இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்ட் புரட்சி - பெண் முதலீட்டாளர்களின் எழுச்சி! - வேற லெவல் போங்க!

பெண் முதலீட்டாளர்களில் 72% பேர், மெட்ரோ நகரங்கள் இல்லாத B30 (Beyond Top 30) நகரங்களில் இருந்து வராங்க, குறிப்பா வாரணாசி, ராஞ்சி, டேராடூன், கவுகாத்தி, வடோதரா மாதிரியான இடங்களில்.
Women-and-investing
Women-and-investing
Published on
Updated on
3 min read

பொதுவா ஒரு காய்கறி வாங்குறதுக்கு முன்னாடி, விலையை மூணு கடையில பார்த்து, பேரம் பேசி, புத்திசாலித்தனமா முடிவு எடுப்போம். இதே புத்திசாலித்தனம், இப்போ இந்தியாவின் முதலீட்டு உலகத்துல பரவி வருது, குறிப்பா மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலமா.

2025 மார்ச் மாதத்தில், இந்தியாவின் மியூச்சுவல் ஃபண்ட் சொத்துகள் (Assets Under Management - AUM) 65.74 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கு, இது 2024 மார்ச்சை விட 23.11% அதிகம். இந்த பெரிய எண்ணிக்கையைப் பார்க்கும்போது, இந்தியாவின் முதலீட்டு ஆர்வம் வெடிச்சிருக்குன்னு புரியுது. ஆனா, இந்த சொத்துகளோட 52.52% (34.52 லட்சம் கோடி ரூபாய்) வெறும் ஐந்து நகரங்களில் இருந்து வருது: மும்பை (27%), டெல்லி (12.63%), பெங்களூரு (5.39%), புனே (4%), மற்றும் கொல்கத்தா (3.49%).

மும்பை, இந்தியாவின் நிதி தலைநகரமா, 17.75 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செஞ்சு முதல் இடத்துல இருக்கு. இந்த நகரங்களில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், பணக்கார மக்கள், மற்றும் நிதி விழிப்புணர்வு அதிகமா இருக்குறது இதுக்கு காரணம். SBI ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தோட துணை நிர்வாக இயக்குநர் டி.பி. சிங், “இந்த ஐந்து நகரங்களில் இந்தியாவோட பெரும்பாலான செல்வம் குவிஞ்சிருக்கு”னு சொல்கிறார். ஆனா, இது ஒரு பக்கம் மகிழ்ச்சியான விஷயமா இருந்தாலும், இந்தியாவோட பிற பகுதிகளுக்கு இந்த முதலீட்டு அலையை எடுத்துட்டுப் போக வேண்டிய அவசியத்தையும் காட்டுது.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட்ஸ், இந்த வளர்ச்சியில் பெரிய பங்கு வகிக்குது. 2024-25 நிதியாண்டில், ஈக்விட்டி ஃபண்ட்ஸுக்கு 4.17 லட்சம் கோடி ரூபாய் நிகர உள்வரவு (net inflows) இருந்தது, இது முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம். இதனால, ஈக்விட்டி ஃபண்ட்ஸோட AUM 25.4% உயர்ந்து 29.45 லட்சம் கோடி ரூபாயாக ஆனது. இந்த வளர்ச்சிக்கு, சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) மூலமான முதலீடுகள் முக்கிய காரணம். 2024 ஆகஸ்டில், SIP முதலீடுகள் 23,547 கோடி ரூபாயாகவும், SIP கணக்குகள் 9.61 கோடியாகவும் இருந்தது. இது, ஒரு குடும்பம் மாசா மாசம் சேமிப்பு பண்ணி, படிப்படியா செல்வத்தை உருவாக்குற மாதிரி இருக்கு.

பெண் முதலீட்டாளர்களின் எழுச்சி: ஒரு புதிய அலை

இந்த மியூச்சுவல் ஃபண்ட் புரட்சியில், பெண் முதலீட்டாளர்களோட பங்களிப்பு ஒரு பெரும் எழுச்சியா இருக்கு. 2025 மார்ச் மாதத்தில், இந்தியாவில் மொத்தம் 5.34 கோடி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களில், 1.38 கோடி (25.91%) பெண்கள். இது, 2024-ல இருந்த 24.2% உயர்வு. 2017-ல, பெண் முதலீட்டாளர்களோட பங்கு 15% மட்டுமே இருந்தது, ஆனா 2023 டிசம்பரில் இது 21% ஆகவும், 2024-ல 33% ஆகவும் உயர்ந்திருக்கு. பெண்களோட மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு, 2019-ல 4.59 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது, 2024-ல 11.25 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிச்சிருக்கு.

பெண்கள் ஒரு காலத்துல தங்கம், நிலம் மாதிரியான பாரம்பரிய முதலீடுகளை மட்டுமே விரும்பினாங்க. ஆனா, இப்போ நிதி விழிப்புணர்வு, டிஜிட்டல் மயமாக்கல், மற்றும் SIP மாதிரியான எளிய முதலீட்டு வழிமுறைகள் பெண்களை மியூச்சுவல் ஃபண்ட்ஸுக்கு இழுத்திருக்கு. CAMS-னு “Women Power in Mutual Fund 2024” அறிக்கை, 79 லட்சம் பெண் முதலீட்டாளர்கள் 2 கோடி ஃபோலியோக்களை வைத்திருக்காங்கன்னு கூறுது, இது 2023-ல இருந்து 25% வளர்ச்சி. பெண்களோட AUM, 2017-ல 98,000 கோடி ரூபாயாக இருந்தது, 2024-ல 7.5 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்திருக்கு.

