ஆன்மீகம்

புத்தாண்டு ராசிபலன் 2026 - பொருளாதார முன்னேற்றம் அடைய போகும் மீனம் ராசி!

ஒரு வேலைக்கு இரண்டு வேலை பார்த்து அதன் மூலம் அலைச்சல் ஏற்படலாம் ஆனால் பெரிதாக நீங்கள் அலட்டிக் கொள்ள மாட்டீர்கள்....

மாலை முரசு செய்தி குழு

அன்பார்ந்த மாலை முரசு வாசகர்களே 2025 சற்று கலவையான பலன்களை உங்களுக்கு நடைபெற்று இருக்கும் குறிப்பாக தொழிலில் நீங்கள் எடுத்து வைத்த காரியங்கள் பாதி நடந்து விட்டது மீதி நடக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறீர்களா? 2026 தொழில் முன்னேற்றத்திற்கான காலகட்டமாக அமையும் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்...

குரு பகவானின் நான்காம் இடத்து சஞ்சாரம் முதல் ஆறு மாதத்தில் மிதுன ராசியில் இருப்பதால் உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்த பெயர் கிடைக்கும்... இதனால் வரையில் நீங்கள் செய்த வேலைக்கு சரியான அங்கீகாரம் இல்லாமல் கூட போகலாம்... ஆனால் 2026 முதல் ஆறு மாதத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காரியமும் உத்தியோகத்தில் வெற்றி பாதைக்கு இட்டுச் செல்லும்.... 12 ஆம் வீட்டில் ராகு பகவான் அமர்ந்து இருக்கிறார்.... ஒரு வேலைக்கு இரண்டு வேலை பார்த்து அதன் மூலம் அலைச்சல் ஏற்படலாம்... ஆனால் பெரிதாக நீங்கள் அலட்டிக் கொள்ள மாட்டீர்கள்... என்ன செலவு செய்கிறோம் எதற்காக செலவு செய்கிறோம் என்பதை மட்டும் சற்று சிந்தித்து செலவழிப்பது நல்லது..... லாபம் வரும் என்று நினைத்து செலவு செய்யும் பட்சத்தில் சற்று லாபத்திற்கு குறைவாக கிடைத்தால் கூட மனதிற்கு நிம்மதி இருக்காது அல்லவா? ஆகையால் செலவழிப்பதை பார்த்து செலவழியுங்கள்....

ஆறாம் இடத்தில் அமர்ந்திருக்க கூடிய கேது பகவானால் சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றக்கூடும்.... ஆனால் பெரிய பிரச்சனைகள் உங்களுக்கு வராது..... எதற்காக போராடுகிறோம் என்ன செய்கிறோம் என்பது போன்ற காரியங்களோடு நீங்கள் சிந்தனையை மேற்கொண்டால் அது உங்களுக்கு நல்ல சிறந்த மாற்றத்தை கொண்டு வரும்... மே மாதத்திற்கு பிறகு குரு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் பாவகத்தில் உச்சம் பெறுகிறார்... நீங்கள் எதையெல்லாம் சாதிக்க வேண்டும் என்று சிந்தித்து வைத்திருந்தீர்களோ அதையெல்லாம் சாதித்து முடிப்பதற்கான காலகட்டம்.. உங்கள் சிந்தனை செயல் வடிவமாக மாறும்...

ஜென்ம சனி தற்போது உங்களுக்கு நடந்து கொண்டிருக்கிறது... வேலையை முடித்தீர்களா என்று உயர் அதிகாரிகள் கேட்டால் முடித்து விட்டேன் தற்பொழுது முடியப்போகிறது என்று உங்கள் பதில் இருக்கும்... எந்த காரியமும் மந்தமாக நடைபெறுவது போன்று உங்களுக்கு தோன்றும்... காரணம் நீங்கள் வேகமாக இருப்பீர்கள்.... சனி பகவான் உங்களுக்கு வரும் பிரச்சனைகளில் இருந்து உங்களை விடுதலையாக்குவார்... உங்களுடைய லாபாதிபதி சனி பகவான் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் மற்றவர்கள் உங்களைப் பார்க்கும் பார்வை சற்று உயர்வானதாகவே இருக்கும்....

