சென்னையில் நடைபெற்ற விளையாட்டு வீரர்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்ற இந்திய ஜூனியர் ஹாக்கி ஆடவர் அணியின் பயிற்சியாளர் ஸ்ரீஜிஷுடன் மாலைமுரசு செய்தியாளர் நடத்திய நேர்காணல் இங்கே, முழுமையான உரையாடல் வடிவம் இதோ:
செய்தியாளர்: இந்திய ஹாக்கி டீமுடைய பயிற்சியாளர் சி.ஜே. இருந்திருக்கிறார். அவர் கேட்க நிறைய கேள்விகள் இருக்கிறது. சார் வணக்கம் சார், மிக்க மகிழ்ச்சி. ஆக்சுவலா நீங்க வந்து ஹாக்கில வந்து தேர்ட் பிளேஸ் (Third Place) நம்ம வின் பண்ணி இருக்கோம் சார். எப்படி சார் இருக்கு?
பயிற்சியாளர் ஸ்ரீஜிஷ்: சார், போடியத்துல (Podium) பினிஷ் பண்ணது ரொம்ப ஹேப்பியா இருக்கு சார். பட் இருந்தாலும் அந்த செமி பைனல தோற்றதுனால கொஞ்சம் சேடா இருக்கு. ஏன்னா இந்த டீம் வந்து பைனல் ஆடுறதுக்கு குவாலிட்டி இருக்கு. நிறைய பிளேயர்ஸ் டேலெண்டட் பிளேயர்ஸ் உண்டு. டீம் நல்லா பெர்பார்ம் பண்ணிட்டு இருந்தோம். பட் இருந்தாலும் அந்த செமி பைனல் தோல்வி வந்து கொஞ்சம் ஹார்டா இருந்துச்சு. பட் ஸ்டில் அந்த பிளேயர்ஸ் வந்து தேர்லி குட் அண்ட் பவுன்ஸ் பேக். தே பிளேட் குட் அண்ட் வி பினிஷ் இன் தி போடியம்.
செய்தியாளர்: இருந்தாலும் பிரான்ஸ் (Bronze) கிடைக்கிறது பெரிய விஷயம் சார். ஒரு பயிற்சியாளரா என்ன மாதிரி கடினமான விஷயங்களை நீங்க பேஸ் பண்ணிருக்கீங்க இந்த வின் பண்றதுக்காக?
பயிற்சியாளர் ஸ்ரீஜிஷ்: சார் எப்பவும் வந்து ஒரு எக்ஸ்பெக்டேஷன் பிரஷர் இருக்கும் சார். இந்தியாவில டூர்னமென்ட் நடக்குது, எஸ்பெஷலி சென்னையில நிறைய பேருக்கு ஹாக்கி நல்லா தெரியும். எல்லாருமே ஹாக்கி ஃபேன்ஸ். அவங்களுக்கு முன்னாடி இந்தியன் டீம் ஆடும்போது அவங்களுக்கு வந்து எப்பவும் ஒரு எக்ஸ்பெக்டேஷன்ஸ் இருக்கும். நம்ம டீம், இந்தியன் டீம் வின் பண்ணனும், கோல்ட் மெடல் வின் பண்ணனும் அந்த மாதிரி எக்ஸ்பெக்டேஷன்ஸ் இருக்கும். அந்த பிரஷர் வந்து ஹேண்டில் பண்ணது பிளேயர்ஸ்க்கு கொஞ்சம் டப்பர் சிச்சுவேஷன். பட் இருந்தாலும் நம்ம பிளேயர்ஸ் வந்து அது நல்லா மேனேஜ் பண்ணிட்டாங்க. அதனாலதான் இந்த பிரான்ஸ் மெடல் கிடைச்சிருக்கு.
செய்தியாளர்: குறிப்பா வந்து பல இளைஞர்களுக்கு வந்து கிரிக்கெட் மாதிரி கேம் இதா இருந்தாலும், ஹாக்கிங்கிறது கொஞ்சம் கம்மியா இருக்குல்ல? இப்போ வரக்கூடிய எங்ஸ்டர்ஸ் கிட்ட எந்த அளவுக்கு அது ரீச் ஆயிருக்கு ஹாக்கி?
