழச்சியின் "நெற்றிக்கண்" நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன் பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். முழு விவரமும் அவரது வார்த்தைகளாக..

நெறியாளர் தமிழரசன்: வணக்கம் திரு. அய்யநாதன். இன்றைய அரசியல் சூழலில் யாருடைய கை ஓங்கியிருப்பதாக நினைக்கிறீர்கள்? அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வரவில்லை என்றாலும், சந்திப்புகள் சுமுகமாக இருந்ததாக சொல்லப்படுகிறதே? அது உண்மையா?

அய்யநாதன்: முதலில் ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்கிறேன். ரவீந்திரன் துரைசாமி அவர்கள் அமித்ஷா மற்றும் மோடியை நேருவை விட உயர்ந்தவர்கள் என்று சொல்வதை நான் மறுக்கிறேன். அவர்கள் கார்ப்பரேட்டுகளின் கைப்பாவைகள். சரி, விஷயத்திற்கு வருவோம். பாஜக - அதிமுக கூட்டணியை பொறுத்தவரை, அது உடைவதற்கான வாய்ப்பே இல்லை. 'டேக் இட் ஆர் லீவ் இட்' (Take it or leave it) என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை.

பாஜகவிற்கு இன்று தமிழ்நாட்டில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள ஒரு வெற்றி தேவை. அதற்கு அதிமுக கூட்டணி மிக அவசியம். அமித்ஷாவின் கருத்தும் அதுதான். அதனால், என்டிஏ-வை (NDA) பலப்படுத்தும் முயற்சியாகத்தான் அண்ணாமலை வழியாக ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் உள்ளே கொண்டுவர பேச்சுவார்த்தை நடக்கிறது.

ஆனால், எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு அதிக சீட் கொடுக்க மாட்டார். அது 4 சீட்டோ அல்லது 6 சீட்டோ, அதை எடப்பாடி ஏன் கொடுக்க வேண்டும்? டிடிவி தினகரன், "எடப்பாடியை முதலமைச்சராக ஏற்கமாட்டேன்" என்று சொல்லிவிட்டு, இப்போது அவரிடமே சீட் கேட்பது என்றால், அது பாஜகவின் உள் ஒதுக்கீடாக (Inner quota) தான் இருக்க முடியும். ஓபிஎஸ்-க்கும் இதே நிலைதான்.

நெறியாளர்: அப்படியென்றால், இழந்த செல்வாக்கை அவர்கள் ஓரளவாவது மீட்டுவிடுவார்களா? டிடிவி தினகரன் "மரியாதையான இடங்கள் ஒதுக்கப்பட்டால் கூட்டணி" என்று ஒரு நிபந்தனை வைத்திருக்கிறாரே?

அய்யநாதன்: அந்த 'மரியாதையான இடம்' என்பது 6 சீட்டா அல்லது வேறா என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால், அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு (Option) இருக்கிறது. அதுதான் விஜய்! தவெக (TVK) பக்கம் அவர்கள் போக வாய்ப்புள்ளது.

நெறியாளர்: கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே அவர்கள் இரண்டு இடங்களில் (திருச்சி, தேனி) தான் போட்டியிட்டார்கள். இதை விட என்ன பெரிய மரியாதையான இடத்தை இப்போது எதிர்பார்க்கிறார்கள்? இது ஒரு நெருக்கடி கொடுக்கும் உத்தியா?

அய்யநாதன்: நிச்சயமாக இது ஒரு நெருக்கடி கொடுக்கும் உத்திதான். ரவீந்திரன் துரைசாமி குறிப்பிட்டது போல, தாமரை சின்னத்தில் நிற்பவர்களுக்குத்தான் பாஜகவில் மரியாதை. டிடிவி தினகரன் தனி கட்சி நடத்துகிறார், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள், நிர்வாகிகள் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் எதிர்பார்க்கும் சீட் எண்ணிக்கை அதிகம். அதேபோல் ஓபிஎஸ்-ம் மூன்று சீட்டுகளுக்கு எல்லாம் ஒப்புக்கொள்ள மாட்டார். இந்த இடப் பங்கீடு பேச்சுவார்த்தை தான் இனி இழுபறியாக இருக்கும்.

நெறியாளர்: ஒருவேளை அவர்கள் தவெக (விஜய்) பக்கம் போனால், இரட்டை இலை, அதிமுகவின் ரத்தத்தின் ரத்தம் என்று சொல்லிக்கொண்டு, இப்படி மாறுவது அரசியல் தற்கொலை ஆகாதா? அதிமுக தொண்டர்கள் இதை ஏற்பார்களா?

