CSK vs RR மேட்ச் நாள் வரும்.. சேப்பாக் நிரம்பும்.. ஆனா, அங்க இருக்கறவங்க எல்லாம் True Fans-ஆ இருப்பாங்களா? என்ன நடந்தது?

இதுக்கு பின்னால ஒரு சிம்பிள் லாஜிக் இருக்கு. டிமாண்ட் அதிகம், சப்ளை கம்மி. சேப்பாக் ஸ்டேடியத்துல
CSK vs RR மேட்ச் நாள் வரும்.. சேப்பாக் நிரம்பும்.. ஆனா, அங்க இருக்கறவங்க எல்லாம் True Fans-ஆ  இருப்பாங்களா? என்ன நடந்தது?
Published on
Updated on
3 min read

இன்று நடந்த CSK vs RR மேட்சுக்கான டிக்கெட்ஸ் விற்பனை, வழக்கம் போல சில நிமிடங்களிலேயே விற்பனை ஆயிடுச்சு. ஆன்லைன் பிளாட்ஃபார்ம்ஸ்ல ரசிகர்கள் வேகமா டிக்கெட் புக் பண்ண ட்ரை பண்ணாங்க, ஆனா சர்வர் க்ராஷ், டைம் அவுட்னு பலருக்கு ஏமாற்றம். ஆனா, அதுக்கப்புறம் தான் ஒரு ட்விஸ்ட் X-ல “CSK vs RR டிக்கெட்ஸ் அவெய்லபிள்! 10k, 15k, 18k—DM பண்ணுங்க!”னு போஸ்ட்ஸ் பறக்க ஆரம்பிச்சது. அதே டிக்கெட்ஸ், ஆரம்ப விலைய விட பல மடங்கு ஏத்தி, ஓப்பனா விக்கறாங்க.

இதை எல்லாம் பார்க்கும் போது மனசுல ஒரு கேள்வி எழுது இவங்க டிக்கெட் வாங்கினது மேட்ச் பார்க்கவா, இல்ல பிசினஸ் பண்ணவா? IPL இப்போ கிரிக்கெட் விளையாட்டா இருக்கா, இல்ல பணம் சம்பாதிக்கற மார்க்கெட்டா மாறிடுச்சா?

டிக்கெட் விற்பனை: ஒரு டிஜிட்டல் யுத்தம்

இன்னைக்கு காலையில ஆரம்பிச்ச டிக்கெட் சேல்ஸ் ஒரு போர் மாதிரி தான் நடந்துச்சு. ஒருத்தர் தனது ட்விட்டர்ல, “C ஸ்டாண்ட், 18k, சூப்பர் வியூ, சீரியஸ் பையர்ஸ் மட்டும்"-னு போஸ்ட் போட, "இன்னொருத்தரு , “ரெண்டு டிக்கெட்ஸ், each 15k, ஃபாஸ்ட்!” என்று பதிவிட்டிருக்கார். இது ஒரு சின்ன சாம்பிள் தான், இப்படி நூறு நூறு போஸ்ட்ஸ். இதுல இருந்து ஒண்ணு தெளிவ தெரியுது டிக்கெட் வாங்கினவங்க எல்லாரும் மேட்ச் பார்க்க ஆர்வமா வாங்கல. சில பேர் இத ஒரு தொழிலா தான் பார்க்கறாங்க.

