அன்பார்ந்த மாலை முரசு வாசகர்களே, கும்ப ராசியை பொறுத்தவரை ராசியில் ராகு பகவான் அமர்ந்து... வாழ்க்கையில் ஸ்பீடு ஏற்றி கொண்டிருக்கிறார்.... அதாவது புயல் வேகத்தில் உங்களுடைய செயல்பாடுகள் இருக்கும்.. புதிய புதிய வாய்ப்புகளை தேடி நீங்களும் போவீர்கள் வாய்ப்புகளும் உங்களை தேடி வந்து கொண்டிருக்கிறது... வரும் வாய்ப்புகளை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்... எந்த நல்ல ஏற்றத்திற்கும் தயாராக இருங்கள்.... ஐந்தாம் வீட்டில் குரு பகவான் அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பதன் மூலம் உங்கள் எண்ணங்கள் செயல் வடிவமாக மாறும்....
உங்களைக் குறித்து பிறர் புகழ்ந்து பேசுவார்கள்... நீங்கள் செய்யாத காரியங்கள் அல்ல, போடாத உழைப்பு அல்ல ஆனால் அதற்கெல்லாம் அங்கீகாரம் கிடைத்ததா என்றால் இல்லை.. இந்த 2026 ஆம் ஆண்டில் உங்களுக்கான அங்கீகாரம் உங்களை தேடி வர போகிறது... பிரிந்து சென்றவர்கள் ஒன்று கூடுவார்கள்.... கூடவே இருப்பவர்கள் பிரிந்து செல்ல பார்ப்பார்கள்... ராகுவின் சஞ்சாரம் வாழ்க்கைத் துணையுடன் சற்று பேச நேரத்தை ஒதுக்க வாய்ப்பு இல்லை.... அதனால் மன கஷ்டங்களும் கசப்புகள் கூட ஏற்படலாம்... பெரிய பாதிப்புகள் ஏற்படாமல் இருப்பதற்கு நீங்கள் ஆஞ்சநேயர் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது குரு பகவானின் ஒன்பதாம் வீட்டு பார்வை... சிறு வயதில் இருந்தே நீங்கள் எதற்காக ஆசைப்பட்டீர்களோ அந்த காரியங்களை உங்களுக்கு நிறைவேற்றி தர காத்திருக்கிறார்....
ஒருவர் தற்பொழுது ஒரு வேளையில் இருக்கலாம் ஆனால் அவருக்கு பாடல் பாடுவது பிடிக்கும், கவிதை எழுதுவது பிடிக்கும், ஓவியம் வரைவது பிடிக்கும், கட்டிடம் கட்டுவது பிடிக்கும், உருவாக இருந்து சொல்லித் தருவது பிடிக்கும், அரசியல் பிடிக்கும், பயணங்கள் பிடிக்கும்.... இப்படி உங்களுக்கு என்ன பிடித்து இருக்கிறதோ அந்த பிடித்தமானவைகளை 2026 இல் நீங்கள் செய்து மகிழலாம்... பொதுவாக உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் சனிபகவான் அமர்ந்திருக்கிறார் ராசி அதிபதி இரண்டாம் இடத்தில் அமரும்போது என்ற வேலையை செய்தால் வருமானம் வரும் என்பதில் பாடங்கள் கற்றுக் கொள்ளக்கூடிய நேரம்... கால புருஷன் தத்துவத்திற்கு பதினோராம் வீடாக கும்ப ராசி வருகிறது... இயற்கையிலேயே நல்ல நிலைமையில் வாழ்க்கையின் பாதையில் நீங்கள் அமரக்கூடிய அமைப்பில் தான் பிறந்திருக்கிறீர்கள்... எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஓடிக்கொண்டே இருங்கள்.... நல்லவர்கள் உங்களைத் தேடி வரவிருக்கிறது.... தேவையற்ற வீண் சிந்தனைகளை கைவிடுங்கள்... இன்றைய தொழில்நுட்ப உலகில் ராகு பகவான் உங்கள் ராசியிலேயே அமர்ந்திருக்கும் இந்த சூழ்நிலையில் வியாபாரம் செய்ய வேண்டும் என்றால் ஆன்லைன் மூலமாக முயற்சி செய்யுங்கள்.... சமூக வலைதளங்களில் உங்களுடைய அமைப்புகளை பதிவிடுங்கள்... இன்ஸ்டாகிராம் பேஸ்புக் யூட்யூப் போன்றவை உங்களுடைய பொருளாதார வளர்ச்சிக்கு உங்களின் புகழுக்கும் நன்றாக உதவி செய்யும்...
