AI Image
ஆன்மீகம்

சபரிமலை ஐயப்பனின் ஆதி மூலஸ்தானம்.. 5000 ஆண்டுகள் பழமையான திருக்குன்னப்புழா ஸ்ரீ தர்மசாஸ்தா கோயிலின் அதிசய வரலாறு!

இக்கோவில் கருவறையில் தர்மசாஸ்தாவின் 21 அங்குல அரிய 'பஞ்சலோக' சிலை மற்றும் அவரது மனைவி மற்றும் மகனின் சிலைகள் இங்கு காணப்படுகின்றன.

Nanda Kumar (நந்த குமார்)

சபரிமலை ஐயப்பனின் 'ஆதி மூலஸ்தானம்' திருக்குன்னப்புழா ஸ்ரீ தர்மசாஸ்தா ஆலயம்

சிவபெருமானுக்கும், மோகினி அவதாரம் எடுத்த மகாவிஷ்ணுவுக்கும் பிறந்த 'ஹரிஹரபுத்திரனே' தர்மசாஸ்தா. அறத்தையும் நீதியையும் நிலைநாட்டுபவர் என்பதால் இவர் தர்மசாஸ்தா எனப் போற்றப்படுகிறார். புராண காலத்திலிருந்தே பூர்ணா, புஷ்கலா ஆகிய இரு தேவியருடன் இல்லறக் கோலத்தில் அருள்பாலிப்பவர் இவரே.

மகிஷி என்ற அரக்கியை வதம் செய்வதற்காக, பந்தள மன்னன் ராஜசேகரனின் தவத்திற்கு இறங்கி, பம்பை நதிக்கரையில் குழந்தையாகத் தோன்றிய அவதாரமே ஐயப்பன். 'மணிகண்டன்' என்ற திருநாமத்துடன் வளர்ந்து, தன் அவதார நோக்கம் முடிந்ததும் சபரிமலையில் தர்மசாஸ்தாவின் திருவுருவத்தோடு ஐக்கியமானார்.

சபரிமலையில் வீற்றிருக்கும் ஐயப்பனான ஆதிமூலத் தர்மசாஸ்தாவை, பரசுராமர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கேரளத்தின் பல பகுதிகளில் தம் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்து வைத்தார். ஆற்றல் மிகுந்த அத்திருத்தலங்கள், தொன்மை மாறாமல் இன்றளவும் நித்திய வழிபாடுகளுடன் திகழ்ந்து வருகின்றன.

அப்படிப்பட்ட திருதலத்தில் ஒன்றுதான்

கேரளாவில் ஆலப்புழா மாவட்டத்தில் 5000 ஆண்டுகளுக்கும் மேலான சாஸ்தாவின சிலை அமைந்துள்ள திருக்குன்றப்புழா தர்மசாஸ்தாவு கோயில் ஆகும்

கிழக்கின் வெனிஸ்" என்று அழைக்கப்படும் ஆலப்புழா அமைதியான உப்பங்கழிகள், அழகிய கடற்கரைகள் மற்றும் அழகிய நிலப்பரப்புகளை கொண்டதாகும்

ஆலப்புழா,இயற்கை அழகு, கலாச்சார செழுமை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை சின்னமாக கருதப்படுகிறது.

அப்படிப்பட்ட இயற்கை இதழ் விரிக்கும் ஆழப்புழாவின் கார்த்திகப்பள்ளியில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் புராணமுக்கியத்துவம் வாய்ந்த, வரலாற்று சிறப்புமிக்க திருக்குன்னபுழா ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் அமைந்துள்ளது

திருக்குன்னப்புழா ஸ்ரீ தர்மசாஸ்தா கோயில் சபரிமலை ஐயப்பனின் 'மூலஸ்தானம்' என்று நம்பப்படுகிறது.

பல அரக்கர்களை கொன்ற பரசுராமர் தொடர்ந்து தனது தந்தையைக் கொன்றவர்களை பழிவாங்கிக் கொண்டிருந்தார். பின்னர் அவரது கொலை செயல்கள் அவரது மனதை காயப்படுத்தியதை அடுத்து திருக்குன்னபுரத்தை அடைந்து ஓய்வெடுத்தார்.

