மலை உச்சியில் தீபம் ஏற்ற தவெக அனுமதியா? அடுத்த முறையீடா.. நிர்மல் குமார் சொன்ன பதில்?

இதுவரையில் தூணில் தீபம் ஏற்றப்பட்டதே இல்லை என்பதுதான் முக்கிய வாதமாக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டு வருகிறது. அடுத்த 50 ஆண்டுகள் கழித்து இந்த வாதத்தை முன்வைக்க முடியாத நிலையை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்படுத்துவதாக ஒருதரப்பினர் வாதிடுகின்றனர்.
TVK to Allow Lamp Lighting on Hilltop or Appeal Next? Minister Nirmal Kumar’s Response
மலை உச்சியில் தீபம் ஏற்ற தவெக அனுமதியா? அடுத்த முறையீடா.. நிர்மல் குமார் சொன்ன பதில்?
Published on: 
Updated on: 
1 min read

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில், நவம்பர் 24ஆம் தேதி ஒருநாள் மட்டும் தீபம் ஏற்ற அனுமதி அளித்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.

இதனுடன், தூணில் தீபம் ஏற்றலாம் என முன்னதாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைப்பதாகவும் தெரிவித்தது. இந்தத் தீர்ப்பு தமிழக அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஆண்டு உயர் நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி தூணில் தீபம் ஏற்றுவதைத் தடுத்து நிறுத்தியது தமிழகக் காவல்துறை. அதேபோல இந்த ஆண்டும் தவெக அரசு உறுதியாக நிற்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

நீதிமன்றம் தனது தீர்ப்பில், இந்த ஒருமுறை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளிப்பதை வைத்து அதை ஒரு பாரம்பரியப் பழக்கமாகக் கருத முடியாது எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த ஒருமுறை அனுமதி இறுதித் தீர்ப்பைப் பாதிக்காது என்றும் கூறியுள்ளது.

ஆனால், இதுவரையில் தூணில் தீபம் ஏற்றப்பட்டதே இல்லை என்பதுதான் முக்கிய வாதமாக அரசு தரப்பில் முன்வைக்கப்பட்டு வருகிறது. அடுத்த 50 ஆண்டுகள் கழித்து இந்த வாதத்தை முன்வைக்க முடியாத நிலையை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்படுத்துவதாக ஒருதரப்பினர் வாதிடுகின்றனர்.

நூற்றாண்டு காலமாக உச்சிப் பிள்ளையார் கோயிலில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது என ஆதாரங்களை முன்வைக்கின்றனர். மலை உச்சியில் இருக்கும் தூண் ஒரு சர்வே கல் என்றும், இதில் தீபம் ஏற்ற அனுமதிப்பது நாடு முழுவதும் உள்ள சர்வே கற்களில் தீபம் ஏற்றக் கோரிக்கை எழக் காரணமாகிவிடும் என்றும் மாவட்ட ஆட்சியர் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்கள், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ரிவியூ பெட்டிஷன் தாக்கல் செய்வீர்களா என்பது குறித்து அமைச்சர் நிர்மல் குமாரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, "சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருக்கிறோம். சீராய்வு மனு தாக்கல் செய்வது குறித்து இன்று மாலை அல்லது நாளை காலை அறிவிப்போம்" என்றார்.

TVK to Allow Lamp Lighting on Hilltop or Appeal Next? Minister Nirmal Kumar’s Response
அம்பானி, அதானியை விஞ்சிய தமிழர்.. 5 ஆண்டுகள் தொடர்ந்து முன்னிலை.. கோடிகளை அள்ளி வழங்கிய சிவ நாடார் குடும்பம்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.