சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ட்ரைல்ஸ் பார்க்க அழைக்கப்பட்டுள்ள இளம் வீரர்"அயுஷ் மஹத்ரே" இவரது சிறப்பான ஆட்டத்தை பார்த்து தோனியே பாராட்டியுள்ளார் இவரை பற்றி விரிவான தகவல்களை காண்போம் , மும்பையின் விராரில் பிறந்த இவர் , தற்போது இந்திய கிரிக்கெட் உலகில் ஒரு கவனிக்கதக்க வீரராக வளம் வருகிறார். இந்த 17 வயதுடைய இவர், மும்பை அணியைச் சேர்ந்தவர். அவர் தற்போது ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே டிராபி மற்றும் இந்திய அண்டர்-19 அணிகளில் விளையாடியிருக்கிறார். அவர் மிகவும் திறமையான ஒரு துவக்க பேட்ஸ்மேன் தனது சிறப்பான பேட்டிங் திறமைகள் மற்றும் உறுதியான மனோபாவத்தால் கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
கிரிக்கெட் பயணத்தின் தொடக்கம்:
அயுஷ் மஹத்ரே அவருடைய கிரிக்கெட் பயணத்தை வலது கை பேட்ஸ்மேனாகவும், வலது கை ஆஃப் பிரேக் பந்துவீச்சாளராகவும் தொடங்கினார். இவர் கிரிக்கெட் மீதி வைத்திருந்த அதித பற்றும் இவரின் அசைக்க முடியாத உழைப்பும் முதல் முதலில் அறிமுகமாகி, மும்பை அணிக்காக விளையாடும். வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது, அயுஷ் மஹத்ரே, தனது முதல் சில ஆட்டங்களிலேயே அவருடைய திறமையை நிரூபித்து, அனைவரின் கவனத்தயும் தன்னை நோக்கி திருப்பினார், அடுத்தடுத்த போட்டிகளான ரஞ்சி ட்ரோஃபி மற்றும் விஜய் ஹசாரே ட்ரோஃபி போன்ற போட்டிகளில் பங்கேற்று தனக்கான ஒரு தனி ஸ்டைலை உருவாக்கி பல சாதனைகளை படைத்தார்.
விஜய் ஹசாரே டிராபில உலக ரெக்கார்ட்:
2024 டிசம்பர் 31-ல் நடந்த,விஜய் ஹசாரே டிராபி மேட்ச்ல நாகாலாண்டு, அணிக்கு எதிராக விளையாடி 181 ரன்கள் அடிச்சாரு, அவருடைய 17 வயது 168 நாட்கள்ல இந்த சாதனையை அடைஞ்சார், இது யஷஸ்வி ஜெய்சுவால் அவர்களுடைய உலக ரெக்கார்டை உடைச்சாரு. அந்த இன்னிங்ஸ்ல 11 சிக்ஸ் மற்றும் 15 பவுண்டரிகளை அடிச்சு, மும்பை அணிக்கு 403 ரன்கள் எடுக்க உதவினார். இந்த சம்பவம் அவரு மேல கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முந்தய கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு பெரிய மதிப்பை கொடுத்ததுனு சொல்லலாம் .
ரஞ்சி டிராபில முதல் செஞ்சுரி:
2024-25 ரஞ்சி டிராபி சீசன்ல, "ஆயுஷ் மஹத்ரே"மகாராஷ்டிரா , அணிக்கு எதிரான தனது முதல் செஞ்சுரியை அடிச்சாரு. அந்த மேட்ச்ல அவர் 176 ரன்கள் எடுத்தாரு , ப்ரித்வி ஷா வின் பேட்டை பயன்படுத்தி இந்த சாதனையை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது . இது அவரு மேல ரசிகர்கள் முன்னாடி இருந்த மதிப்பை மேலும் அதிகப்படுத்தியது. மேலும் இவர் இந்திய அண்டர்-19 அணியில் தொடக்க பேட்ஸ்மேனாக சிறப்பாக விளையாடி, அண்டர்-19 ஆசிய கோப்பையில் முக்கிய பங்களிப்பை வழங்கினார்.CSK இப்போ திடீர்னு
CSK அழைப்பு :
2025 ஏப்ரல் 3-ல் (இன்று), சென்னை சுபர் கிங்ஸ் அவரை மீண்டும் ட்ரையல்ஸ் பண்ண அனுப்பியிருக்கிறாங்க. ரசிகர்கள் இப்போ அவர் CSK அணியில் இணைய முடியுமா nu எதிர்பார்க்கறாங்க. இது அவரு கேரியர்ல மற்றொரு பெரிய வாய்ப்பாக அமையும் என எதிர்பாக்குறாங்க, ஆனா இப்போதைக்கு இவரால ஆடமுடியாது, வேற யாராவது டீம் விட்டு வேலைய போன தான் ஆடமுடியும் னு தகவல்கள் கிடைத்து இருக்கு.
தனிப்பட்ட வாழ்க்கை:
அயுஷ் மஹத்ரேவின் வெற்றிக்கு பின்னால, முக்கிய காரணமாக இருக்குறது அவருடைய குடும்பம் என்று தெரிவித்துள்ளார். இவர் தினமும் 80 கிலோமீட்டர் தொலைவு பயணம் செய்து தான் பயிற்சி செய்யணுமாம், இந்த செயல் அவருடைய, அர்ப்பணிப்பையும் தீர்மானத்தையும் காட்டுகிறது. அவர் தனது ரோல் மாடல் "ரோஹித் ஷர்மாவை"பின்பற்றி, குறிப்பாக அவரது புல் ஷாட் என்றால் இவருக்கு மிகவும் பிடிங்கும் என்கிறார்.
இவருடைய திறமையும். விடாமுயற்சியும் இவரை வருங்கால கிரிக்கெட் உலகமே, கொண்டாடும் ஒரு வீரராக மற்றும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர், இவ்வளவு இளம் வயதிலே இவர் படைத்த சாதனைகள் மிகவும் வரவேற்கத்தக்கதே உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்