அன்பார்ந்த விருச்சிக ராசி அன்பர்களே 2025 ஆம் ஆண்டு பல சவால்களையும் சிக்கல்களையும் சந்திக்கும் ஆண்டாக தான் அமைந்திருக்கும்.. குழப்பமான மனநிலை அடுத்து என்ன செய்வது என்ற யோசனை. ஆனால் தூரத்தில் ஒளி தெரிகிறது என்ற எண்ணம்... இப்படியே நகர்ந்து இருக்கும்.. வீட்டில் சில சுப காரியங்களுக்கான ஏற்பாடுகள் கூட நடந்து இருக்க வாய்ப்புண்டு..... ஆனாலும் கூட வருகின்ற 2026 உங்களுக்கு கலவையான பலன்கள் நடைபெறும் என்பதை பற்றி பார்க்கலாம்..
வருடத்தின் முதல் ஆறு மாதத்தில் குரு பகவான் அஷ்டமத்தில் சஞ்சாரம் செய்கிறார்... தீர்க்க முடியாத பிரச்சனைகளை நீங்களே உருவாக்க வேண்டாம்... பேசுகின்ற பேச்சில் கவனத்தோடு இருங்கள் அது மற்றவர்களை காயப்படுத்தும்.. ஒருவேளை நீங்கள் சண்டைக்கு செல்கிறீர்கள் என்றால் நல்லது நீங்கள் வெற்றி பெறுவீர்கள்... ஆனால் முடிந்த வரை 100% சண்டையை தவிர்த்து விடுங்கள்... காரணம் நீங்கள் செய்யும் ஒவ்வொரு பிரச்சனையும் வழக்குக்கு இட்டுச் செல்லும் அளவிற்கு பெரிய பாதிப்புகளை உங்களுக்கு ஏற்படுத்தலாம்...
வேலை செய்யும் இடத்தில் கூட சில சில சண்டை சச்சரவுகள் உருவாக்கி அதன் மூலம் வழக்குகள் ஏற்படும்... அதிலிருந்து விடுபடுவதற்கு நீங்கள் மௌன விரதத்தை கடைபிடியுங்கள்... கூடுமானவரை யாரிடமும் பெரிதாக பேசிக் கொள்ள வேண்டாம்... இந்த விவகாரம் வருடத்தின் முதல் ஐந்து மாதங்களுக்கு மட்டுமே... அதாவது ஜனவரி மாதத்தில் தொடங்கி மே மாதம் இறுதி வரை குரு பகவான் உங்களுக்கு அஷ்டமத்தில் சஞ்சாரம் செய்யும் காலகட்டத்தில் அமைதியாக செல்ல வேண்டுமே தவிர... பிறகு குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெறும் நிலையில் உங்களுடைய ராசிக்கு 9 ஆம் வீட்டில் அமரும் அந்த சந்தர்ப்பத்தில் அனைத்து காரியங்களையும் வெற்றிகரமாக செய்து கொடுப்பார்....
உங்களை எதிர்ப்பதற்கு ஒரு மன தைரியம் வேண்டும் என்ற அளவிற்கு எதிரிகளுக்கு பயத்தை காட்டி விடுவார் குருபகவான்.... புத்திர ஸ்தானத்தின் அதிபதி குரு பகவான் ஒன்பதாம் வீடான பாக்கியஸ்தானத்தில் அமரும்போது குழந்தை பாக்கியம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது என்று கவலைப்பட்ட அன்பர்களுக்கு இதோ குருவின் அனுக்கிரகம் உங்கள் ராசியின் மீது பதிவாகிவிட்டது.... ஐந்தாம் வீட்டை ஒன்பதாம் இடத்தில் இருந்து மே மாதத்திற்கு பிறகு குரு பகவான் பார்ப்பதன் மூலம் நீங்கள் எண்ணுகின்ற எண்ணங்கள் செயல் வடிவமாக மாறும்....
சனிபகவான் ஐந்தாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்.. மூத்தோர் சொல் கேட்பது நல்லது என்ற வாசகத்தின் அடிப்படையில்... நீங்கள் ஏதாவது ஒரு காரியத்தில் இறங்குவதற்கு முன்பு நல்ல அனுபவ சாலிகளிடத்தில் ஒரு முறைக்கு இரண்டு முறை அறிவுரை கேட்பது நல்லது.. குறிப்பாக ஜனவரியில் இருந்து மே மாதம் வரை குரு பகவானும் அஷ்டமத்தில் மறைகிறார் சனி பகவானும் ஐந்தாம் இடத்தில் அமர்ந்திருக்கிறார்... நீங்கள் விரும்பும் நபரிடம் கூட சண்டை போட வாய்ப்பு இருக்கிறது.... திருமணத்திற்காக யாரையாவது விரும்புகிறீர்கள் என்றால் அவை திருமணம் வரை செல்வதற்காக நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்... மே மாதத்திற்கு பிறகான நல்ல காலகட்டங்களில் அது குறித்து பேச்சு வார்த்தையை ஆரம்பியுங்கள்....