நீண்ட நாட்களாக இருப்பிடத்தை மாற்ற வேண்டும் வெளியூர் செல்ல வேண்டும் அல்லது வெளிநாடு செல்ல வேண்டும் என்று இருக்கும் அன்பர்களுக்கு கூட இந்த 2026 ஒரு பொற்காலமே.. குறைகள் என்று பார்த்தால் ஏழாம் இடத்தில் கேது பகவான் அமர்ந்திருக்கிறார் உங்களுக்கு உங்கள் வாழ்க்கை துணைக்கும் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் நிச்சயம் வந்து செல்லும்... நீங்கள் எதை நினைக்கிறீர்களோ அதற்கு நேர் மாறாக உங்கள் வாழ்க்கை துணை நினைக்க வாய்ப்பு இருக்கிறது... அதற்காக நீங்கள் சொல்லுவது சரி அவர் சொல்லுவது தவறு என்று இல்லை இந்த ராகு கேது ஒன்று மற்றும் ஏழாம் பாவகங்களில் அமர்ந்திருக்கும் காலகட்டங்களில் அப்படித்தான் தோன்ற வைப்பார் ஆனால் அது நிரந்தரமா என்றால் இல்லை...
உங்களுக்கான மிகச் சிறப்பான எதிர்காலம் வந்து கொண்டிருக்கிறது.. குருவின் ஒன்பதாம் இடத்துப் பார்வை உங்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லலாம் குழந்தைகள் வழியில் நல்ல மகிழ்ச்சியும் பெருமையும் வந்து சேரும்... நீண்ட நாட்களாக புத்திர பாக்கியம் இல்லாமல் இருக்கும் கும்ப ராசி அன்பர்களுக்கு தற்பொழுது அதற்கான காலம். ஒரு குறுகிய வட்டத்திற்குள் தெரிந்து கொண்டிருந்த நீங்கள்.... உங்களுடைய வட்டாரத்தை மிகப் பெரிதாக விரிவுபடுத்தப் போகிறீர்கள்.... அதாவது ஒரு ஊருக்கு தெரிந்த நபராக இருக்கும் நீங்கள் தற்பொழுது 10 ஊருக்கு தெரிந்த நபராக மாறப் போகிறீர்கள்... காரியத்தில் வெற்றி வேண்டும்.. அந்த வெற்றி உங்களைத் தேடி வரும் காலகட்டம்....
அன்பார்ந்த கலை துறையினரே இதோ ஐந்தாம் பாவகத்தில் பிரவேசிக்கும் குரு பகவானால் உங்களின் படைப்புகள் வெளி உலகத்திற்கு தெரிய வரப்போகிறது... நீங்கள் ரசித்து செய்யும் ஒவ்வொரு காரியமும் பிறரால் ரசிக்கப்படும்.... ஆத்மார்த்தமாக வேண்டிக் கொள்ளும் எந்த காரியமும் தெய்வத்தால் அங்கீகரிக்கப்படும்.... குரு பகவான் ஐந்திலிருந்து தெய்வ வழிபாட்டின் மூலம் அடுத்த கட்ட மேன்மையை உங்களுக்கு கொண்டு வருவார்.... ஒருவரை பிடித்திருக்கிறது திருமணத்திற்காக பேச வேண்டும் என்றால் தற்பொழுது அது நேரமல்ல... திருமண பேச்சு வார்த்தைகளையோ அல்லது அதற்கான முடிவுகளையோ சற்று தள்ளிப் போடுவது நல்லது... தாமதமாகும் ஆனால் நிறைவேறும்.... வம்பு வழக்குகளில் சிக்கிக் கொண்டிருக்கும் கும்ப ராசி அன்பர்களே அதிலிருந்து விடுபடுவதற்கான காலகட்டம்...
ஒருவேளை நீங்கள் செய்யும் தொழில் மற்றும் வியாபாரம் அல்லது உத்தியோகம் உங்களுக்கு ஒரு மாற்றத்தை கொடுக்க விரும்பும்... அந்த மாற்றத்தை நீங்கள் ஒரு முறைக்கு 10 முறை யோசித்து செயல்படுத்துவது நல்லது... இந்த மாற்றம் எனக்கான மாற்றமா இதன் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்படுமா என்பது போன்ற கேள்வியோடு அணுகுங்கள்... வேலை செய்யும் நண்பர்களுக்கு ஒரு சின்ன பிரேக் வேலையில் கிடைக்கலாம்... இருந்தாலும் உங்கள் மனதிற்கு பிடித்த காரியங்களுக்காக அந்த பிரேக் எடுத்துக் கொள்வீர்கள்... வரும் 2026 சிறப்பான ஆண்டாக உங்களுக்கு அமையும் வாழ்த்துக்கள்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்