அய்யநாதன்: இதில் தொண்டர்களுக்கோ, வாக்கு வங்கிக்கோ பெரிய பிரச்சனை இருக்காது. "தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு" என்று சொல்லிவிட்டு, வேறு பக்கம் போனால் என்ன மரியாதை இருக்கும் என்று நீங்கள் கேட்கலாம். ஆனால், அவர்கள் தங்கள் அடையாளத்துடனேதான் கூட்டணி வைக்கப் போகிறார்கள். பாஜக-வுடன் எப்படி ஓபிஎஸ் கூட்டணி வைத்தாரோ, அதேபோல தவெக-வுடனும் கூட்டணி வைக்கலாம். இது சட்டரீதியாகவோ, அரசியல் ரீதியாகவோ அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. அவர்கள் தங்கள் அரசியல் அடையாளத்தை தக்கவைக்கவே இப்படி செய்வார்கள்.

கூட்டணி உடையாது, ஆனால் வாய்ப்புகள் குறைவு. இதில் இன்னொரு விஷயம் பாமக. பாமக-விற்காக நாங்களே பேசிக்கொள்கிறோம் என்று எடப்பாடி சொன்னதாக தகவல். ஆனால் ராமதாஸும், அன்புமணி ராமதாஸும் எதிர் எதிர் மனநிலையில் இருக்கிறார்கள். அன்புமணி பாஜக-வின் ஆள். அவர் அங்கேயேதான் இருப்பார். ராமதாஸ் என்ன செய்யப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஆனால் ஒன்று உறுதி, அதிமுக - பாஜக கூட்டணி மாறாது.

நெறியாளர்: இந்த 170 சீட் அதிமுக-விற்கு, மீதி 64 மற்றவர்களுக்கு என்ற கணக்கை எப்படி பார்க்கிறீர்கள்?

அய்யநாதன்: அமித்ஷா முதலில் 39% வாக்கு வங்கி, கூட்டணி ஆட்சி என்றார். அடுத்த நாளே தனி பெரும்பான்மை என்று பேசுகிறார். இதில் இருந்தே குழப்பம் தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி 170 சீட் என்பதில் உறுதியாக இருப்பார். ஆனால் டெல்லி அழுத்தம் கொடுக்கும்போது, அது 160 அல்லது 150 ஆக குறையலாம். பாஜகவின் வெற்றியை உறுதிப்படுத்த, "சீட் எண்ணிக்கையை குறைத்துக் கொள்ளுங்கள்" என்று அமித்ஷா எடப்பாடியை நிர்பந்திக்கலாம். எனவே கூட்டணி உடையாது, எண்ணிக்கையில் மாற்றம் இருக்கலாம்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயம், எடப்பாடி பழனிசாமி ஒரு கேப் (Gap) வைத்திருக்கிறார். அது விஜய்க்கானது! இந்த கிறிஸ்துமஸுக்கும் பொங்கலுக்கும் இடையில் என்ன நடக்கிறது என்று பாருங்கள்.

நெறியாளர்: இன்னமுமா உங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது? விஜயை முதலமைச்சராக ஏற்பவர்களுடன் தான் கூட்டணி என்று அவரே சொல்லிவிட்டார். திமுக-வும் தவெக-வும் தான் போட்டி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் உங்களுக்கு கிறிஸ்துமஸ் - பொங்கல் கேப் மீது நம்பிக்கை இருக்கிறதா?

அய்யநாதன்: நான் மட்டும் நம்பவில்லை, பலரும் பேசுகிறார்கள். விஜய் சமீபத்தில் பொதுக்குழு கூட்டி தீர்மானம் போட்டார் இல்லையா? "கூட்டணி குறித்து விஜய்யே முடிவு செய்வார்" என்று. முதலமைச்சர் வேட்பாளர் அவர்தான் என்று சொன்ன பிறகு, கூட்டணி பற்றி அவர் முடிவு செய்வார் என்று தனியாக ஒரு தீர்மானம் எதற்கு? 3000 பேருக்கு சாப்பாடு போட்டு, பொதுக்குழு கூட்டி இப்படி ஒரு அதிகாரத்தை அவரிடம் கொடுப்பது எதற்கு? ஒரு அவசர காலத்தில் (Emergency), ஒரு திடீர் முடிவு எடுப்பதற்காகத்தான் அந்த அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அது என்ன முடிவு என்பது போகப் போக தெரியும். யாராலும் இல்லை என்று சொல்ல முடியாது" என்று தெரிவித்தார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com