பெண் முதலீட்டாளர்களில் 72% பேர், மெட்ரோ நகரங்கள் இல்லாத B30 (Beyond Top 30) நகரங்களில் இருந்து வராங்க, குறிப்பா வாரணாசி, ராஞ்சி, டேராடூன், கவுகாத்தி, வடோதரா மாதிரியான இடங்களில். இது, நம்ம ஊரு சின்ன நகரங்களில் கூட பெண்கள் நிதி சுதந்திரத்தை நோக்கி பயணிக்குறாங்கன்னு காட்டுது. மகாராஷ்டிரா, கோவா, சண்டிகர், மற்றும் வடகிழக்கு மாநிலங்கள், பெண் முதலீட்டாளர்களோட பங்கு 30-40% ஆக இருக்கு.

அதேபோல் பெண்கள், ஈக்விட்டி ஃபண்ட்ஸில் 76% முதலீடு செய்யுறாங்க, இது அவங்களோட ரிஸ்க் எடுக்கும் திறனையும், நீண்ட கால பண சேமிப்பின் நம்பிக்கையையும் காட்டுது. SIP மூலமான முதலீடுகளில், பெண்கள் ஆண்களை விட 22% அதிகமா பங்களிக்குறாங்க, மற்றும் 45% அதிகமான ஒரு மொத்த தொகை (lump sum) முதலீடுகளை செய்யுறாங்க என்பது ஆச்சர்ய தகவல். குறிப்பா 26-35 வயசு பிரிவில் (74%), கான்ட்ரா, ஃப்ளெக்ஸி-கேப், மற்றும் சிறு-கேப் ஃபண்ட்ஸை விரும்புறாங்க, இது அவங்களோட பலதரப்பட்ட முதலீட்டு உத்திகளை வெளிப்படுத்துது.

பெண் முதலீட்டாளர்களின் பங்களிப்பின் முக்கியதத்துவம்

பெண்கள் எப்பவுமே சேமிப்பு மற்றும் செலவு மேலாண்மையில் முக்கிய பங்கு வகிச்சிருக்காங்க. இப்போ, அந்த புத்திசாலித்தனத்தை மியூச்சுவல் ஃபண்ட்ஸ் மூலமா செல்வ உருவாக்கத்துக்கு பயன்படுத்துறாங்க. AMFI தலைவர் நவ்னீத் முனோத், “பெண்களோட அதிகரிக்கும் பங்களிப்பு, அவங்களோட பொருளாதார அதிகாரமயமாக்கல் மற்றும் நிதி விழிப்புணர்வை காட்டுது”னு சொல்லியிருக்கார்.

இந்த மியூச்சுவல் ஃபண்ட் வளர்ச்சி, இந்திய பொருளாதாரத்துக்கு பல வழிகளில் பயன் தருது. முதலாவதா, இந்த முதலீடுகள், பங்குச் சந்தைகளுக்கு நிலையான மூலதனத்தை வழங்குது, இது நிறுவனங்களோட வளர்ச்சிக்கு உதவுது. இரண்டாவதா, SIP மூலமான சிறு முதலீடுகள், சாதாரண மக்களையும் நிதி சந்தைகளோட இணைக்குது, இது நிதி உள்ளடக்கத்தை (financial inclusion) அதிகரிக்குது. மூன்றாவதா, பெண் முதலீட்டாளர்களோட எழுச்சி, பாலின சமத்துவத்தையும், பொருளாதார அதிகாரமயமாக்கலையும் ஊக்குவிக்குது.

ஆனா, சவால்களும் இருக்கு. மியூச்சுவல் ஃபண்ட் சொத்துகள், பெரிய நகரங்களில் குவிஞ்சிருக்குறது, சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கு இந்த வளர்ச்சியை எடுத்துட்டுப் போக வேண்டிய அவசியத்தை காட்டுது. SEBI, இந்த பிரச்சனையை உணர்ந்து, “சாச்செடைசேஷன்” (sachetisation) திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கு, இதன்மூலம் 250 ரூபாய் முதல் SIP-களை அறிமுகப்படுத்தி, குறைந்த வருமானம் உள்ளவர்களையும் முதலீட்டு உலகத்துக்கு இழுக்க முயற்சிக்குது.

2024 பட்ஜெட்டில், டெப்ட் மியூச்சுவல் ஃபண்ட்ஸுக்கு இன்டெக்ஸேஷன் நன்மை (indexation benefit) நீக்கப்பட்டது, இது சில முதலீட்டாளர்களுக்கு வரி சுமையை அதிகரிக்கலாம். AMFI, இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கு, இது ரிஸ்க்-அவெர்ஸ் முதலீட்டாளர்களை பாதிக்கலாம்னு சொல்லுது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com