ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை தொடரில் இன்று நடந்த இந்தியா - யுஏஇ அணிகளுக்கு இடையிலான போட்டியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி உலக சாதனை படைத்துள்ளார்.
A பட்டியல் கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதம், 15 ரன்கள், இரட்டை சதம் என எல்லா சாதனைகளையும் ஒரு மணி நேரத்துக்குள் முறியடித்திருக்கிறார்.
வெறும் 52 பந்துகளில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார் வைபவ். அதில் 28 சிக்ஸர்களை விளாசியிருந்தார்.
ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வியைத் தொடர்ந்து பெரும் பசியுடன் களமிறங்கியது இந்திய அணி.
முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு அமீரகம் 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் அடித்திருந்தது. அதிகபட்சமாக ஹர்பிரீத் சிங் பாட்டியா 120 ரன்கள் அடித்தார்.
வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அதிரடியாக தொடங்கினார். வெறும் 28 பந்துகளில் 100 ரன்களைத் தொட்டார். முன்னதாக 2023ம் ஆண்டு டாஸ்மேனியாவுக்கு எதிராக தெற்கு ஆஸ்திரேலியா அணிக்காக, ஆஸ்திரேலிய சர்வதேச ஆண்கள் அணியின் வீரர் ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க் 29 பந்துகளில் சதம் அடித்ததுதான் சாதனையாக இருந்தது.
இதுமட்டுமல்ல, 40 பந்துகளில் 150 ரன்களைக் கடந்தார். இதுவும் உலக சாதனையானது.
அவரது பேட் ஓயவே இல்லை. தொடர்ந்து சிக்சர் மழை பொழிந்தது. 12வது ஓவரில் அடுத்தடுத்து 4 சிக்ஸர்களை விளாசினார். அது இந்த இன்னிங்ஸில் அவரது 24வது சிக்ஸ், இதுவரை எந்த ஒரு வீரரும் ஒரு இன்னிங்ஸில் அடித்த அதிகபட்ச சிக்ஸர் எண்ணிக்கையைக் கடந்தார்.
தொடர்ந்து 52 பந்துகளில் 200 ரன்களைத் தொட்டார். இதற்கு முந்தைய சாதனையின் படி விரைவான இரட்டை சதத்துக்கும் இந்த சாதனைக்கும் இடையில் 51 பந்துகள் வித்தியாசம். இன்னும் குறைந்தது 10 ஆண்டுகளுக்கு யாரும் இந்த சாதனையை முறியடிக்க முடியாது எனப் பேசி வருகின்றனர்.
இணையவாசிகள் சூர்யவன்ஷி வீடியோ கேமில் கூட விளையாட முடியாதபடி அதிரடியான ஆட்டத்தைக் காட்டிவிட்டதாக மீம்ஸ் பகிர்ந்து வருகின்றனர்.
204 ரன்களில் சூர்யவன்ஷி அவுட் ஆகும்போது அவரது ஸ்ட்ரைக் ரேட் 384.91 ஆக இருந்தது. இதுவும் ஒரு உலக சாதனை!
சூர்யவன்ஷியின் சாதனையால் 14.2 ஓவர்களில் இலக்கை எட்டியது இந்திய அணி. அதுவும் 50 ஓவர் போட்டிகளில்.
அடுத்ததாக இந்தியா A அணி வருகின்ற வியாழன் அன்று அரையிறுதி போட்டியில் இலங்கை A அணியை எதிர்கொள்கிறது. பாகிஸ்தான் - வங்காள தேசம் இடையிலான அரையிறுதி போட்டி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
வருகின்ற ஞாயிறு அன்று நடக்க இருக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி vaவருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா எனக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்