sankarankovil sankara narayana swamy kovil Admin
ஆன்மீகம்

சிவனும் விஷ்ணுவும் ஒன்றாய் அவதரித்த சங்கரநாராயணன் ஆலயம்

உடல் நோய்களுக்கு மருந்தாக புற்று மண்ணை பிரசாதமாக வழங்கப்படும் கோவிலை பற்றியும், அங்கு விடுதலை போராட்ட வீரர் புலித்தேவன் ஜோதியாய் மறைந்த கூறப்படும் செய்திகளை காணலாம்

Anbarasan

அம்மன் ஒற்றைக்காலில் தவமிருந்து இந்த உலகத்திற்கு சிவனும் ஹரியும் ஒன்றே என்று உணர்த்திய அற்புத திருத்தலம் தான் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவிலில் அமைந்துள்ள சங்கரநயினார் கோவிலாகும்

ஐம்பூதங்களில் முதல் கோவில் என்றும் மண் தளம் என்றும் அழைக்கப்படும் இந்த ஆலயம் உக்கிரன் கோட்டையை ஆண்டு வந்த உக்கிரபாண்டிய மன்னனால் 10-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு 125 அடி உயர இராஜ கோபுரத்தோடு கம்பீரமாக காட்யளிக்கிறது.

மேலும் சில ஆன்மீக தகவல்களை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

சங்கன், பதுமன் என்ற நாக அரசர்கள் மட்டுமின்றி , இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன், சிவனை நோக்கி ஊசி முனையில் ஒற்றை காலில் தவமிருக்க, சிவபெருமானும் விஷ்ணுவும் ஒரு சேர இணைந்து சங்கர நாராயணராக காட்சியளித்து, சைவ - வைணவ மக்களிடையே சமத்துவத்தை ஏற்படுத்திய ஆலயம் தான் இந்த அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில்.ஆகும்

இந்த நிகழ்வுகளை நினைவூட்டும் விதத்தில் இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் 11 நாட்கள் நடத்தப்படும் ஆடித்தபசு திருவிழாவின் போது, அன்னை கோமதி அம்பாள் தினந்தோறும் ஒவ்வொரு அலங்காரங்களில் தவமிருக்கும் நிகழ்ச்சியும், பதினோராம் நாளன்று தவம் இருக்கும் அன்னைக்கு சிவபெருமானும் விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி தரும் நிகழ்ச்சியும் லட்சக்கணாக்கான பக்தர்கள் முன் நடந்தேருகிறது

மூலஸ்தானத்தில் சிவன் பாதி, விஷ்ணு பாதி இணைந்து சங்கர நாராயணராக எப்போதும் சர்வ அலங்காரத்துடன் காட்சித்தருவதால் இங்கு அபிஷேகங்கள் செய்யபடுவதில்லை.

மேலும் படிக்க : குழந்தை வரம் அருளும் குளத்துப்புழை ஐயப்பன் இத்தனை மகத்துவம் மிக்க தலமா?

இந்நிலையில் கோமதி அன்னையின் நான்கு கரங்களில் பாசம் அங்குசம் வைத்து மேல் இரு கைகளும் மற்றும் கரும்பு வில்லும் ஏந்தி கண்களுக்கு தெரியாமல் அரூபமாக காட்சி தருவதாகவும், அந்த தோற்றாத்தினை, தவ வலிமை பெற்ற யோகிகளால் மட்டுமே காண முடியும் என்றும் கூறப்படுகிறது. அப்படி யாருக்கு அந்த தரிசனம் கிடைக்கபெறுகிறதோ அவர்களுக்கு அஷ்டமா சித்திகளும் வசப்படும் என்றும் கூறப்படுகிறது.

கோமதி அம்மன் சன்னதியின் முன்பாக ஸ்ரீலஸ்ரீ வேலப்ப தேசிகரால் நிறுவப்பட்ட ஸ்ரீ சக்கரத்தில் அமர்ந்து தியானம் செய்தால் வேண்டுவது நிறைவேறும் என்பதும் இங்கு பலருக்கு நடந்த நிகழ்வுகளாகும்.

இத்தலத்தில் பாம்புகளின் அரசர்களான சங்கன்,பதுமன் வழிபட்டதால் இங்குள்ள புற்று மண் பிரதான பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்படுகிறது. தீராத நோயுள்ளவர்கள் இந்த மண்ணை நீரில் கரைத்து சாப்பிடும் போது நோய்கள் நீங்குவதாக பக்தர்களால் நம்பபடுகிறது.

வீடுகளில் பூச்சி, பல்லி, வயல்களில் பாம்புத் தொல்லை இருந்தால் மூலவர் சங்கரலிங்கனாருக்கு வேண்டிக் கொண்டு, அந்தந்த பூச்சிகளின் உருவங்களை வாங்கி உண்டியலில் காணிக்கையாக அளித்தால் தொல்லை நீங்குவதாக பலனடைந்த பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க: நிலப்பிரச்னைகள் தீர்க்கும் திருச்சுழி பூமிநாதர் கோவில்

தமிழகத்தில் எங்கும் இல்லாத வகையில் இக்கோவிலில் வீற்றிருக்கு சர்ப்ப விநாயகரை வழிபட்டால் திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.

இக்கோவிலில் நடந்த அதிசய நிகழ்வில் ஒன்றாக, கோமதி அம்மனின் தீவிர பக்தனும் இந்திய சுதந்திரப் போருக்கு முதல் முழக்கமிட்ட மன்னன் புலித்தேவனை ஆங்கிலேய படையினர் பிடித்து பாளையங்கோட்டைக்கு அழைத்து சென்றனர். அப்போது கடைசியாக அன்னை கோமதியை வழிபட வேண்டும் என்று ஆங்கிலேயரிடம் அனுமதி பெற்று, கோவிலுக்கு சென்ற புலித்தேவர் அங்கேயே ஜோதியாய் மறைந்தார் என்பது ஐதீகம். இதனால் சங்கரலிங்க சுவாமி சன்னதிக்கும் சங்கரநாராயணர் சுவாமி சன்னதிக்கு இடைப்பட்ட பகுதியில் . மன்னன் புலித்தேவன் திருவுருவப்படம் வைக்கப்பட்டுள்ளது.

இக்கோவிலின் இன்னோரு சிறப்பாய் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 21, 22, 23 ஆகிய நாட்களிலும். ஜூன் மாதம் 21, 22, 23 ஆகிய 6 நாட்கள் சூரிய பகவான் சங்கரலிங்க சுவாமி வழிபடுவது கண்கொள்ளாக் காட்சியாக நடைபெறுகிறது .

மார்கழி மாதத்தின் போது பெருமாள் கோவில்களில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி, சிறப்பகுரிய ஒன்றாக போற்றி புகழப்படுகிறது

இத்தலத்தில் மாவிளக்கில் நெய் தீபமேற்றி வழிபாடுகள் செய்து வேண்டுதல் வைப்போருக்கு திருமண தடை நீங்குவதுடன் நாகதோஷம் நீங்கி குழந்தை பேரு கிடைப்பது இன்றளவும் நடந்து வருகிறது. விஷ ஜந்துகளின் பிடியில் இருந்து மக்களை பாதுகாக்கும் புண்ணிய ஸ்தலமாகவும் இக்கோவிலுக்கு செல்வோம் இன்றும் பல அற்புதங்களை அறிந்து அருள் பெறுவோம்.

மாலை முரசு செய்திகளுக்காக தென்காசி செய்தியாளர் கணேஷ்குமாருடன் கலைமாமணி நந்தகுமார்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்