``சிராஜ் இடம் பெறாததற்கு அவரது 'மதம்' காரணமா?" காங்கிரஸ் - பாஜக மோதலான விளையாட்டு.. பின்னணி என்ன? BCCI
விளையாட்டு

``சிராஜ் இடம் பெறாததற்கு அவரது 'மதம்' காரணமா?" காங்கிரஸ் - பாஜக மோதலான விளையாட்டு.. பின்னணி என்ன?

சிராஜுக்கு அணியில் பாகுபாடு காட்டப்படுகிறது என்பதற்கு மசூத் வேறெந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்றாலும், பேசின் ரிசர்வ் போட்டிக்கு இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுத்தபோதிலும் சீராஜுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதுதான் கிரிக்கெட் ரசிகர்களின் கவலையாக இருந்தது.

Antony Ajay R

இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் நகரில் நடந்து வருகின்றது. இதற்கான அணித் தேர்வு பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக நம்பர் 2 சர்வதேச டெஸ்ட் ஆல் ரவுண்டராக இருக்கும் ரவீந்திர ஜடேஜாவுக்கு இடம் கொடுக்காமல் வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

அதேப்போல இந்தியாவின் இரண்டாவது சிறந்த பந்து வீச்சாளராக இருக்கும் சீராஜ் இடம் பெறாமல் போனதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சர்ச்சை அரசியல் களம் வரை எதிரொலித்துள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் சஹாரன்பூர் தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் முகமது சிராஜ் அணியில் இடம் பெறாததற்கு அவரது பெயர்தான் காரணம் எனக் கூறியிருக்கிறார்.

"அவர் சிறப்பாக விளையாடியபோதிலும், அவருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அவரது பெயர் ‘சிராஜ்’, அதனால்தான் அவருக்கு இடம் கொடுக்கப்படவில்லை.

அவர் சிறப்பாக ஆடிய பிறகும் நீங்கள் அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், இதில் பாகுபாடு காட்டுவது தெளிவாகத் தெரிகிறது," என்று மசூத் ANI செய்தி தளத்தில் கூறியிருந்தார்.

சிராஜுக்கு அணியில் பாகுபாடு காட்டப்படுகிறது என்பதற்கு மசூத் வேறெந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்றாலும், பேசின் ரிசர்வ் போட்டிக்கு இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை தேர்ந்தெடுத்தபோதிலும் சீராஜுக்கு இடம் கிடைக்கவில்லை என்பதுதான் கிரிக்கெட் ரசிகர்களின் கவலையாக இருந்தது.

Siraj and Jadeja

இந்திய அணியில் பும்ரா உடன் ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா மற்றும் அன்ஷுல் கம்போஜ் (வேகப்பந்து ஆல் ரவுண்டர்) ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். 48 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் விளையாடிய அனுபவம் கொண்ட, மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் வீசக் கூடிய வீரரை அணியில் சேர்க்காமல் இவர்களை ஏன் சேர்த்தனர் என்பதே ரசிகர்கள் எழுப்பும் கேள்வி.

கடந்த டெஸ்ட் உலகக் கோப்பை சுற்றில் 43 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக இருந்தது சிராஜ்.

சமீப காலத்தில் இந்தியா பெற்ற இரண்டு மிகப்பெரிய வெற்றிகளிலும் அவரே நட்சத்திர வீரராக இருந்துள்ளார். 2024-25ல் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் கோப்பையில், அவர் 5 டெஸ்ட் போட்டிகளில் 157.1 ஓவர்கள் பந்துவீசி 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பணிச்சுமை மேலாண்மை காரணமாக பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பையில், சிராஜ் 5 போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சை முன்னின்று நடத்தினார்.

ரவிசந்திரன் அஸ்வின், "ஒரு முழு மாதமும் முகமது சிராஜை அணியிலிருந்து நீக்குவதற்கான சூழலை அவர்கள் உருவாக்கி வருகிறார்கள். இறுதியில் அவரை உலகக் கோப்பை அணியிலிருந்து நீக்கினாலும் ஆச்சரியப்படாதீர்கள். இது வெறும் முன்னோட்டம்தான்." என அவரது யூடியூப் தளத்தில் பேசினார்.

சிராஜ் அவரது மதம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டதாக காங்கிரஸ் எம்.பி பேசியதற்கு பதிலளித்த, "நம் நாட்டில், தகுதியின் அடிப்படையில் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஒருவரின் மதத்திற்கோ அல்லது சாதிக்கோ அதனுடன் எந்த சம்பந்தமும் இல்லை," எனக் கூறியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.