

அன்பார்ந்த மகர ராசி அன்பர்களே காரியங்கள் கைக்கு வந்துவிட்டன ஆனால் ஏன் நிலைக்கவில்லை என்ற எண்ணத்தோடு 2025-யை முடித்து இருப்பீர்கள்... கவலை வேண்டாம் உங்களை இருகரம் கூப்பி 2026 வரவேற்கிறது... வருடத்தின் முதல் ஆறு மாதங்கள் குருபகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார்.. நன்றாக கவனியுங்கள் சின்ன சண்டையை கூட பெரிதாக்க வேண்டாம்.... உங்களைக் குறித்தோ உங்கள் சுற்றி இருப்பவர்களை குறித்தோ யார் என்ன பேசினாலும் அதை அப்படியே அமைதியாக கடந்து செல்வது நல்லது... குறிப்பாக வீட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கு உறவினர்களுக்கு மத்தியில் நடக்கும் பிரச்சினைகளுக்கு நீங்கள் செல்ல வேண்டாம்.... அப்படி போகும் பொழுது வம்பு வழக்குகளில் சிக்க நேரிடலாம்....
எனக்கு என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை சட்டென்று கோபம் வருகிறது வார்த்தைகளை விட்டு விடுகிறேன் என்று மனதில் நினைத்து... குழப்பிக் கொள்ள வேண்டாம் ஆறாம் இடத்தில் இருக்கக்கூடிய குரு பகவான் நிச்சயமாக வம்பு வழக்குகளை நோக்கியே உங்களை பயணிக்க வைப்பார்.. நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று. எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை நான் இறைவனைப் பிரார்த்தித்து அமைதியாக இருக்கிறேன் என்று எப்பொழுதும் அமைதி காக்க வேண்டும்... 2026 மே மாதம் முடிவதற்குள் நீங்கள் கிட்டத்தட்ட ஒரு மௌன விரதத்தின் அமைப்பு போலவே இருக்க வேண்டும்...
பெரிய பெரிய பிரச்சனைகள் ஏற்பட்டால் கூட அதில் உங்கள் கருத்தை முன் வைக்கலாமே தவிர சண்டையிடக்கூடாது.... வம்பு வழக்குகள் உங்களைத் தேடி வரும் இதே சமயத்தில் புதிய வேலை வாய்ப்புகளும் பொருளாதார முன்னேற்றமும் சட்டு என்று உயரப்போகிறது... எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு இருமுறை வாழ்க்கைத் துணையுடன் கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது... பெரியவர்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு வெற்றியை கொண்டு வரும்... வீட்டில் மூத்தவராக இருக்கக்கூடியவர்களிடம் அறிவுரை கேளுங்கள் அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதை காது கொடுத்து கவனியுங்கள் நிச்சயமாக அதில் உங்களுக்கு தீர்வு கிடைக்கும்...
இரண்டாம் இடத்தில் இருக்கக்கூடிய ராகு பகவான் குடும்பத்தில் சில சலசலப்புகளையும் பிரச்சனைகளையும் பேச்சின் மூலம் உருவாக்குவார்.. ஒரேடியாக ஏதாவது சொல்லப் போய் பிறகு அது பிரச்சினையாக மாற வாய்ப்பு உண்டு.. கவலை வேண்டாம் நீங்கள் நினைக்கும் காரியம் ஜூன் மாதத்திற்கு முதல் வாரத்திலேயே நடைபெற ஆரம்பித்து விடும்.... வம்பு வழக்குகளில் சிக்கி காவல் நிலையம் வரை புகார் செல்ல வாய்ப்புண்டு.. ஆனால் அவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்றால் நீங்கள் எங்கேயும் உங்கள் கருத்துக்களை பெரிதாக சண்டையாக முன் வைக்காமல் அமைதியாக இருந்து விடுங்கள்....
