விளையாட்டு

சிவகாசி- சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டி! தங்கம் ,வெள்ளி பதக்கங்களை வென்ற மாணவ- மாணவிகள்!!

Malaimurasu Seithigal TV

சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டி வெற்றி பெற்று தங்கம் ,வெள்ளி பதக்கங்களுடன் ஊர் திரும்பிய மாணவ - மாணவிகளுக்கு சிவகாசியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

நேபாளத்தில் கடந்த 8 ம் தேதி முதல் 10ம் தேதி வரை சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது. போட்டிகளில் சைனா, நேபாளம், இந்தியா போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்றனர்.

இந்தியாவிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள்  பங்கேற்ற பட்சத்தில், தமிழகத்திலிருந்து 130 பேரும், அதிலும் குறிப்பாக சிவகாசி  வட்டாரத்திலிருந்து 13 பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகள் நேபாளத்தில் நடந்த சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் கலந்து கொண்டனர்.

போட்டிகளில் பங்கேற்றவர்கள் ஒற்றை கம்பு, இரட்டைகம்பு, சுருள்வாள்சுழற்றுதல், வேல்கம்புவீச்சு, ஆயுதப் பயிற்சி போன்ற பிரிவுகளில் வென்று7  தங்கப்பதக்கங்களையும், 6 வெள்ளி பதக்கங்களையும் பெற்றனர். சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை பயிற்சியாளர்கள் உட்பட மற்றும் பலர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.