பிறருடைய உதவியை பொருளாதார ரீதியாக எதிர்பார்க்காமல், நமது ஓய்வு காலத்தை கழிக்க நமக்கு அதிக பொருள் வேண்டும். மாறும் விலைவாசியின் காரணமாக Inflation எனப்படும் பணவீக்கமும் அதிகமாகிக்கொண்டே போகிறது. இப்படி இந்த பணவீக்கம் அதிகரித்தால், இன்னும் 25 அல்லது 30 ஆண்டுகளில் ஒரு சராசரி குடும்பத்தின் மாத செலவே, பல ஆயிரங்களை எட்டக்கூட வாய்ப்புகள் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படி இந்த பணவீக்கத்தோடு போராடி, மாதந்தோறும் சம்பாதிக்கும் பணத்தை பெரிய அளவில் இன்வெஸ்ட் செய்தால் மட்டுமே நமது எதிர்காலத்தை பாதுகாக்க முடியும். அப்படி பணத்தை சேமிக்க பல வழிகள் உள்ளது. அதில் ஒரு சிறந்த மற்றும் கொஞ்சம் ரிஸ்க் அதிகம் உள்ள சேமிப்பு முறையை பற்றித்தான் இந்த பதிவில் பார்க்கவுள்ளோம். அது தான் Mutual Funds. இந்தியாவை பொறுத்தவரை இணைய வழியில் பல செயலிகள் மூலம் இந்த Mutual Funds திட்டத்தில் இணைந்து பலன்பெறலாம்.
மேலும் சில வங்கிகளில் கணக்கு துவங்கியும் நீங்கள் உங்கள் Mutual Funds மூலமான சேமிப்பை துவங்கலாம். ஆனால் Mutual Funds என்பது சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது, எந்த ஒரு Mutual Fund திட்டத்தில் இணைவதற்கு முன்பாகவும், அந்த திட்டம் சார்ந்த அனைத்து ஆவணங்களையும் நன்றாக படித்து புரிந்துகொள்ளவேண்டும்.
நேரடியாக உங்கள் டிமாண்ட் கணக்கு மூலம் இந்த திட்டத்தில் இணைவதால், கமிஷன் அல்லது விநியோகஸ்தர் கட்டணம் உள்ளிட்டவை போன்ற பிரச்சனைகள் இந்த Mutual Funds சேமிப்பு முறையில் இருக்காது. மேலும் பிற முதலீட்டு திட்டங்களை விட இதில் கிடைக்கும் லாபம் என்பது மிக மிக அதிகம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
உங்களுடைய வங்கிக்கணக்கில் பணத்தை செலுத்தி நேரடியாகவே இதில் இன்வெஸ்ட் செய்யமுடியும் என்பதால் பயம் என்பது அறவே தேவையில்லை. காசோலைகளை செலுத்தி கூட உங்களால் சேமிக்க முடியும். ஆனால் கணக்கு வைத்திருப்பவரை தவிர, வேறு நபரின் கையொப்பத்தோடு உள்ள காசோலைகள் ஏற்கப்படமாட்டாது என்பதையும் அறிந்துகொள்ளவேண்டும்.
Mutual Funds கணக்கீடு
உங்களின் வயது 30, மேலும் ஒரு 3 லட்சம் ரூபாயை உங்களது வங்கி கணக்கின் மூலம் Mutual Funds திட்டத்தில் சேமிக்க முடிவு செய்துளீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். அடுத்த 25 ஆண்டுகளுக்கு அதை நீங்கள் ஹோல்டு செய்யவேண்டும். அப்படி செய்தால், உங்களின் 55வது வயதில் நீங்கள் போட்ட 3 லட்சம் முதலோடு சேர்த்து உங்களுக்கு 51,00,000 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
வயது கணக்கீடு
அதே 3 லட்சம் ரூபாய் தொகையை நீங்கள் முதலீடு செய்த....
5வது வருடத்தில் எடுத்தால் உங்களுக்கு லாபம் மாட்டும் (அசல் சேர்க்காமல்) 2,30,000 கிடைக்கும்.
10வது வருடத்தில் எடுத்தால், உங்களுக்கு லாபம் மட்டும் (அசல் சேர்க்காமல்) 6,30,000 கிடைக்கும்.
15வது வருடத்தில் எடுத்தால், உங்களுக்கு லாபம் மட்டும் (அசல் சேர்க்காமல்) 13,30,000 கிடைக்கும்.
20வது வருடத்தில் எடுத்தால், உங்களுக்கு லாபம் மட்டும் (அசல் சேர்க்காமல்) 25,00,000 கிடைக்கும்.
இப்படி நீங்கள் சேமிக்கும் காலத்திற்கு ஏற்பட உங்களுடைய லாபம் பெருகிக்கொண்டே இருக்கும். மேலும் மேலே கூறிய இந்த முறை, 12 சதவிகித வட்டி கிடைக்கும்போது பெறக்கூடிய தொகை என்பதை நினைவில்கொள்ள வேண்டும்.
குறிப்பு : ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்வது சந்தையின் நிலையை பொறுத்தே மாறும். ஆகவே அதில் இன்வெஸ்ட் செய்யும் முன்பு, அதில் அனுபவம் பெற்றிருப்பது அவசியம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்