இடம் மாற்றம் சிலருக்கு ஏற்படலாம்... அவற்றை ஏற்றுக் கொண்டாலும் நல்லது தான் நடக்கும்... சனி பகவானின் பார்வை உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் பதிவாவதால் புதிய தொழில் வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.. அந்த வாய்ப்புகள் மூலம் நல்ல லாபமும் ஆதாயமும் கிடைக்கும்... 12 ஆம் வீட்டில் இருக்கக்கூடிய ராகு பகவானை நான்காம் வீட்டில் இருக்கக்கூடிய குரு பகவான் பார்வையிடுகிறார் குரு பார்வையின் மூலம் அந்நிய தேசத்திலிருந்து நல்ல செய்திகள் உங்களை வந்து சேரும்.... தூர தேசத்து தொடர்பான தொழில் வியாபாரம் முன்னேற்றங்கள் நல்லவைகளாக அமையும்...

உற்றார் உறவினர்களிடத்தில் நல்ல அன்பும் மரியாதையும் உருவாகும்.... இரண்டாம் வீட்டுக்கு அதிபதியான சுக்கிர பகவான் நல்ல நிலைகளில் 2026 இல் உங்களுக்கு பயணிப்பதால் பெரிய பிரச்சினைகள் ஒன்றும் ஏற்படப் போவதில்லை... இரண்டு மற்றும் ஒன்பதாம் அதிபதி செவ்வாய் பகவான் ஜனவரி மாதத்திலேயே உச்ச நிலைக்கு லாப ஸ்தானத்தில் அமருகிறார்..... பொருளாதார முன்னேற்றம் பெயர் புகழ் அந்தஸ்து போன்றவை உங்களைத் தேடி வரும்...

வருகின்ற படங்கள் எப்படி செலவாகிறது என்பது எனக்கு தெரியவில்லை என தவிக்கும் மீன ராசி அன்பர்களே ஆண்டின் முதல் இரண்டு மாதத்திலேயே நல்ல பொருளாதாரம் முன்னேற்றம் ஏற்படும்... அடுத்தவர்களோடு உங்களை ஒப்பிட்டுக் கொண்டு குறைத்து மதிப்பிட வேண்டாம்... மற்றவர்கள் வளர்ந்து கொண்டே போகிறார்கள் நான் அப்படியே இருக்கிறேன் என்று உங்களை நீங்களே குறை சொல்ல வேண்டாம்.. ஒரு காலம் வரும் உங்களுடைய கடமை மற்றும் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் உண்டு.... நீங்கள் சதா வேலை என்று இருக்கும் இந்த சமயத்தில் உடல்ரீதியான காரியங்களையும் கவனித்துக் கொள்ளுங்கள்... வேலைக்கு வேலை சாப்பிடுங்கள், சத்தான ஆகாரங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.. உடலை பார்த்துக் கொள்ளுங்கள்.

புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும்... அதன் மூலம் ஆதாயமும் உண்டு... உங்களை வைத்து மற்றவர்கள் ஆதாயம் அடைய பார்ப்பார்கள் அதை சுதாரித்துக் கொண்டு அவர்களிடத்தில் கவனமாக இருப்பதும் நல்லது.... நீண்ட தூர பிரயாணங்கள் மூலம் வெற்றி உண்டாகும்.... வம்பு வழக்குகள் உங்களைத் தேடி வந்தால் எந்த விதத்திலும் உங்களுக்கு சம்பந்தம் இல்லாதது போல நடந்து கொள்ளுங்கள்.... காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதற்கு ஏற்ப வரும் வாய்ப்புகளை நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்... 2026 இல் உங்களுக்கு பல வாய்ப்புகள் தேடி வர போகிறது....

எடுத்த முயற்சிகளில் சற்று தாமதமாகலாம் ஆனால் தடைபடாது... உங்களுக்கான முக்கியமான தெய்வம் என்று பார்த்தால் முருகரை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள்... அருகில் இருக்கக்கூடிய முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று தீபம் போடுங்கள் உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள்..... முருகப் பெருமான் உங்களுடைய ராசிக்கு இரண்டு மற்றும் ஒன்பதாம் வீட்டுக்கு அதிபதியாகி அவர் உச்ச நிலையை அடையப் போகிறார்... எனவே வருடத்திற்கு ஒரு 40 முதல் 45 நாட்களுக்கு நடைபெறும் இந்த மிகச் சிறப்பான காலகட்டம் உங்களுக்கு 2026 இல் நடைபெறப்போகிறது ஆண்டின் துவக்கத்திலேயே ஆகையால் அதை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் முருகரின் அருளால் உங்களுக்கு அனைத்தும் கிடைக்க வாழ்த்துக்கள் வணக்கம்..

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்