சில நூற்றாண்டுகளுக்கு முன்பு போரில் வெற்றி பெற்றால் தலைகளை தானமாக தருகிறோம் என்று காளி தேவியை வணங்கி, பின்னர் போரில் வெற்றி பெற்றவுடன் வீரர்கள் சிரசு தானம் அளித்த செய்திகள் நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது.
இந்த தமிழ் புத்தாண்டு ராசி பலன்களை காண இங்கே கிளிக் செய்யவும்
அளவற்ற சக்தியும், பக்தியும் நிறைந்த அக்கோவில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தில்லை காளியம்மன் கோவில் என்ற பெயரில் விளங்குவதோடு, அங்கு கிழக்கு நோக்கிய சன்னிதியில் எட்டு கரங்களில் ஆயுதங்களைக் கொண்ட உக்கிர காளியாக அருள் பாலிக்கிறார் தில்லை காளியம்மன்.
பல்லவ மன்னன் கோப்பெரும் சோழன், இந்த உக்கிர காளியை வணங்கி போரில் வெற்றி கண்டதாகவும், அதன்பின் தில்லைக்காளியின் பெருமையை போற்றி சிதம்பரத்தில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரத்துடன் கோவில் அமைத்ததாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன.
சிவனால் சாபம் பெற்று காளியாக மாறிய பார்வதி தேவி, பின்னர் சிதம்பரத்தில் நடராஜ பெருமானுடன் நடனமாடி தோல்வியுற்று, ஊர் எல்லையிலேயே தில்லை காளியம்மனாக வீற்றிருப்பதாக தல புராணம் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: பொதுவாக யாரும் கண்டதில்லை! இனியும் உயிர்த்திருக்கும் கொல்லிமலையில் எட்டுக்கை அம்மன்
புகழ்பெற்ற சிதம்பரம் தில்லை நடராஜர் கோவிலில் சிவனும், பார்வதியும் நடனமாடிய இடமே பொற்சபை என்று அழைக்கப்படுகிறது. அழிவில்லாத இந்த அற்புத இடத்திற்கு பக்தர்கள் செல்வதற்கு முன்னதாக சிதம்பரம் எல்லையில் தனிக்கோயிலில் எழுந்தருளியுள்ள இந்த தில்லைக்காளியை தரிசித்துவிட்டுதான், நடராஜரை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
கோவிலின் சன்னதியில் கிழக்கு நோக்கி உக்ர மாகாளியாக எட்டு கரங்களில் ஆயுதங்களைக் கொண்ட தில்லை காளியாகவும், மேற்கு நோக்கிய சன்னதியில் சாந்தமான நான்முக பிரம்ம சாமுண்டேஸ்வரியாகவும் காட்சி தந்தவாறு பக்தர்களுக்கு அருள் தருகிறார்.
நல்லெண்ணெய்யால் மட்டுமே அபிஷேகம் செய்யப்படும் உக்கிர காளி எப்போதும் குங்குமக் காப்பிலே காட்சி தருவதோடு, தன்னை வழிபடும் பெண்களுக்கு விதவைக் கோலம் ஏற்படாதிருக்க தாமே விதவையாக வெள்ளை வஸ்திரம் தரித்து சுமங்கலிகளுக்கு அருள் செய்வதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: இந்திர காந்த கல்லால் ஆன நிறம் மாறும் கேரளபுரம் விநாயகர்
எந்த நல்ல காரியம் தொடங்குவதற்கு முன்பும் இங்குள்ள உக்ர காளியை வணங்கினால் காரியம் தடையின்றி வெற்றியாக அமையும் என்பது நிச்சயம் என்பதால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னே போருக்குச் சென்ற வீரர்களும், மன்னர்களும் .போரில் வெற்றி பெற்றால் தங்கள் தலையை தானமாக தருகிறோம் என்று பிரார்த்தனை செய்து வெற்றி வாகை சூடினர். பின்னர் தங்கள் பிரார்த்தனையின்படி தலைகளை தானமாக தந்த காட்சிகளும் கோவில் வளாகத்தில் காணப்படுகிறது.
நடராஜப் பெருமானின் பத்து தீர்த்தங்களில் ஒன்றான சிவப்பிரியை தீர்த்தம் உள்ள இந்த கோவிலில், உற்சவ மூர்த்தியாக அகோரவீரபத்திரர், ஏழுகரங்களுடன் காணப்படும் விநாயகர், சுமார் ஐந்து அடி உயரமும் ஐந்து அடி சுற்றளவும் கொண்ட மிகப் பெரிய நாகதேவர் சிலைகளும் காணப்படுகிறது.
செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் இங்கே நடைபெறும் ராகு கால பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து தேவியிடம் தங்கள் பிரார்த்தனைகளை சமர்ப்பணம் செய்கின்றனர்.
மேலும் படிக்க: தீய நேரங்களை நீக்கி நன்மைகளைத் தரும் கால தேவி கோவில்
இந்த காளிக்கோவிலில் நின்ற கோலத்தில் சரஸ்வதி தேவி வீணை வித்யாம்பிகை' என்ற பெயரில் காட்சியளிப்பதால் கல்வியில் சிறந்து விளங்க வியாழக்கிழமைகளில் தேவிக்கு பகர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்கிறார்கள்.
தோற்றத்தில் உக்கிரமாக இருந்தாலும், அள்ளித்தருவதில் தாயாக இருக்கும் இந்த அம்மனுக்கு ஆடி மாதத்தில் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வெள்ளை நிற வஸ்திரம் சாத்தி, குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமண தோஷம், குழந்தை பாக்கியம் இல்லாமை , செய்வினை மற்றும் பில்லி சூனியத்தால் அவதிப்படுபவர்கள், கடன் மற்றும் எதிரிகள் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் துன்பங்களில் இருந்து விலகுவது நிச்சயம்.
மாலை முரசு தொலைக்காட்சி செய்திகளுக்காக சிதம்பரம் செய்தியாளர் செல்வகணபதியுடன் கலைமாமணி நந்தகுமார்....
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்