பயிற்சியாளர் ஸ்ரீஜிஷ்: சார் இப்ப வந்து தமிழ்நாடுல பாத்துக்கிட்டீங்கன்னா இந்த ஸ்கூல் ஹாக்கி லீக் வந்து ஸ்டார்ட் பண்ணிருக்காங்க சார். அது வந்து இந்த சின்ன பசங்களுக்கு ஹாக்கி ஸ்டிக் கொடுத்து அவங்கள ஹாக்கி ஆட வச்சு அவங்களுக்கு இன்ட்ரடியூஸ் பண்ண வைக்கிறோம். நம்ம வந்து இந்த கேம், இந்த ஹாக்கி என்ன மாதிரி கேம்னு அவங்களுக்கு சொல்லிக் கொடுக்கணும். அவங்களுக்கு ஆடுறதுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கணும். சோ இந்த ஹாக்கி லீக், அதுக்கப்புறம் சீஃப் மினிஸ்டர் கப் இந்த மாதிரி டூர்னமெண்ட்ஸ் இருக்கும்போது அவங்களுக்கு தெரியும். ஆமா, இந்தியாவில ஒரு கேம் மட்டும் இல்ல, இந்த ஹாக்கி ஆடுனா கூட உங்களால வந்து ஸ்டேட் டீம் ஆடலாம், உங்களுக்கு வந்து நேஷனல் டீம்ல கூட போகலாம், ஒலிம்பிக்ஸ் ஆடலாம், ஒலிம்பிக்ஸ்ல மெடல் வின் பண்ணலாம். அந்த மாதிரி ஒரு ட்ரீம் தான் நம்ம செட் பண்ணனும். அப்படின்னா ஆட்டோமேட்டிக்கா வந்து நம்ம வந்து நிறைய யங் பிளேயர்ஸ் வந்து டுவர்ட்ஸ் ஹாக்கி நம்ம அட்ராக்ட் பண்ண முடியும். சோ இப்ப வந்து இந்த ஜூனியர் வேர்ல்ட் கப், இப்ப மதுரையில கூட ஜூனியர் வேர்ல்ட் கப் இருந்துச்சு. அங்க பார்த்தா நிறைய எங்ஸ்டர்ஸ் தான் மேட்ச் பார்க்க வந்தாங்க. அவங்க பேரண்ட்ஸ் அவங்கள கூட்டிட்டு வந்திருக்காங்க. சோ இது வந்து இந்த ஹாக்கிய வந்து ப்ரொமோட் பண்றதுக்கு ஈஸியான தி பெஸ்ட் வே.
செய்தியாளர்: தமிழ்நாடு கவர்மெண்ட் ஃபார்ம் ஆனதுல இருந்து தொடர்ந்து விளையாட்டுல வந்து நிறைய போக்கஸ் பண்ணிட்டு இருக்காங்க. ஒலிம்பியாட் மேட்ச், வேர்ல்ட் கப் நடத்துறாங்க சார். நீங்க எப்படி பாக்குறீங்க சார் ஆக்சுவலா? அதுக்காக ஒரு விஷன் வேணும்ல சார்?
பயிற்சியாளர் ஸ்ரீஜிஷ்: நம்ம டெப்யூட்டி சீஃப் மினிஸ்டர் சார் வந்து ஒரு விஷனரி பர்சன் (Visionary Person). ஹி இஸ் எ கிரேட் லீடர். அதனாலதான் 2023 ஏசியன் சாம்பியன்ஸ் ட்ரோபி, நான்தான் இந்த இந்தியன் டீம் கூட இங்கதான் ஆடி நம்ம வின் பண்ணிட்டோம் ஹாக்கி ஏசியன் சாம்பியன்ஸ் டிராபி. இப்ப பார்த்தா ஜூனியர் டீம் கூட வந்து இந்த சென்னையில ஜூனியர் வேர்ல்ட் கப் கண்டக்ட் பண்ணிட்டாங்க. அகைன் நம்ம வந்து பிரான்ஸ் மெடல் வின் பண்ணிட்டோம். இப்ப வந்து ஸ்குவாஷ் கூட பாருங்க, ரீசன்டா ஸ்குவாஷ்ல கூட வேர்ல்ட் சாம்பியன்ஷிப் நம்ம ஹோஸ்ட் பண்றோம். சோ ஒரு விஷனரி லீடர் இருந்தா ஆட்டோமேட்டிக்கா ஸ்டேட்டும் டெவலப் ஆகும், ஸ்டேட் த்ரூ நம்ம நேஷனும் டெவலப் ஆகும். சோ கிரெடிட் கோஸ் டு தி டெப்யூட்டி சி.எம்.
