

அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 2025 ஆம் ஆண்டு சற்று ஏற்றம் இறக்கம் மிகுந்த ஆண்டாகவே அமைந்தது... அதிலும் அடுத்த கட்டமாக 2026 ஆம் ஆண்டில் நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதற்கான அடித்தளம் 2025 இல் போடப்பட்டிருக்கும்... பாக்கியஸ்தானத்தில் அமர்ந்திருக்கக் கூடிய குரு பகவான் உங்களுடைய பிரச்சனைகளில் இருந்து எப்படி வெளியே வருவது என்பதை கற்றுக் கொடுப்பார்....
இந்த 2026 ஆம் ஆண்டு உங்களுடைய ராசிக்கு எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்... சனி பகவான் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்... எவ்வளவு தூரம் பிரச்சனைகளை இழுத்து சென்றாலும் சரி... அல்லது இந்த காரியங்கள் தற்பொழுது சரியாக முடிவடையவில்லையே என்று ஏக்கத்தோடு இருந்தாலும் சரி.. ஆறாம் வீட்டில் சனிபகவான் அமர்ந்திருக்கும் பொழுது தாமதமாக கூடிய எந்த ஒரு விஷயமும் மிக விரைவாக நடைபெறும்... நான்கு மற்றும் ஐந்தாம் அதிபதி ஆறில் அமரும் பொழுது... வீடு இடம் தொடர்பான சிக்கல்களில் இருந்து விடுதலை கிடைக்கும்... சிறிய பிரச்சனைகள் உங்களுக்கு தோன்றும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை ஆனாலும் கூட உங்கள் பக்கம் நியாயம் இருக்கும் அதன்படி வெற்றியும் கிடைக்கும்...
ஏன் எதற்கு என்ற கேள்விகளோடு வாழ்க்கை நகர்த்திக் கொண்டிருப்பீர்கள் ஆனால் அதற்கான விடை இந்த 2026 இல் உங்களுக்கு கிடைக்கப் போகிறது? தீர்க்கமாக அடுத்ததாக என்ன செய்ய வேண்டும் என்ற விடையையும் நீங்கள் எதிர்பார்க்கலாம்.... 11 ஆம் வீட்டில் கேது பகவான் அமர்ந்திருக்கிறார்... கேட்காமலேயே இறைவனின் அருள் ஆசி உங்களை வந்து சேரும்... பெரிய மாற்றங்கள் 2026 இல் நிகழப்போகிறது... 10-ஆம் இடத்தில் குரு பகவான் மே மாதத்திற்கு பிறகு வந்து அமர போகிறார் போக்குவரத்து துறை, உணவு சம்பந்தப்பட்டமான துறை, வெளியூர் வெளிநாடு போன்ற இடங்கள் தொடர்பு, புதிய வேலை வாய்ப்புகள் போன்றவை உங்களுக்கு சாதகமாக முடியும்...
ஐந்தாம் வீட்டில் ராகு பகவான் அமர்ந்திருக்கிறார்.... ஒரு காரியத்தை சிந்திக்க போய் 9 காரியங்களைப் பற்றி சிந்தித்து அதன் மூலம் தலைவலியை நீங்களே உருவாக்கிக் கொள்ளாதீர்கள்.. உங்களை சமாதானப்படுத்த பத்து பேர் வருவார்கள்... ஆனால் எதற்காக நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள் என்பதை பற்றி பிறகு சிந்தித்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும்... அப்படி தேவையில்லாத காரியங்களை மனதில் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம்... நீங்கள் சிந்திக்க சிந்திக்க மன விரயம் தான் ஏற்படுமே தவிர அதற்கான தீர்வுகள் கிடைக்காது... அப்படி சதாசி சிந்தித்துக் கொண்டே இருக்கிறீர்கள் என்றால் நாக சர்ப்பங்கள் அனைத்து கோவில்களிலுமே இருக்கும் அவர்களை சென்று வழிபட்டு கற்பூரம் ஏற்றிவிட்டு அமைதியாக இரண்டு நிமிடம் அவர்கள் அருகிலேயே அமருங்கள் உங்களுக்கு தேவையான விடை அந்த வாரமே கிடைத்துவிடும்...
