விளையாட்டு

ஆடுகளை மேய்த்த சிறுவன்... தெருக்களில் தூங்கிய இளைஞன்... இன்று உலகக் கோப்பையில் பெல்ஜியத்தை திணறடித்த ஈரான் ஹீரோ!

ஈரானின் லோரெஸ்தான் மாகாணத்தில் ஒரு நாடோடி குடும்பத்தில் பிறந்த அலிரேசாவின் சிறுவயது மிகவும் கடினமானதாக இருந்தது.

மாலை முரசு செய்தி குழு

கால்பந்து உலகில் பல வீரர்களின் வெற்றிக் கதைகள் ரசிகர்களை ஊக்கப்படுத்தியுள்ளன. ஆனால் சில கதைகள் வெற்றியைத் தாண்டி வாழ்க்கைப் போராட்டத்தின் சின்னமாக மாறுகின்றன. அப்படிப்பட்ட ஒரு கதையே ஈரான் அணியின் கோல் கீப்பர் அலிரேசா பெய்ரன்வந்தின் (Alireza Beiranvand) வாழ்க்கைப் பயணம். உலகக் கோப்பை போட்டியில் பெல்ஜியம் போன்ற வலுவான அணிக்கு எதிராக அசத்தலான சேவ்களை நிகழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள அவர், ஒருகாலத்தில் தெருக்களில் தூங்கியவர், கார்கள் கழுவியவர், பீட்சா கடையில் வேலை செய்தவர், இரவில் தெருக்களை சுத்தம் செய்தவர் என்பதே பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஈரானின் லோரெஸ்தான் மாகாணத்தில் ஒரு நாடோடி குடும்பத்தில் பிறந்த அலிரேசாவின் சிறுவயது மிகவும் கடினமானதாக இருந்தது.அவரது குடும்பம் நிரந்தரமாக ஒரு கிராமத்தில் வசிக்கவில்லை. ஆடுகளை மேய்த்து வாழ்க்கை நடத்தும் குடும்பமாக இருந்ததால், ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தொடர்ந்து இடம்பெயர்ந்து வாழ்ந்தனர். சிறுவயதில் பள்ளி வாழ்க்கையை விட ஆடுகளை பாதுகாப்பதே அவரது அன்றாடப் பொறுப்பாக இருந்தது. குடும்பத்தில் மூத்த மகனாக இருந்ததால் தந்தையின் தொழிலைத் தொடர வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.

ஆனால் அலிரேசாவின் மனதில் வேறு ஒரு கனவு இருந்தது. அது கால்பந்து. கிடைக்கும் நேரங்களில் நண்பர்களுடன் பந்தை உதைத்து விளையாடிய அவர், ஒரு நாள் பெரிய கால்பந்து வீரராக வேண்டும் என்று கனவு கண்டார். ஆரம்பத்தில் ஸ்டிரைக்கராக விளையாடிய அவர், ஒரு போட்டியில் இரண்டு கோல் கீப்பர்களும் காயமடைந்ததால் தற்காலிகமாக கோல் கம்பங்களுக்குள் நிற்க நேர்ந்தது. அந்த நாள் அவரது வாழ்க்கையை மாற்றிய நாள் ஆனது. கோல் கீப்பராக அவர் வெளிப்படுத்திய திறமை அனைவரையும் கவர்ந்தது.

ஆனால் வீட்டில் இருந்து அவருக்கு ஆதரவு கிடைக்கவில்லை. கால்பந்து விளையாடுவதால் குடும்பப் பொறுப்புகளை கவனிக்கவில்லை என்று அவரது தந்தை கோபமடைந்தார். ஒருமுறை அவர் பயன்படுத்திய கோல் கீப்பர் கையுறைகளை கூட கிழித்தெறிந்ததாக கூறப்படுகிறது. குடும்பத்தின் விருப்பத்துக்கும் தனது கனவுக்கும் இடையே சிக்கிய அலிரேசா, இறுதியில் ஒரு கடினமான முடிவை எடுத்தார். இரவு நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறி, சுமார் 600 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள டெஹ்ரானுக்கு பயணம் செய்தார். அவரிடம் இருந்தது சில பணம் மட்டுமே; ஆனால் மனதில் இருந்தது பெரிய கனவு.

டெஹ்ரானில் அவருக்குத் தெரிந்தவர்கள் யாரும் இல்லை. தங்க இடமும் இல்லை. பகலில் பயிற்சிக்கு செல்வார்; இரவில் மசூதிகளில் அல்லது தெருக்களில் தூங்குவார். சில சமயங்களில் உணவுக்கே பணம் இல்லாத நிலை ஏற்பட்டது. ஒரு நாள் தெருவோரத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மக்கள் அவரை பிச்சைக்காரன் என்று நினைத்து உடலின் மேல் நாணயங்களை போட்டுச் சென்றதாக அவர் பின்னர் நினைவுகூர்ந்துள்ளார். அந்த பணத்தில்தான் பல நாட்களுக்குப் பிறகு வயிறு நிறைய உணவு சாப்பிட்டதாகவும் கூறியுள்ளார்.

வாழ்க்கையை முன்னெடுக்க பல்வேறு வேலைகளையும் அவர் செய்தார். கார்கள் கழுவும் நிறுவனத்தில் வேலை பார்த்தார். உயரமான உடல் அமைப்பு இருந்ததால் பெரிய எஸ்யூவி வாகனங்களை சுத்தம் செய்ய அவரை விரும்பி வேலைக்கு வைத்ததாக அவர் கூறியுள்ளார். பின்னர் ஒரு பீட்சா கடையில் பணியாளராக வேலை பார்த்தார். அதற்குப் பிறகும் பணம் போதாமல் போனதால் இரவு நேரங்களில் தெருக்களை சுத்தம் செய்யும் பணியிலும் ஈடுபட்டார். பகலில் பயிற்சி, இரவில் வேலை என்ற வாழ்க்கை அவரது உடலை மிகவும் சோர்வடையச் செய்தது. இருந்தாலும் அவர் தனது கனவை கைவிடவில்லை.

அவரது விடாமுயற்சியை கவனித்த சில பயிற்சியாளர்கள் பின்னர் உதவத் தொடங்கினர். உள்ளூர் அணிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் ஈரானின் இளையோர் அணியில் இடம்பிடித்தார். பின்னர் தேசிய அணிக்கும் தேர்வானார். வீட்டை விட்டு ஓடிய நான்கு ஆண்டுகளுக்குள் ஈரான் தேசிய அணியின் ஜெர்சியை அணிந்தது அவரது வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

2018 உலகக் கோப்பையில் உலக நட்சத்திரமான Cristiano Ronaldo அடித்த பெனால்டியை தடுத்ததன் மூலம் அலிரேசா உலகம் முழுவதும் பிரபலமானார். அதன் பிறகு ஈரானின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவராக மாறினார். தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையிலும் பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியில் அவரது அசத்தலான சேவ்கள் ரசிகர்களை மெய்சில

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்