

அன்பார்ந்த மாலை முரசு ஆன்மீக வாசகர்களே 2026 வேலை நிமித்தமாக போராட்டம் அல்லது வேலை மாற்றம் ஒருபுறம் மற்றொருபுறம் திடீர் பயணங்களால் அலைச்சல் பண இழப்பு போன்ற கலவையான பலன்களையும் சந்தித்து இருப்பீர்கள்... வருகின்ற 2026 ஆம் ஆண்டு சிம்ம ராசி அன்பர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.... சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவான் முப்பது நாளைக்கு ஒருமுறை வெவ்வேறு ராசிகளில் மாறிக்கொண்டே இருப்பார்... வருட கிரகங்களான குரு பகவான் ராகு கேது பகவான் மற்றும் சனி பகவான் போன்றோர் உங்கள் ராசிக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து அந்த பாவத்தின் மூலம் உங்களை வழி நடத்துவார்கள்... அப்படி பார்த்தால்....
குருவானவர் உங்கள் ராசிக்கு 11 ஆம் பாவத்தில் அமர்ந்து 2026 ஆம் ஆண்டு முதல் ஆறு மாதத்திற்கு லாபத்தின் குருவாக செயல்பட போகிறார்... அப்படி என்றால் ஐந்து மற்றும் எட்டாம் வீட்டு அதிபதி பதினோராம் பாவகத்தில் அமர்ந்திருப்பதன் மூலம்... உங்கள் சிந்தனைகள் செயல் வடிவமாக மாறும்... அதாவது திட்டம் போட்டு பல நாட்களாக வைத்திருந்த சில காரியங்கள் நல்லபடியாக நடைபெறும் அதன் மூலம் லாபமும் கிடைக்கும்... குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும்... குழந்தையைப் பற்றி சதா சிந்தித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாக முடியும் என்று ஏங்கித் தவிக்கும் பெற்றோர்களுக்கும் இது ஒரு சுபிட்சமான காலகட்டம்...
பூர்வீகத்தில் எங்களுடைய நிலம் இருக்கிறது இடம் இருக்கிறது வீடு இருக்கிறது அதை பராமரிக்க முடியவில்லை அல்லது விற்க முடியவில்லை என்று யோசிக்கும் அன்பர்களுக்கு கூட இந்த 2026 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதம் பொற்காலமே... அது தொடர்பான நல்ல தீர்வுகள் உங்களுக்கு கிடைக்கும்... 11 ஆம் வீட்டில் அவரும் குரு பகவான் ஐந்தாம் வீட்டை பார்ப்பதால் குழந்தை பாக்கியம் இல்லாமல் ஏங்கி தவிக்கும் சிம்மராசி அன்பர்களுக்கு குழந்தை வரம் கிடைக்க வாய்ப்பு உண்டு... தெற்கு முகமாக அமர்ந்திருக்கும் குரு தக்ஷிணாமூர்த்தியை சென்று தரிசியுங்கள்....
போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்... எவ்வளவு பெரிய கடினமான போட்டியாக இருந்தாலும் கூட உங்களால் சுலபமாக அதில் வெற்றி பெற முடியும்... இதுவரை நீங்கள் செய்த காரியத்திற்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று ஏங்கும் அன்பர்களே குரு பகவான் 11 ஆம் வீட்டில் அமர்ந்து ஐந்தாம் பாவத்தை பார்ப்பதன் மூலம் உங்களுக்கு புகழ் அங்கீகாரம் போன்றவை வந்து சேரும்.... அடுத்ததாக சனி பகவானின் எட்டாம் வீட்டு சஞ்சாரத்தை பற்றி பார்க்கலாம்...
சனி பகவானின் எட்டாம் வீட்டு சஞ்சாரம்:
சனி பகவான் எதையும் அவ்வளவு சுலபமாக கொடுத்து விடுவது இல்லை... அவர் அமர்ந்திருக்கும் பாவத்தை எவ்வளவு கேட்டாலும் பொறுமையாக தான் கொடுப்பார்.... அப்படி வேகமாக வேண்டுமென்றால் மூத்தவர்களால் மட்டுமே முடியும்... அதாவது வீட்டில் உள்ள பெரியவர்களை வைத்து பேசி அதன் மூலம் தீர்வு காண்பதன் மூலம் தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.... எடுத்துக்காட்டு ஏதாவது ஒரு கடன் பிரச்சனையோ அல்லது எதிரிகளின் தொல்லையோ நோயின் மூலம் ஏற்படும் தாக்கமோ உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமாயின்.... அந்த விஷயத்தை உங்கள் பெற்றோரிடத்திலோ அல்லது தாத்தா பாட்டி உற்றார் உறவினரில் மூத்தவர்களாக இருப்பார்கள் அல்லவா அவர்களிடத்திலோ சொல்லுவதன் மூலமும் அவர்களை வைத்து காரியத்தை நகர்த்துவதன் மூலம் உங்களுக்கு வெற்றிகள் கிடைக்கும்...