பிசினஸ் மைண்ட்: டிக்கெட்ஸ் டு டாலர்ஸ்

இதுக்கு பின்னால ஒரு சிம்பிள் லாஜிக் இருக்கு. டிமாண்ட் அதிகம், சப்ளை கம்மி. சேப்பாக் ஸ்டேடியத்துல 38,000 சீட்ஸ் தான். ஆனா, CSK ஃபேன்ஸ் மில்லியன்ல கணக்க இருகாங்க, டிக்கெட்ஸ் ஓப்பன் ஆன உடனே, ஃபாஸ்ட் இன்டர்நெட், ஷார்ப் டைமிங் வெச்சு, ஒரு க்ரூப் ஆளுங்க பல டிக்கெட்ஸ் வாங்கிடறாங்க. இவங்க CSK-ல தீவிர ரசிகர்களா இருக்கணும்னு அவசியம் இல்ல. அவங்களோட டார்கெட் ரீசெல் பண்ணி லாபம் பார்க்கறது. ஒரு 5,000 ரூபா டிக்கெட்ட 15,000-க்கு வித்தா, 200% ப்ராஃபிட்! இது ஷேர் மார்க்கெட் ட்ரேடிங் மாதிரி லோ ரிஸ்க், ஹை ரிவார்ட். IPL-ல எமோஷனல் அட்டாச்மெண்ட்ட பயன்படுத்தி, இவங்க ஒரு புது மார்க்கெட் கிரியேட் பண்ணியிருக்காங்க.

ஆனா, எல்லாரையும் ஒரே மாதிரி சொல்லிட முடியாது. சில பேர் உண்மையாவே மேட்ச் பார்க்க டிக்கெட் வாங்கி, லாஸ்ட் மினிட்ல வேலை, ஃபேமிலி பிரச்சனைனு போக முடியாம போயிருக்கலாம். அவங்க டிக்கெட்ஸ் விக்கிறது தப்பு இல்ல, ஆனா விலைய ஏத்தி விக்கறது தான் பிரச்சனை. ஒரு சின்ன பர்சன்டேஜ் ஆளுங்க இப்படி இருக்கலாம், ஆனா பெரிய ஸ்கேல்ல இது நடக்கும் போது, ஜென்யூன் ஃபேன்ஸ் அவுட் ஆஃப் தி கேம் ஆயிடறாங்க.

நம்பர்ஸ் பேசுது

கடந்த சீசன்கள பார்த்தா, CSK vs MI மாதிரி பிக் மேட்ச்களுக்கு டிக்கெட்ஸ் ரீசெல் சைட்ஸ்ல, 1 லட்சம் ரூபா வரைக்கும் போயிருக்கு. இந்த மேட்சுக்கு, இப்போதைக்கு 18,000-னு ஒரு மிடில் ரேஞ்ச் சீட்டுக்கு விலை போடுறாங்க. ஆபிஷியல் ரேட்ட விட 3-4 மடங்கு அதிகம். தமிழ்நாட்டுல ஒரு நாள் சராசரி இன்கம் 700 ரூபா இதோட ஒப்பிடும் போது, 18,000 ரூபா ஒரு டிக்கெட்க்கு கொடுக்கறது எவ்ளோ பெரிய சுமை? பல ஃபேமிலிஸ் மாசக்கணக்கா சேமிச்சு, ஒரு மேட்ச் பார்க்க ட்ரீம் பண்ணுவாங்க. இந்த விலை ஏற்றம் அந்த ட்ரீம்ஸ காலி பண்ணுது.

X-ல ஒரு ஃபேன் எழுதியிருக்கார் டிக்கெட் கிடைக்கல, ஆனா இப்போ எங்க பார்த்தாலும் 10k-க்கு அவெய்லபிள்னு சொல்றாங்க. என்ன நியாயம் இது?” இன்னொருத்தர் எழுதியிருக்காரு “IPL இப்போ கிரிக்கெட் இல்ல, பணம் சுருட்டற இடம்-னு.

IPL: ஸ்போர்ட்ஸ் 'டு' கார்ப்பரேட்

IPL 2008ல ஆரம்பிச்ச போது, ஒரு புது ஐடியாவா வந்துச்சு கிரிக்கெட் + என்டர்டெயின்மெண்ட். சியர்லீடர்ஸ், பாலிவுட், பார்ட்டிஸ்னு ஒரு புது ஃபார்முலா. அது ஹிட் ஆயிடுச்சு 2024ல லீக் வேல்யூ 11 பில்லியன் டாலர்ஸ். டிவி ரைட்ஸ், ஸ்பான்ஸர்ஷிப்ஸ், டிக்கெட் சேல்ஸ்னு பணம் கொட்டுது. டீம்ஸ் Brands ஆயிடுச்சு, பிளேயர்ஸ் Assets-ஆ மாறிட்டாங்க, ஃபேன்ஸ் Customers-ஆ மாறிட்டாங்க . டிக்கெட் சேல்ஸ் ஒரு சிம்பிள் ப்ராசஸ்ல இருந்து, இப்போ ஒரு டிமாண்ட் சப்ளை வார் ஆயிடுச்சு.