பொருளாதார முன்னேற்றத்தை பொறுத்த வரை ஜனவரி பிப்ரவரி மார்ச் ஏப்ரல் போன்ற காலகட்டங்களில் குருபகவான் அஷ்டமத்தில் அமர்ந்தாலும் கூட இரண்டாம் வீட்டை பார்க்கிறார் அப்படி என்றால் ஏற்கனவே நீங்கள் வாங்கி இருந்த சம்பளத்தோடு கூட போனஸ் உங்களுக்கு கிடைக்க வாய்ப்பு உண்டு... பெரிய அளவில் இல்லை என்றாலும் கூட மனதிற்கு ஏதோ ஏற்ற அளவில் உங்களுக்கு பண வருவாய் உண்டாகும்....
காலத்தை பயிர் செய் என்பது போன்ற விஷயங்களுக்கு தயாராக விடுங்கள்.... ராகு பகவானின் நான்காம் வீட்டு சஞ்சாரம் வாகனங்களில் பழுது ஏற்பட்டு அதன் மூலம் மன அலைச்சல்கள் ஏற்படலாம்.... ஒரு இடத்தில் சௌகரியமாக அமர முடியாது என்ற சூழ்நிலையில் சதா சுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.... வேலையில் யார் என்ன சொன்னாலும் அமைதியாக சென்று விடுங்கள்... பத்தாம் இடத்தில் இருக்கக்கூடிய கேது பகவான் நிச்சயமாக வேலையில் சிக்கல்களை மட்டுமே ஏற்படுத்துவார்...
மற்றவர்களை புரிந்து கொள்ள வேண்டும் உங்களை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற இரு நிலையில் நீங்கள் மற்றவர்களை புரிந்து கொண்டு அமைதியாக சென்று விடுங்கள் என்பது என் கருத்து... காரணம் உங்கள் பக்கத்தில் 100% நியாயம் இருக்கும் ஆனால் அவை சபையில் எடுபடாது... இந்த பத்தாம் இடத்துக்கு கேது பகவான் என்ன செய்வார் என்றால் தொழிலை எப்படியாவது முடக்கி... வேலையில் இருந்து உங்களை வெளியே அனுப்ப வேண்டும் என்ற தீர்க்கமான யோசனை உங்களுக்கு கொடுப்பார்...
ஆனால் கேது பகவான் பத்தாம் வீட்டில் இருக்கும் இந்த காலகட்டத்தில் வேலையை விட்டு போக வேண்டாம்... அப்படி போனால் புதிய வேலை கிடைக்குமா என்றால் கிடைக்கும் ஆனால் அந்த வேலையில் நிம்மதி கிடைக்குமா என்றால் அது 50% மட்டுமே.... காரணம் இந்த மாதிரியான காலகட்டங்களில் கேது பகவான் பத்தில் அமர்ந்திருக்க சூரியனும் சில சமயங்களில் நல்ல நிலையை விட்டு விலகும் பொழுது உங்களுக்கு வேலையில் சுணக்கம் ஏற்படும்....
விருச்சக ராசி அன்பர்களே பணத்தை வைத்துக்கொண்டு பெரிய முதலீடு போட்டு ஏமாற வேண்டாம்.... அடுத்தவர்களிடத்தில் அனுபவசாலிகள் இடத்தில் அறிவுரையை கேட்டு பிறகு நடந்து கொள்ளுங்கள்... ஒரு இடம் விட்டு மற்றொரு இடத்திற்கு அலைந்து கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்... குறிப்பாக வாடகை வீட்டில் இருப்பவர்களோ சொந்த வீட்டில் இருப்பவர்களோ சில இடங்களை மாற்றும் பொழுது உங்களுக்கு நன்மை ஏற்படும்... அதாவது வாடகை வீட்டார் வேறு இடத்திற்கு குடி பெயர்வதோ... சொந்த வீட்டில் இருப்பவர்கள் உள் அறையில் வேறு ஒரு அறைக்கு இடம் மாறுவது கூட ஏற்பட வாய்ப்பு உண்டு... வீட்டின் தன்மையை நிறத்தை பெயிண்ட் போன்ற வகைகளில் மாற்றி உங்களுடைய நான்காம் இடத்து ராகவே குறைத்துக் கொள்ளுங்கள்...
ஆஞ்சநேயர் வழிபாடு மிகச்சிறந்த ஏற்றத்தை உங்களுக்கு கொண்டு வரும் வாழ்த்துக்கள் வணக்கம்!!!
மாலைமுரசு செய்திகளுக்காக ஜோதிட ரத்னா சதீஷ்...
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.