மனிதர்களால் உருவாக்கப்பட்ட கோவில்களை நாம் அறிந்திருக்கிறோம் ஆனால் தங்கள் வாழ்வு முழுவதும் சிவனிடம் அற்பணித்த சித்தர்கள் உருவாக்கிய சிவலிங்க கோவிலை பற்றியும், அங்கே உருவாக்கப்பட்டுள்ள உலகில் வேறு எங்கும் காண முடியாத ராசி சக்கரத்தை பற்றியும் அறிந்து கொள்வோம்
மனிதர்களின் வாழ்வு, செயல்கள், ஆரோக்கியம் முன்னேற்றம் இவைகள் அனைத்துமே அவரவர்களின் ராசிப்படியும் நட்சத்திரங்கள் படியும், கிரகங்களின் சூழச்சிகளால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதாக ஜோதிட வல்லுனர்கள் தெரிவிக்கின்றன. இவைகளில் ஏதேனும் தோஷங்களை ஏற்படும் போது எவ்வளவு முயற்சி செய்தும் எடுத்த காரியங்கள் நிறைவேறாமல் தோல்விகளை பலர் சந்திக்கின்றனர்..
இந்த துண்பநிலையிலிருந்து மனிதர்கள் தங்களை விடுவித்துக் கொள்ள ஞானிகளால் உருவாக்கப்பட்ட பரிகார கோயில்கள் பல இருந்தாலும், முற்றும் உணர்ந்த சித்தர்களால் உருவாக்கப்பட்ட சிறந்த பரிகார கோவில் திருச்சி அருகே உள்ள பகள்வாடி என்ற கிராமத்தில் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் என்ற பெயரோடு நட்சத்திர ராசிக்கு கோயிலாக அமைந்துள்ளது.
சுமார் 1300 வருடங்களுக்கு முற்பட்ட மிகப் பழமை வாய்ந்த சிவாலயத்திற்குள் . 12 ராசிகளும், ஒரே சக்கர வடிவில் அமைக்கப்பட்டு அதன் நடுவில் சித்தர்களால் உருவாக்கப்பட்ட சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இங்கு கோவில் கொண்டிருக்கும் இறைவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரோடும் அம்பாளின் காமாட்சியம்மனாகவும் வீற்றிருந்து பக்தர்களின் வாழ்வில் நல் வெளிச்சத்தை அருள்கின்றனர்.
இந்த சிவாலயத்தில் அமைந்துள்ள வட்ட வடிவிலான பீடத்தில் மேஷம், ரிஷபம், மேஷம், உள்ளிட்ட பன்னிரண்டு ராசிகளுக்குரிய குறிகள் பொறிக்கப்பட்டும், திசைகளை காக்கும் அஷ்டதிக் யானைகளும்,நாகங்களும், 64 கலைகளை விளக்கக்கூடிய சிற்பங்களும் காணப்படுகின்றன. இவைகளோடு பீடத்தில் ஒவ்வொரு ராசிக்கும் உரிய அதி தேவதைகள் , பிரத்தியதி தேவதைகள் ஆகியவைகள் 4, 8, 16, 32 ஆகிய எண்ணிக்கையில் வாழ்க்கையின் தத்துவத்தை வெளிப் படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது வேறு எங்கு காண முடியாத ஒன்றாகும்.
இந்த கோவிலில் சாரங்கநாதர் எனும் சித்தர்.சிவங்கலிங்கத்தை வழிபட்டு ஜீவசமாதி அடைந்திருப்பதால், சித்தர் பீடத்தில் பவுர்ணமி தோறும் யாக வேள்விகள் நடத்தப்படுகிறது. இந்த வேள்வியில் கலந்து கொள்ள தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஜாதகத்துடன் வரும் பக்தர்கள் தாங்கள் செய்யவேண்டிய பரிகாரங்கள் குறித்து அறிந்து செல்வதோடு வாழ்வில் மறுமலர்ச்சி அடைவதாக கூறப்படுகிறது.
இன்னும் சிறப்பாய் கோவிலின் வடபுறத்தில் 27 நட்சக்த்திரங்களுக்குரிய மரங்களில் ஒரு குடம் நீர் ஊற்றி பரிகாரங்கள் செய்து பக்தர்கள் வாழ்வில் பயனடைகின்றனர்.
மேலும் கோவிலின் அக்னி மூலையில் ராமபிரான் ஆணைப்படி சீதா தேவி அக்னி பிரவேசம் செய்த பின் நீராடிய சீதை குளம் காணப்படுவது இக்கோவிலில் மற்றோரு சிறப்பாகும்.
வியாபாரத்தில் முன்னேற்றம் அடையவும், தாங்கள் நடத்தும் நிறுவனங்கள் வளர்ச்சி பெறவும் இந்த ராசி கோவிலுக்கு வருகை தந்து சிவனை வழிபடுவதோடு அவரவர் ராசி சிலைகளுக்கு முன் தீபமேற்றி வழிபட்டால் விரைவில் மாற்றங்களை காண முடிவதாக பலனடைந்த பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
மாலை முரசு தொலைக்காட்சி செய்திகளுக்காக துறையூர் செய்தியாளர் சிவாவுடன் கலைமாமணி நந்தகுமார்
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்