அஷ்டமத்தில் கேது பகவான் அமர்ந்து நம்மிடம் என்ன இருக்கிறது நமக்கு என்ன வர வேண்டும் என்பது போன்ற காரியங்களில் முன்னேற்றங்களை கொடுப்பார்... வாழ்க்கைத் துணையின் குடும்பத்தாரிடம் சற்று அனுசரணையாக போவது நல்லது... இரண்டாம் இடத்து ராகு பகவான் தூரதேசத்திலிருந்து நல்ல தகவல்களை கொண்டு வருவார்.. கணவன் மனைவிக்குள் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பிரிய வேண்டாம்... திடீரென்று உங்கள் மீது வழக்கு போடுகிறேன் என்று யாராவது வழக்கு தொடுத்தால் அதை சுமூகமாக முடித்து விடுங்கள்... இந்த காலகட்டங்களில் குடும்பப் பிரிவு என்பது ஏற்பட வாய்ப்பு இருக்கிறது...
ஜனவரி மாதத்திற்கு பிறகு செவ்வாய் பகவான் உங்கள் ராசியிலேயே உச்சம் பெற போகிறார்... லாவாதிபதி செவ்வாய் பகவான் உங்கள் ராசியை தேடி வருவதால் நிலம் இடம் வீட்டு மனை வாகனம் போன்றவற்றில் மூலம் நல்ல லாபம் உண்டு... குரு பகவானின் பத்தாம் இடத்துப் பார்வை புதிய தொழில்களை உங்களுக்கு உருவாக்கிக் கொடுக்கும்... ஒரு வேலைக்கு இரண்டு வேலை வியாபார விருத்தி போன்றவையும் நீங்கள் செய்யலாம்...
கூட்டு வியாபாரம் செய்வதை தவிர்ப்பது நல்லது... வாழ்க்கை துணையுடன் சில சில பிரச்சனைகள் ஏற்படுமாயின் அவர்களை வாகனத்தில் அமர வைத்து ஒரு ஷார்ட் டிரைவ் போய் வாருங்கள்... அதாவது சிறு தூர பயணம்... வாழ்க்கைத் துணையுடன் பயணங்கள் மேற்கொள்வதன் மூலம் மகர ராசிக்கு வரக்கூடிய குடும்ப பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.....
ஏற்கனவே அஷ்டம பாவத்தில் கேது அமர்ந்திருக்க ஆறாம் பாவத்தில் குரு அமர்ந்திருக்க தீராத வம்பு வழக்குகளில் சிக்காமல் இருக்க நவகிரகங்களை வழிபட்டு வருவது நல்லது.... ஆன்மீக காரியங்களாக நீண்ட தூர பிராயணங்கள் மேற்கொள்வீர்கள்.... புதிய வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.... மே மாதத்திற்கு பிறகு உங்களுக்கு ஏற்றமான காலகட்டம்.. நீங்கள் நினைத்தது நடக்க ஆரம்பித்து விடும்... புதிய புதிய மனிதர்களை சந்திக்க போகிறீர்கள்... பெரிய மனிதர்களின் தொடர்பு ஏற்படும் அதே போல உங்களுக்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வர ஆரம்பித்து விடும்.... எதற்கும் கலங்காமல் ஓடிக் கொண்டே இருங்கள்... உழைப்பதற்கு சற்றும் தயங்காமல் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக முடிக்கும் உங்களுக்கு இந்த வருடத்தின் கடைசி ஆறு மாதங்கள் சிறப்பான மாதங்களாக அமையவிருக்கிறது..... சனிக்கிழமை தோறும் சனி பகவானுக்கு விளக்கேற்றி வாருங்கள்.... மூன்றாம் பாவகத்தில் அமர்ந்திருக்கக்கூடிய சனி பகவான் உங்களுடைய வெற்றியை தாமதமாக கொண்டு வருவார் என்று நினைத்தாலும் அதே சனி பகவான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவேன் என்று சிறப்பான வெற்றியை கொண்டு வருவார்..... ராகு பகவானை குரு பார்ப்பதால் குடும்பத்தில் அவ்வளவு பெரிய சண்டைகள் ஒன்றும் ஏற்படப் போவதில்லை... 2026 நல்ல ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் வணக்கம்....
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.