விளையாட்டு

உலகமே எதிர்பார்க்காத வெற்றி.. அந்த உலகக் கோப்பையே கண் விழித்து மிரண்டு போன சம்பவம்.. அரையிறுதியில் இந்திய அணி வரலாற்றுச் சாதனை!

தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெறுவது கடினாக இருந்தது..

Mahalakshmi Somasundaram

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் எட்டு அணிகள் பங்கேற்ற நிலையில் ஒவ்வொரு அணியும் தல ஒரு அணியுடன் லீக் தொடரில் மோதியது, இதில் அரை இறுதிக்கு நான்கு அணிகள் தேர்வான நிலையில் நேற்று அந்த அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதியது. இந்த போட்டியில் வரலாறு காணாத வகையில் இந்திய ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சிறப்பான வெற்றியை பெற்று இறுதிப்போட்டிக்கு தேர்வாகியுள்ளது. 

நேற்று மும்பை டி.ஒய்.பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற 2வது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா -இந்தியா அணிகள் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளை இழந்து 338 ரன்களை குவித்தது. இந்த ரன்கள் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது இதனை தொடர்ந்து இந்திய அணியில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியை வெற்றி பெறுவது கடினாக இருந்தது. 

ஆனால் அடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் - தீப்தி சர்மா சிறப்பாக விளையாடினர். மேலும் அடுத்தடுத்து இந்தியாவின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணியை 339 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. ஒரு நாள் உலக கோப்பை போட்டியில் 300 மற்றும் அதற்கு மேற்பட்ட ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது இதுதான் முதல் முறை ஆகும். 

2017 ஆம் ஆண்டில் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான போட்டியில் எடுத்த 678 ரன்கள் சாதனையாக இருந்த நிலையில் தற்போது இந்திய மற்றும் ஆஸ்திரேலிய அணியின் இடையேயான போட்டியில் எடுக்கப்பட்ட 679 ரன்கள் அந்த சாதனையை முறியடித்துள்ளது. மேலும் 15 தொடர் வெற்றிகளுக்கு பிறகு உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளது.  இந்தியாவின் இந்த அபரிவிதமான வெற்றியானது உலகமே எதிர்ப்பாராத வகையில் சாதனையாக அமைந்துள்ளது.   

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.