IND vs SL: மானவ் சூழலில் மடிந்த தீவு நாடு; வெற்றிக்குப் பிறகும் புள்ளிப் பட்டியலில் முன்னேறாதது ஏன்?

படிக்கல்லின் ரன் குவிப்பு, கே.எல். ராகுலின் நிதானமான 82, கில்லின் அட்டகாசமான கேட்ச், இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்டின் அதிரடியான 66 என கிரக்கெட் ரசிகர்கள் நினைவுகூற எத்தனையோ விஷயங்கள் இந்த போட்டி கொடுத்துள்ளது.
IND vs SL: தீவு நாட்டை வீழ்த்திய பிறக்கும் புள்ளிப் பட்டியலில் முன்னேறயாதது ஏன்?
IND vs SL: தீவு நாட்டை வீழ்த்திய பிறக்கும் புள்ளிப் பட்டியலில் முன்னேறயாதது ஏன்?
Published on
Updated on
2 min read

இலங்கை அணியை 165 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது சுப்மன் கில் தலைமையிலான இந்தியா அணி.

கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி கல்லே மைதானத்தில் தொடங்கிய போட்டியின் கடைசி நாளான இன்று, 84 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இலந்திருந்த இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 288 ரன்கள் தேவை என்ற நிலையில் களமிறங்கியது.

தனஞ்சய டி சில்வா (31*) மற்றும் சோனல் தினுஷா (25*) களத்தில் இருந்தனர். இன்றைய விக்கெட் வேட்டையை ஜடேஜா தொடங்க அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இலங்கை அணி.

இந்திய அணி
இந்திய அணி

மானவ் சுதார் ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். மொத்தமாக இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள், முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் என 10 விக்கெட்டுகள் குவித்தார்.

முதல் இன்னிங்ஸில் 167, இரண்டாவது இன்னிங்ஸில் 44 ரன்கள் அடித்த படிக்கள் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

படிக்கல்லின் ரன் குவிப்பு, கே.எல். ராகுலின் நிதானமான 82, கில்லின் அட்டகாசமான கேட்ச், இரண்டாவது இன்னிங்ஸில் ரிஷப் பண்டின் அதிரடியான 66 என கிரக்கெட் ரசிகர்கள் நினைவுகூற எத்தனையோ விஷயங்கள் இந்த போட்டி கொடுத்துள்ளது.

ஆனாலும் இந்திய வீரர்கள் தங்கள் மீது இருந்த அத்தனை சந்தேகங்களுக்கும் விடை கூறிவிட்டதாக கருத முடியாது. குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்களின் தடுமாற்றம் கண்கூடானதாக இருந்தது.

எல்லாவற்றுக்கும் நடுவில் மானவ் சுதார் மற்றும் தேவதத் படிக்கல் தனியாக ஜொலித்தனர். இரண்டாவது போட்டியில் மற்றவீரர்களும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்து தொடர் வெற்றியைப் பெற்றுத் தருகிறார்களா எனப் பார்க்கலாம்.

மானவ் சுதார்
மானவ் சுதார்

இந்த மாதம் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளால் ICC World Test Championship-ன் 2025–27 சுழற்சிக்கான ரேஸ் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கவிருக்கும் இறுதிப்போட்டிக்கு முன்னேற அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு 12 புள்ளிகள் கூடுதலாகக் கிடைத்து, மொத்தப் புள்ளிகள் 64 ஆகக் கூடியுள்ளன. புள்ளிகள் சதவீதமும் (PCT) 48.15%-ல் இருந்து 53.33% ஆக கணிசமாக உயர்ந்திருக்கிறது.

WTC Points table
WTC Points table

ஆனாலும் WTC புள்ளிப்பட்டியலில் இந்திய அணியால் 5-வது இடத்திலிருந்து மேலே நகர முடியவில்லை! ஏனென்றால், ஆசிய அணிகளிலேயே மிக உயர்ந்த இடத்தில் 66.67% PCT உடன் வங்கதேசம் அணி 4-வது இடத்தில் கெத்தாக அமர்ந்திருப்பதுதான்.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்துள்ள வங்கதேசம் இந்த 2025–27 சுழற்சியில் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான இந்தத் தொடரை இந்தியா 2-0 எனக் கைப்பற்றி, தனது புள்ளிகள் சதவீதத்தை 57.58% ஆக உயர்த்தினாலும் கூட, புள்ளிப்பட்டியலின் உச்சியைத் தொடுவதற்கு இந்தியா இன்னும் மலையேற வேண்டியிருக்கிறது.

வங்கதேசம் அணியிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தபோதிலும், ஆஸ்திரேலியா 77.78% புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் கம்பீரமாக நீடிக்கிறது. அவர்களுக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்கா (75%) இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து (72.22%) மூன்றாவது இடத்திலும் உள்ளன.

தோல்வியைத் தழுவிய இலங்கை அணி 33.33% புள்ளிகளுடன் 6வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. எனவே அடுத்தப்போட்டியில் வெற்றி பெருவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நெருக்கடியுடன் வரும் எதிரணியை இந்தியா எதிர்கொள்ளும்.

IND vs SL: தீவு நாட்டை வீழ்த்திய பிறக்கும் புள்ளிப் பட்டியலில் முன்னேறயாதது ஏன்?
வரலாற்றில் முதல்முறை! ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய வங்கதேசம் - தோல்விக்கு காரணம் என்ன?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com