துலாம் ராசியை பொறுத்தவரை அரசியலில் இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல எதிர்காலம் என்றே சொல்லலாம்... கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு இது ஒரு ஏற்றமான காலகட்டம்.. புதிய வேலைவாய்ப்புகள் உங்களை வந்து சேரும்....வாகனம் வாங்கி மகிழுங்கள்... புதிய நண்பர்களின் தொடர்பு ஏற்படும்.... குறிப்பாக ஆறாம் இடத்தில் இருக்க கூடிய சனி பகவானே உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டிற்கு வரக்கூடிய குரு பகவான் பார்வையிட்டு நீண்ட நாட்களாக இருந்த நோய்வாயில் இருந்து விடுதலை கிடைக்கும்.... ஜூன் மாதம் தொடங்கி உங்களுக்கு சில சில பிரச்சனைகள் வந்தாலும் கூட அதிலிருந்து நிரந்தர தீர்வு காண குருபகவான் வழி செய்வார்... செவ்வாய் பகவானின் சஞ்சாரம் உங்கள் ராசிக்கு சாதகமான இடங்களை தொடுவதால் இந்த வருடம் முழுவதும் பெரிய பாதிப்பு இல்லாமல் நீங்கள் நல்ல நிலையில் நகர்த்தி செல்லலாம்...
நீங்கள் விரும்பிய நபரை மணக்கும் வாய்ப்பு இந்த ஆண்டு கிடைக்கும்... குடும்ப ஸ்தானத்தை குரு பகவான் பார்வையிடுவதால் பொருளாதார முன்னேற்றம் தனபாக்கியம் போன்றவை கிடைக்கும்.... ஒன்பதாம் வீட்டில் இருக்கக்கூடிய குரு பகவான் வருடத்தின் முதல் ஆறு மாதத்தில் உங்கள் ராசியின் மீது அவருடைய பார்வை பதிவாவதால் யாரிடத்தில் எப்படி பேச வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ப புரிதல்களை உங்களுக்கு ஏற்படுத்துவார்....
உழைப்பு உங்கள் ரத்தத்திலேயே ஊறிப்போனது... அதனாலதான் சனி பகவான் துலாம் ராசியில் உச்சம் அடைகிறார்... மிக வேகமாக பம்பரம் போன்று சுழன்று எந்த காரியத்தையும் சுலபமாக முடித்து விடுவீர்கள்... எடுத்த காரியத்தை ஜெயமோடு முடிக்கும் ஆண்டுதான் 2026....
ப்ரொமோஷனுக்காக காத்திருக்கும் அன்பர்களுக்கு கூட இது ஒரு சிறந்த நேரம்... மூட்டு வலி முழங்கால் வலி போன்றவை ஏற்படுமாயின் மருத்துவரை அணுகி அதற்கான தீர்வுகளை காணுங்கள்.... மேல் வயிறு தொடர்பான பிரச்சனைகள் அவ்வபோது வந்து செல்லும்.... அதையும் பார்த்துக் கொள்ளுங்கள்.... தாயார் காமாட்சியம்மனை வழிபடுங்கள்.... உங்களுக்கு இருக்கக்கூடிய சங்கடங்கள் பிரச்சனைகளிலிருந்து தாயார் உங்களை விடுதலைப்படுத்துவார்.... மதுரை மீனாட்சி அம்மனின் படத்தை பூஜை அறையில் மாட்டி வையுங்கள்.... தாயாரின் அனுக்கிரகம் உங்களோடு எப்பொழுதும் இருக்குமாயின் பிரச்சனைகள் வீட்டு வாசலோடு முடிந்து விடும்...
வீட்டை சுத்தமாக வைப்பது நல்லது... பிரச்சனைகளை சிறுவயதில் இருந்து சமாளித்துக் கொள்ளும் உங்களுக்கு இந்த வருடம் 2026 அவ்வளவு ஒன்றும் பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தாது... பிள்ளைகள் வழியில் மனக்கஷ்டங்கள் அவ்வப்போது வந்து செல்லும் ஆனால் அது நிரந்தரமான பிரச்சினையாக இருக்காது... சில சமயங்கள் பிள்ளைகள் வெளியூர் சென்று படிக்க வேண்டி வரலாம் அவர்களை ஹாஸ்டலில் சேர்க்கும் வாய்ப்புகள் கூட உங்களுக்கு ஏற்படலாம்... அதைப் பற்றியும் வருந்த வேண்டாம் நீங்கள் பிள்ளைகளைப் பிரிந்து வெகு தூரம் சென்று வருவதற்கான வாய்ப்புகளும் கூட சில சமயங்களில் ஏற்படும்.... இதற்கெல்லாம் தீர்வாக நவகிரகத்தில் இருக்கக்கூடிய குரு பகவானுக்கு விளக்கு போட்டு வாருங்கள்..... வாழ்த்துக்கள் வணக்கம்!!!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.