சனி பகவான் ஒரு அனுபவ சாலி மற்றும் மூத்தவர்களால் மட்டுமே நல்லவைகளை உங்களுக்கு கொண்டு வந்து கொடுப்பார்... ராகு பகவான் எழில் அமர்ந்திருக்கிறார் தோஷமா? என்றால்? இல்லை... தற்காலிகமாக ராகு பகவான் எழில் அமர்ந்திருப்பது உங்களுக்கு வீட்டு வாழ்க்கைத் துணை உடன் சில சண்டை சச்சரவுகளை கொண்டு வரும் என்பது உண்மை ஆனால் அதுவே உங்களுக்கு பெரிய பிரச்சினையாக கொண்டு வருமா என்றால் இல்லை....
நீங்களும் அதை பேசி பெரிதாக வேண்டாம்... சிம்ம ராசிக்கு ஏழாம் வீட்டில் ராகு பகவான் இருக்கிறார் என்றால் பிரச்சனை உங்களிடத்தில் இருந்து தான் ஆரம்பிக்கும்... நீங்கள் செய்யும் ஏதோ ஒரு செயலோ அல்லது உங்களுடைய வாழ்க்கைத் துணை சிறியதாக ஏதோ ஒன்று சொல்லிவிட்டால் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதோ உங்களின் பக்கம் தான் பெரிதாக செயல்படுமே தவிர வாழ்க்கைத் துணையின் பக்கம் இருக்காது... ஆகவே நிச்சயமாக நீங்கள் நாவடக்கத்தோடு செயல்படுங்கள்... பொறுமை மிக அவசியம்.... ஒன்று மற்றும் ஏழாம் பாவகங்களில் ராகு கேது அமரும்போது பிரச்சனை பெரிதாகி பிரிவுகளை ஏற்படுத்தும்... வாழ்க்கைத் துணையை விட்டோ அல்லது விரும்பி அவர்களை விட்டு பிரிந்தால் போதும் என்ற மனநிலைக்கு சிம்மராசி அன்பர்கள் ஆட்பட்டு விடுவார்கள்.... அதற்கெல்லாம் இடம் கொடுக்க வேண்டாம்...
கேது பகவான் ராசியிலேயே அமர்ந்திருக்கிறார்... எந்த காரியத்தையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் மிக பொறுமையாக அதில் உள்ள நல்லவைகளை ஆராய்ந்து தான் நீங்கள் செய்யப் போகிறீர்கள்.... ஆனால் சற்று அதிரடியாக நீங்கள் செய்ய வாய்ப்புண்டு.... அந்த அதிரடியே உங்களுக்கு சிக்கல்களை கொண்டு வரலாம்... மற்றவர்கள் சிந்திப்பதற்கு முன்பாகவே நீங்கள் சிந்தித்து விடுவீர்கள் அதை செயலாகத்திற்கு கொண்டு வரும்போது சில சிக்கல்கள் ஏற்படும்.... எப்படி என்றால் நீங்கள் ஒரு இடத்திற்கு போக வேண்டாம் அப்படி போனால் ஆபத்து என்பதை பற்றி உங்களுக்கு தெரிந்தவர்களிடத்தில் குடும்பத்தார் இடத்திலோ நீங்கள் பேசியிருப்பீர்கள்.... அப்படி பேசும் சமயத்தில் அவர்களுக்கு அது பற்றின ஞானம் இல்லாமல் இருக்கலாம்... ஆனால் நிச்சயமாக நீங்கள் பொறுமையாக எடுத்துச் சொன்னால் அதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்... அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்று நீங்கள் சண்டை போட வேண்டாம்....
லட்சுமி நரசிம்மரை சென்று வாரம் தோறும் தரிசித்து வாருங்கள்... உங்களின் வேகம் கட்டுப்படும்... குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்காது... பொருளாதார முன்னேற்றமும் ஏற்படும்... வாழ்த்துக்கள் வணக்கம்!!!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.