kaala devi amman kovil Admin
ஆன்மீகம்

தீய நேரங்களை நீக்கி நன்மைகளைத் தரும் கால தேவி கோவில்

காத்தல், அழித்தல், பஞ்சபூதங்கள், நவகிரகங்கள், நட்சத்திரங்கள் என முப்பத்து முக்கோடி தேவர்களையும் இயக்கும் சக்தி, கால தேவிக்கு உண்டு என்று புராணங்கள் கூறுகின்றன.

Anbarasan

ஒரு மனிதன் எவ்வளவு உயர்வான வாழ்க்கை வாழ்ந்தாலும் தீய நேரம் என்று வந்துவிட்டால் வாழ்வில் தாழ்ந்து, துன்பங்கள் சூழ்ந்து, தீராத இன்னல்களில் சிக்கித் தவிப்பார்கள். அவர்களது முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்படும். செல்லும் பாதை அனைத்தும் பள்ளங்களை நோக்கி பயணிக்கும்.

மேலும் படிக்க: இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க.. "மாலை முரசு" வழங்கும் IPL 2025-ன் "Special பரிசை வெல்லுங்க! இது நீங்க எதிர்பார்க்காத வேற லெவல் பரிசுங்க.. மிஸ் பண்ணிடாதீங்க!

தனக்கு நேர்ந்த இந்த இன்னல்கள் யாவும் காலச்சக்கரத்தின் சூழல் என்று இறுதியில் அறிவில் தெளிவு கொண்டு இறைவனை நோக்கி பிரார்த்திப்பார்கள். அப்படி கெட்ட நேரம் சூழ்ந்தவர்களை காலச்சக்கரத்தின் பிடியிலிருந்து காப்பாற்றி குறை தீர்க்கும் அம்மன்தான் கால தேவி எனும் கருணைதெய்வம்.

நம்முடைய வாழ்வைப்பற்றியும், நம்முடைய எதிர்கால நேரத்தைப்பற்றியும் தெரிந்த ஒரு தெய்வம்தான் ஸ்ரீ காலதேவி அம்மன். நேரத்தின் அதிபதியான காலதேவியால் ஒருவரது கெட்ட நேரத்தைக்கூட நல்ல நேரமாக மாற்றமுடியும் என்பதுதான் காலதேவி குடிகொண்டுள்ள இக்கோயிலின் தத்துவமாக விளங்குகிறது.

காத்தல், அழித்தல், பஞ்சபூதங்கள், நவகிரகங்கள், நட்சத்திரங்கள் என முப்பத்து முக்கோடி தேவர்களையும் இயக்கும் சக்தி, கால தேவிக்கு உண்டு என்று புராணங்கள் கூறுகின்றன. ஒருவரது தலையெழுத்தையே மாற்றக்கூடிய அந்த அற்புத அம்மன் கோவில் கொண்டுள்ள கால தேவி கோவில் மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரம் அருகில் உள்ள சிலார்பட்டி எனும் கிராமத்தில் அமைந்துள்ளது.

மேலும் சில ஆன்மீக தகவல்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

27 நட்சத்திரங்கள், நவக்கிரகங்கள், 12 ராசிகள் உள்ளிட்டவற்றை தன்னுள் அடக்கி இருக்கும் ‘காலதேவி அம்மன்’ கோயிலின் கோபுரங்களில் சிலைகள் ஏதும் காணப்படாத நிலையில் அங்கு நேரமே உலகம் என எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் மனித வாழ்வில் சுழலும் காலச்சக்கரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக காட்சியளிக்கிறது.

எண்கோண வடிவில் அமைக்கப்பட்ட கோபுரத்தின் உள்ளே அமைந்திருக்கும் கருவறையானது முறம் வடிவில் இருப்பதால் நெல்லில் தூசிகளை நீக்குவதுபோல கெட்டது எல்லாம் ஒன்று கூடி விலகி விடுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். கருவறையின் உள்ளே உலகத்தை இயங்க செய்யும் காலச்சக்கரத்தின் வட்ட வளையங்களின் நடுவே நட்சத்திர நாயகியாக, அபய, வரதஹஸ்த முத்திரைகளுடன் காலதேவி அமர்ந்த கோலத்தில் காட்சி தந்து அருள் பாலிக்கிறாள்.

மேலும் படிக்க: முதன் முதலில் தேர் உருவான திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில்

கால தேவியின் கட்டுப்பாட்டில் உள்ள காலச்சக்கரம் இரவில்தான் அதிக சக்தியோடு இயங்கும் என்பதால் இரவு நேரத்தில் மட்டுமே இந்த கோயில் திறக்கப்பட்டு அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. பிரபஞ்சத்தின் ஆற்றல்கள் நள்ளிரவு வேளைகளில் பூமி எங்கும் நிறைந்து காணப்படுவதால் காலதேவியின் அருளைப்பெற இரவு நேர பூஜைகளில் பக்தர்கள் வழிபாடுகள் செய்து பலனடைகின்றனர்.

பெளர்ணமி, அமாவாசை உள்ளிட்ட நாட்களில் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள், தேவிக்கு வலது புறமாக 11 சுற்றும், இடதுபுறம் 11 சுற்றும் சுற்றிய பிறகு கோவிலில் இருக்கும் ஒரு அபூர்வ கால சக்கரத்தின் முன் நின்று பதினோரு நிமிடம் அம்மனை நோக்கி தியானித்து பிரார்த்தனை செய்கின்றனர். அப்போது வழிபாடு செய்பவரின் இடதுகால் பாதத்தின் வழியாக கீழே தீமைகள் நீங்கி வலது பாதத்தின் வழியாக நல்ல விசை ஏறி நெற்றி பொட்டில் நிற்பதாக அனுபவப்பட்ட பக்தர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க: பொதுவாக யாரும் கண்டதில்லை! இனியும் உயிர்த்திருக்கும் கொல்லிமலையில் எட்டுக்கை அம்மன்

ஸ்ரீ காலதேவி இயக்கத்தில்தான் ஈரேழு புவனங்களும் இயங்குகின்றன. கால நேரம் சரியில்லாத யாவரும் இங்கு வந்து தேவியை பிரார்த்தனை செய்யும்போது வாழ்வில் நலம் பெறுவதால் உலகில் உள்ள அனைத்து இடங்களிலிருந்தும் இப்போது பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அதேபோல் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற, மூன்று பௌர்ணமி, மூன்று அமாவாசை நாட்களில் இக்கோயிலுக்குச் சென்று காலதேவியை வணங்கினால் பில்லி, சூனியம், ஏவல், தீராத வியாதிகள் என அனைத்து பிரச்சினைகளும் தீரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்