Dhoni: CSKவின் 25% பங்குகளை வாங்க விருப்பம்! மறுத்த அணி நிர்வாகம்; உறவில் விரிசலா? 
விளையாட்டு

Dhoni: CSKவின் 25% பங்குகளை வாங்க விருப்பம்! மறுத்த அணி நிர்வாகம்; உறவில் விரிசலா?

IPL 2027 சீசனில் விளையாடுவாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 25% பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார் தோனி. ஆனால் இந்த விருப்பத்துக்கு CSK அணி நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை

மாலை முரசு செய்தி குழு

முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்தியா பிரிமியர் லீக் (IPL) தொடங்கப்பட்ட 2008 ம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து பயணித்து வருகிறார். அணியுடனான தனது இணைப்பை வலிமைபடுத்த ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடியதும் அதிக ரன்கள் அடித்ததும் தோனிதான். ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக ஒரு அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் என்ற சாதனையை ரோஹித் சர்மாவுடன் பகிர்ந்துகொள்கிறார்.

தோனி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடையிலான உறவு வீரர், முன்னாள் கேப்டன் என்பதையும் தாண்டி ஆழமானது.

Dhoni

தனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் இருக்கும் தோனி, 2026 சீசனில் 4 கோடிக்கு அணியில் தக்கவைக்கப்பட்டிருந்தார். ஆனால் காயம் காரணமாக ஒரு போட்டியில் கூட விளையாட வில்லை.

2027 சீசனில் விளையாடுவாரா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 25% பங்குகளை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளார் தோனி.

ஆனால் இந்த விருப்பத்துக்கு CSK அணி நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது. 25% வாங்க முற்படும் தோனிக்கு 3% வழங்க அணி நிர்வாகம் முன்வந்திருக்கிறது.

CSK

விவாதங்களுக்குப் பிறகு தோனி 18% வாங்க ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அணி நிர்வாகம் 5.5% மேல் அவருக்கு விற்க விரும்பவில்லை.

அணி நிர்வாகம் மற்றும் தோனி இடையிலான பேரம் பேச்சு வார்த்தையாக மட்டுமே நடந்ததாகவும் எந்த விதமான அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வமான நடவடிக்கைகளும் இல்லை என செய்தி நிறுவனங்கள் கூறுகின்றன.

தோனி எதிர்காலத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து செயல்பட விரும்புகிறார் என்பதே செய்திகள் சொல்லும் கருத்தாக இருக்கிறது. அப்படியெனில் இரண்டு தரப்பும் 5.5% மற்றும் 18% இடையில் ஒரு புள்ளியில் ஒருங்கிணையலாம் அல்லது அவர்கள் உறவில் விரிசல் ஏற்படலாம்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்