செய்தியாளர்: அதாவது தமிழ்நாட்டில இருந்து வரக்கூடிய இளைஞர்களுடைய எண்ணிக்கை எப்படி இருக்கு? அவங்களுடைய ஆர்வம் எப்படி இருக்கு? அவங்களுக்கு வாய்ப்புகள் ஈஸியா வழங்கப்படுதா? ஏன்னா கடந்த நடந்த மேட்ச்ல வந்து தமிழ்நாடு பிளேயர்ஸ் யாருமே இல்லைன்னு ஒரு சூழல் இருக்குல்ல, அது என்ன காரணமா இருக்கு?
பயிற்சியாளர் ஸ்ரீஜிஷ்: சார், இந்த 2025 ஜூனியர் வேர்ல்ட் கப்ல வந்து லாஸ்ட் ஒரு டூ இயர்ஸா பிளேயர்ஸ வந்து நம்ம செலக்ட் பண்ணி அவங்கள பிரிப்பேர் பண்ணி எடுத்துட்டு வந்தோம். பட் ஆக்சுவலா வந்து தமிழ்நாடு இப்ப டெவலப் பண்றது லாஸ்ட் த்ரீ இயர்ஸாதான். இந்த மாதிரி ஸ்கூல் லீக், சீஃப் மினிஸ்டர் கப் இதெல்லாம் வந்து இன்ட்ரடியூஸ் பண்ணிட்டே இருக்கோம். சோ பிளேயர்ஸ் வர்றதுக்கு கொஞ்சம் டைம் எடுக்கும். நம்ம வந்து இப்ப சின்ன பசங்க அண்டர்-12 மேல இன்வெஸ்ட் பண்றோம், அண்டர்-15 மேல இன்வெஸ்ட் பண்றோம். சோ இந்தியன் டீம்ல வந்து இருக்கணும்னா மெஜாரிட்டி பிளேயர்ஸ் வந்து 21 இல்லன்னா 19, 18 ஐ மீன் 20 அந்த ஏஜ் குரூப் தான் இருக்கும். சோ அந்த ரேஞ்சுக்கு இப்ப நெக்ஸ்ட் இயர்ல வந்துச்சுன்னா டெபனிட்டா நிறைய பிளேயர்ஸ் தமிழ்நாடுல இருந்து வருவாங்க. இந்த வாட்டி டெபனிட்லி நமக்கு யாருமே இல்லை தமிழ்நாடுல, பட் நெக்ஸ்ட் ஜூனியர் வேர்ல்ட் கப்ல டெபனிட்டா இருப்பாங்கன்னு தான் நினைக்கிறேன்.
செய்தியாளர்: ஒரு பயிற்சியாளரா நீங்க தமிழ்நாட்டுல இருக்கக்கூடிய, இந்தியால இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு ஹாக்கி தொடர்பா ஒரு விஷயம் சொன்னா என்ன சொல்லுவீங்க?
பயிற்சியாளர் ஸ்ரீஜிஷ் பேசிக்ஸ் (Basics). பேசிக்ஸ் வந்து ரொம்ப இம்பார்டன்ட் சார். நீ வந்து பேசிக்ஸ் கரெக்டா கத்துக்கணும், ஃபர்ஸ்ட். செகண்ட் இஸ் லாங்குவேஜ். ஹிந்தி ஏன்னா வந்து இங்கிலீஷ் இல்லன்னா ஹிந்தி. உங்கள வந்து இப்போ நேஷனல் டீம்ல ஆடணும்னா இன்னொரு டீம்மேட் கூட நீ பேசணும், நீ கம்யூனிகேட் பண்ணனும். சோ அதனால வந்து ஹிந்தி இல்லன்னா இங்கிலீஷ் உங்களுக்கு தெரிஞ்சுதான் ஆகணும். தேர்டு வந்து கான்பிடன்ஸ். எந்த இடத்துல போனாலும் ஓகே நான் ஹாக்கி பிளேயர், நல்ல ஹாக்கி பிளேயர், என்னால ஆட முடியும் அந்த ஒரு நம்பிக்கை உங்களுக்கு இருக்கணும்" என்று தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.