அப்போது அவரது ஆன்மிக அறிவை பயன்படுத்தி சிறப்பான கட்டிடகலை கொண்ட கோவிலை எழுப்பி ஸ்ரீ தர்மசாஸ்தாவின் புனித சிலை பிரதிஷடை செய்து நிறுவினார் . இதனையடுத்து அங்குள்ள கடலில் நீராடி, தனது முன்னோர்களுக்கும், அவரால் கொல்லப்பட்ட அனைத்து அரக்கர்களுக்கும் அஞ்சலி செலுத்தினார்

இவரது பித்ருபூஜையால் ஆன்மாக்களின் ஓய்வு பெற்றன. இவை அனைத்தும் 'ஆடி'அமாவாசை' நாளில் செய்யப்பட்ட காரணத்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும், ஆடி அம்மாவாசை நாளில் இக்கோவிலில் பக்தர்கள் தங்கள் முன்னோர்களுக்கு பலிபிண்டம்' மற்றும் பித்ருபூஜை வழங்குங்கின்றனர்

இக்கோவில் கருவறையில் தர்மசாஸ்தாவின் 21 அங்குல அரிய 'பஞ்சலோக' சிலை மற்றும் அவரது மனைவி மற்றும் மகனின் சிலைகள் இங்கு காணப்படுகின்றன. இது போன்ற அமைப்பு உலகில் வேறெங்கு காணமுடியாத காட்சியாக உள்ளது. மேலும் துணை தெய்வங்களும் இந்த கோவிலில் நிறுவப்பட்டுள்ளன. அதில் கோயில் வளாகத்தின் வடகிழக்கு பக்கத்தில் முருகப்பெருமானும், மகா விஷ்ணு, கணபதி, ஸ்ரீ துர்க்கை, யக்ஷி, நாகயக்ஷி மற்றும் நாகராஜா ஆகியோர் இங்கு துணை தெய்வங்களாக உள்ளனர்.

இந்த கோயில் புராணங்களின்படி, சனி கிரகத்தல் ஏற்படும் அனைத்து துண்பங்களையும் இக்கோவிலில் வீற்றிருக்கும் ஐயப்ப சுவாமியை வழிபடுவதன் மூலம் நீக்க முடியும் என்பது ஐதீகமாக உள்ளது

கி.மு. 232 இல், பேரரசர் அசோகரின் மகன் மகேந்திரன், தென் மாநிலங்களுக்கு வருகை தந்த போது இக்கோவிலில் உள்ள தர்ம சாஸ்தாவின். சிலையின் மகிமையால் ஈர்க்கப்பட்டார். இதனையடுத்து , 18 ஏக்கர் வளாகத்தில் ஒரு சிறந்த வழிபாட்டுத் தலத்தை சாஸ்தாவிற்கு அமைத்து வழிபடத் தொடங்கினார். அதனைத்தொடர்ந்து அசோக வம்சத்தின் சீடர்கள் தொடர்ந்து கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகள் மற்றும் பூஜைகளை செய்ததாக வரலாறுகள் தெரிவிக்கின்றன

கி.பி 4 ஆம் நூற்றாண்டில், இலங்கைக்கு செல்லும் வழியில் மன்னர் சந்திர குப்தர் ஸ்ரீமூலவாசத்திற்கு விஜயம் செய்ததாக வரலாற்று பதிவுகள் கூறுகின்றன.

.இக்கோயிலில், 1500 ஆண்டுகள் பழமையான 'ஸ்ரீகோவிலின்' மேற்குச் சுவரில் ஒரு பெரிய 'சுவர் சித்திரம் காணப்படுகிறது.

இக்கோவிலில் சனி தோஷத்தின் தீமைகளை நீங்கவும், முன்னோர்களுக்காக பிரார்த்தனைகள் செய்யவும்,

குடும்ப அமைதிக்காவும் மற்றும் செழிப்புக்காவும்

ஆயிரக்கணக்கான மக்கள் இக்கோவிலில் தர்ம சாஸ்தாவை வணங்கி வழிபடுகின்றனர்

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.