boominathar swamy kovil Admin
ஆன்மீகம்

நிலப்பிரச்னைகள் தீர்க்கும் திருச்சுழி பூமிநாதர் கோவில்

இக்கோவிலில் வழிபடும் போது மண்ணின் பூத்த மணிகளாய் நெற்கதிர்கள் விளைகின்ற அதிசயம் நடக்கிறது..

Anbarasan

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் .பகவான் ஸ்ரீ ரமணர் பிறந்த வீட்டுக்கு மிகவும் அருகில் .அருள்பாலிக்கும் பூமிநாத சுவாமி ஆலயம். மிக மிகப் பழமையானதாகவும் இறைசக்தியின் இன்ப ஊற்றாகவும் விளக்குகிறது. .

துவாபர யுகத்தில் பேரழிவு ஏற்பட்ட போது இப்பகுதியை ஆண்டு வந்த மன்னன் இயற்கை அழிவிலிருந்து இவ்வூரைக் காப்பாற்ற வேண்டிச் சிவபெருமானை நோக்கி வழிபட்டார். .அவனது வேண்டுதலை ஏற்றுக் கொண்ட சிவனும் தனது சூலத்தால் தரையில் குத்தி, நிலத்தில் ஒரு பெரிய ஓட்டையிட்டு; பிரளய வெள்ளத்தைப் பூமியில் புகுமாறு செய்தார். சிவபெருமானின் சூலத்தைச் சுற்றி வெள்ளம் சுழித்துச் சென்றதால் சுழி என்று பெயர் பெற்றுப் பின்னர் திரு எனும் அடைமொழி சேர்ந்து திருச்சுழி ஆயிற்று என தலபுராணம் புகழ்ந்துரைக்கிறது

மேலும் சில ஆன்மீக தகவல்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

திருமேனி நாதர், சுழிகேசர், பிரளய விடங்கர், தனுனாதர், மணக்கோல நாதர், கல்யாண சுந்தரர், புவனேஸ்வரர் மற்றும் பூமீஸ்வரர் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் மூவுலகங்களையும் காக்கும் மூலவரும்.....

அவருக்கு அருகில் மாலையம்மை, சகாயவல்லி, சொர்ணமாலை, . மாணிக்கமாலை என்ற பெயர்களிலும் அழைக்கப்படும் அம்மனும் இக்கோவிலில் காட்சி தந்து எண்ணிலடங்கா அதிசயங்களை நிகழ்த்தி இந்த உலகை காத்து வருகின்றனர்

மேலும் படிக்க : குழந்தை வரம் அருளும் குளத்துப்புழை ஐயப்பன் இத்தனை மகத்துவம் மிக்க தலமா?

1,800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் கிழக்கு .ஏழு நிலை ராஜகோபுரத்துடன் காணப்படுவதோடு இங்கு அருளும் அம்பாள், மதுரை மீனாட்சி அம்மனைப் போலவே காட்சி தருகிறார். அம்மன் திரிபங்கி லட்சண அமைப்பில், இடுப்பு, கழுத்து, இடது கால் போன்றவற்றை சற்றே சாய்த்து நடன அமைப்பில் தரிசனம் தருவதோடு அவருக்கு எதிரே சக்தி மிகுந்த ஸ்ரீசக்கரமும் காணப்படுகிறது

இங்கு ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதால் கணவன்- மனைவி ஒற்றுமை மற்றும் திருமண தடை ஆகியவை நீங்க இந்த தளத்து அம்பாளை வணங்குவதன் மூலம் நல்ல பலனை பெற இயலும்

ராமநாதபுரம் சேது சமஸ்தானத்தைச் சேர்ந்த கோயில்களில் ஒன்றான இந்த கோவிலில் தாவர விநாயகர் , போதி விநாயகர் , அரசு விநாயகர் , வேலடி விநாயகர் , தருமதாவரப் பிள்ளையார் என ஐந்து விநாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்

இத்தலத்தில் வேலியம்பலனாதர் , சோமசேகரர் , கௌண்டின்யலிங்கம் , காலவலிங்கம் , கண்ணுவலிங்கம் , காமீஸ்வரலிங்கம் , கிருதாந்தகேஸ்வரலிங்கம் , தினகரேஸ்வரலிங்கம் முதலிய அஷ்டலிங்கங்கள் அற்பதாமாய் அமைந்து வேண்டியவருக்கு வேண்டியதை தருகின்றனர்.

கயிலாயத்தை விட சிறந்த இடம் இது என்று கருதி சிவபெருமான் இத்தலத்தில் . சுயம்புவாகத் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. .இங்குள்ள மூலிகை பச்சிலைகளால் உருவாக்கப்பட்ட நடராஜப் பெருமானின் சிலைக்கு . அபிஷேகமும், ஆராதனையும் செய்தால் 21 தலைமுறைகளாக உங்களுடன் தொடர்ந்து வரும் பாவங்கள் களையப்படுவதோடு வாஸ்து தோஷமும் நீங்க பெற்று உங்களுக்கான சுப பலன்களை பெறுவதாக நம்பப்படுகிறது

பூமாதேவி, இங்கு வந்து சிவ பூஜை செய்து, தன் பாவங்களில் இருந்து நிவர்த்தி அடைந்ததால் இக்கோவில் ஈசனை வழிபடுவோருக்கு நிலம் சம்பந்தமான பிரச்னைகள் தீர்ந்து, நிம்மதியாக வாழலாம்

நிலத்தில் ஏதேனும் சிக்கல், விளைச்சல் குறைபாடு என இருந்தால், நிலத்தில் இருந்து மண் எடுத்து வந்து, சிவனாரின் சந்நிதியில் வைத்து வேண்டிக்கொண்டு பிறகு நிலத்தில் அந்த மண்ணைக் கலந்துவிட்டால், விவசாயம் செழிப்பதோடு, நிலம் தொடர்பான எல்லாப் பிரச்னைகளில் இருந்தும் விரைவில் விடுபடலாம் என பலனடைந்த விவாசயிகள் கூறுகின்றனர்.

காதல் திருமணம், பதிவு திருமணம், பெரியோர்களின் ஆசி இல்லாமல் நடைபெற்ற கந்தர்வ திருமணம், திருமணத்திற்கு முன்னரே உடலுறவு செய்து கொண்டதால் ஏற்பட்ட தோஷம், கலப்புத் திருமணம், பொருத்தமற்ற திகதிகளில் நடைபெற்ற திருமணம் போன்ற திருமணத்தால் வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாத தம்பதிகள் இந்த கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டு அம்பாளை தரிசித்தால் அனைத்தும் சுபமாக நடக்கும் என்பது நம்பிக்கையாக் இருந்து வருகிறது.

மாலை முரசு செய்திகளுக்காக விருதுநகர் செய்தியாளர் அர்சுனன் உடன்..... கலைமாமணி நந்தகுமார்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்