ரோஹித், கோலி, கேப்டன் ஷ்ரேயாஸ்.. மேட் ஹென்றியிடம் '0' ரன்களுக்கு சுருண்ட டாப் ஆர்டர் - படு தோல்வியை நோக்கி இந்திய அணி! 
விளையாட்டு

ரோஹித், கோலி, கேப்டன் ஷ்ரேயாஸ்.. மேட் ஹென்றியிடம் சுருண்ட ஜாம்பவான்கள் - வரலாற்றில் மோசமான தோல்வியா?

ஆரம்பத்தில் நியூசிலாந்து ஓப்பனர் வில் யங் கொடுத்த இரண்டு கேட்ச்கள் ட்ராப் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர், 125 ரன்கள் அடித்தார்.

Antony Ajay R

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 4வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவின் நட்சத்திர டாப் ஆர்டர் பேட்டிங்க லைன் அப் சொற்ப ரன்களுக்கு சுருண்டதால் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது இந்திய அணி.

முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வென்றுவிட்டதால் இந்த போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கியது இந்திய அணி. ஆனால் வெற்றி பெரும் வாய்ப்பு இல்லாததால் `இழப்பதற்கு எதுவும் இல்லை' என்ற துணிச்சலுடன் வந்தனர் கிவீஸ்.

ஆரம்பத்தில் நியூசிலாந்து ஓப்பனர் வில் யங் கொடுத்த இரண்டு கேட்ச்கள் ட்ராப் செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர், 125 ரன்கள் அடித்தார்.

அதிரடியாக விளையாடிய டிம் சீஃபர்ட் 58 ரன்கள் அடித்தார். நடுவரிசையில் ஃபின் ஆலன் மற்றும் பின் வரிசையில் வந்த வீரர்களும் டீசன்டாக ரன் சேர்க்க 334 இந்திய அணிக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

முதல் ஓவர் முதல் பந்திலேயே ஸ்லிப் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார் ரோஹித் சர்மா. தொடர்ந்து விராட் கோலிக்கு ஆக்ரோஷமாக பந்துகளை வீசினார் மேட் ஹென்றி. சிங்கிள் வைத்து ஸ்ட்ரைக் மாற்ற விராட் மேற்கொண்ட மூன்று முயற்சிகள் வீணாக, 4வதாக ஹென்றி வீசிய இன்ஸ்விங்கர் பந்தில் போல்ட் ஆனார் விராட் கோலி.

அடுத்த பந்திலேயே LBW-வில் விக்கெட்டை பறிகொடுத்து திகைத்து நின்றார் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்.

பொறுமையாக விளையாடிவந்த ருதுராஜ் கெய்க்வாட், 5 ரன்களுக்கு ஜேமிசன் பந்தில் ஸ்லிப் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார்.

பெரிதாக ரன்கள் அடிக்காமல் இஷான் கிஷன் - அக்சர் படேல் கூட்டணி 10 ஓவர்கள் தாக்கு பிடித்தது. மேத்திவ் ஃபிஷர் பந்தில் அக்சர் படேலும் ஸ்லிப் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இஷான் கிஷன், ஆகிப் நபி அடுத்தடுத்து ஆட்டமிழக்க தோல்வியை நோக்கி வெகு வேகமாக சென்றது இந்திய அணி.

89 ரன்களுக்கு சுருண்டது இந்தியா. அதிகபட்சமாக மேட் ஹென்றி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில், முன்னதாக 2010ம் ஆண்டு 88 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கிறது. வரலாற்றில் மோசமான இன்னிங்ஸ் என்ற அவப் பெயரில் இருந்து ஒரு ரன்னில் தப்பித்துள்ளனர்.

ஆனால் அந்த 2010 போட்டியில் கூட ரன் வித்தியாசம் 200 தான். இன்றோ 244 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளனர். எனவே வரலாற்றில் நியூசிலாந்துக்கு எதிரான மோசமான தோல்வி என இந்த போட்டியை அழைக்கலாம்!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.