சிஸ்டம் ஃபெயிலியர்: யார் பொறுப்பு?

CSK மேனேஜ்மெண்ட், BCCI இத பார்த்துட்டு தான் இருக்காங்க. CSK, ஃபேன்ஸ்க்கு சப்போர்ட்டா, மெட்ரோ, MTC பஸ்ஸோட டை-அப் பண்ணி, மேட்ச் டேல ஃப்ரீ ட்ரான்ஸ்போர்ட் கொடுக்குது அருமையான முயற்சி. ஆனா, டிக்கெட் சிஸ்டத்துல பெரிய சேஞ்ச் இல்ல. ஆபிஷியல் சைட்ஸ் க்ராஷ் ஆகுது, ரீசெல் விலைய கண்ட்ரோல் பண்ண ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ் இல்ல.

ஃபேன்ஸ் vs ப்ராஃபிட்

இந்தியால கிரிக்கெட் ஒரு Religion மாதிரி. ஆனா, ஒரு ஃபேன் 3,000 ரூபா டிக்கெட்டுக்கு சேமிச்சு வாங்க ட்ரை பண்ணி, 15,000-னு விலை பாக்குறப்ப அவனோட கனவு சுக்கு நூறா உடைந்து போகுது . IPL-ல ஆரம்பிச்ச எமோஷன், இப்போ கார்ப்பரேட் பின்னால மறைஞ்சு போயிடுச்சு. X-ல ஒரு போஸ்ட் “என் மாச சம்பளத்த விட டிக்கெட் விலை ஜாஸ்தி. இது என்ன IPL-லா, இல்ல வேற எதுவுமா-னு?” கேட்டிருக்காங்க. இது ஒரு ஃபேனோட கோபம் மட்டும் இல்ல லட்சக்கணக்கான ரசிகர்களோட குரல்.

ஒரு பிக் பிக்சர்

IPL ஒரு கல்ட் இந்தியாவோட பல்சுவை கலாச்சாரத்த ஒரு ஸ்டேடியத்துல கொண்டு வந்து சேர்க்கற ஒரு பிளாட்ஃபார்ம். ஆனா, இந்த டிக்கெட் ரீசெல் கேம் அதோட கோர் வேல்யூஸ திருடுது. ஒரு ஃபேன் மேட்ச் பார்க்கறதுக்கு பதிலா, ஒரு ரீசெல்லர் பாக்கெட் நிரப்பறதுக்கு டிக்கெட்ஸ் போகுது. இது ஒரு சின்ன இஷ்யூ மாதிரி தெரியலாம் ஆனா, இதுக்கு பின்னால ஒரு பெரிய சோஷியோ-எகனாமிக் ஸ்டோரி இருக்கு. அமீர் vs ஃபகீர், பேஷன் vs ப்ராஃபிட், ஸ்போர்ட்ஸ் vs கமர்ஷியலிசம்-இதெல்லாம் IPL-ல இப்போ நடக்கற ஒரு அண்டர்கரண்ட் வார்.

CSK vs RR மேட்ச் நாள் வரும் போது, சேப்பாக் நிரம்பும்—ஆனா, அங்க இருக்கறவங்க எல்லாம் ட்ரூ ஃபேன்ஸா இருப்பாங்களா, இல்ல பணம் கொடுத்து வாங்கின ஆளுங்களா? ஒரு பக்கம் யெல்லோ ஜெர்ஸி அலையும் இன்னொரு பக்கம், X-ல “டிக்கெட்ஸ் அவெய்லபிள்” போஸ்ட்ஸ் அலை மோதும். அதையும் எல்லோரும் பார்க்கத் தான் போறாங்க.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com