
2026 -ஆவது சட்டமன்ற தேர்தல் தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே சொல்லலாம். இதுவரை நாம் பார்க்காத ஒரு தேர்தலாகவும் அமையவும் வாய்ப்புள்ளது.
இந்த தேர்தல் களத்தில் புது வரவு என்றால் அது ‘தமிழக வெற்றி கழகம்’ தான். விஜய்யின் அரசியல் பிரவேசம், ஆதவ் அர்ஜுனா பிரஷாந்த் கிஷோர் ஆகியோரின் பங்களிப்பு என தமிழக வெற்றி கழகம் நல்ல ஒரு பப்ளிசிட்டியோடே களம் காண உள்ளது.
சின்ன ரீவைண்ட்..!
விஜய் அரசியலில் குதிப்பார் என்று நினைத்தது இன்று நேற்றல்ல 2013 ஆம் ஆண்டு தலைவா படம் வெளியாகி “time to lead” என கேப்ஷன் வைத்து அதற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவை கடுப்பேற்றி மன்னிப்பு கேட்ட விவகாரமெல்லாம் அவரின் அரசியல் பிரவேசத்தை உறுதிப்படுத்தின. ஆனால் அவரோ “ஓடு மீன் ஓட உறுமீன் வருமென” காத்திருந்த கொக்காய் காத்திருந்து அரசியலில் குதித்துள்ளார்.
அரசியல் எதிரியாக திமுக -வையும் கொள்கை எதிரியாக பாஜகவையும் முன்னிருத்தி தன் அரசியல் பயணத்தை துவங்கினார்.
தனது முதன்மை எதிரியான திமுக -வை வீழ்த்த அதன் பலம் பொருந்திய கூட்டணி கட்சிகளை தாக்க துவங்கினார். அதன் முதல் சாட்சி ஆதவ்”
தவெக -வில் ஆதவ்..!
“எல்லாருக்குமான தலைவர்” என்ற அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழாதான் இன்றைய அரசியல் சூழலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என அப்போது யாரும் அறிந்திருக்க நியாயமில்லை..
“திருமா கலந்துகொள்ளாத அந்த நூல் வெளியீட்டு விழாவில் விஜய்யோடு சேர்ந்து ஆதவும் திமுக -வை கிழித்து தொங்க விட்டிருந்தார். கட்சியில் பொறுப்பில் இருந்துகொண்டே கூட்டணி தர்மத்தை ஆதவ் மீறினார் என்று கூறி 6 மாதத்திற்கு விசிக -விலிருந்து விலக்கப்பட்டார். அவ்வளவுதான் இதன் வாய்ப்பு என்று விஜய்யின் தவெக -ல் சென்று சேர்ந்து கொண்டார் ஆதவ், போன உடனே “தமிழகத்தின் பிரஷாந்த் கிஷோர்” என்று அறியப்படும் ஆதவ் அர்ஜுனாவிற்கு “தேர்தல் வியூக பொதுச்செயலாளர் “ என்னும் சிறப்பு பதவி வழங்கப்பட்டது.
முட்டிக்கொண்ட பி.கே மற்றும் ஆதவ்..!
இதற்கிடையில் புகழ்பெற்ற தேர்தல் வியூக வகுப்பாளரான பிரஷாந்த் கிஷோரை வைத்து 2026 தேர்தலை அணுக உள்ளார். இவர்தான் 2021 -திமுக வெற்றிக்கு காரணமானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2026 -இல் விஜயை ஆட்சி கட்டிலில் அமர வைப்பேன் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார் பி.கே. “ஆனால் தமிழக பி.கே வான ஆதவ் அவரை இங்கு கொண்டு வந்ததே நான்தான் எனகூறிக்கொண்டுள்ளார். இந்நிலையில் பிரஷாந்த் கிஷோரின் “ஜன் சூரத்” கட்சி பீகாரில் தேர்தலை சந்திக்க உள்ளது. மேலும் இந்த தேர்தலுக்கு ஆதவ் நிதியுதவி வழங்கினார் என்றும் சொல்லப்படுகிறது.
இப்படி பரஸ்பர நண்பர்களாக இருந்த இவர்களுக்கு இடையில் பனிப்போர் ஏற்பட்டிருக்கிறது. தவெக -உடன் ஒப்பந்தம் போட்ட ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆப் கமென் நிறுவனம் நந்தனம் -இல் அலுவலகத்தை துவங்கி தேர்தல் வேலையை ஆரம்பித்துவிட்டது. இந்நிலையில் பிகாரில் தேர்தல் நடப்பதால் பி.கே வெறும் ஆலோசனை மட்டுமே சொல்லுவார் நம் டீமை வைத்து நாம் அதை செயல்படுத்திக்கொள்ளலாம் என நினைத்திருந்த ஆதவிற்கு அதிர்ச்சிதான் மிச்சம்.
பி.கே -ன் ஐ பேக் நிறுவுவனம் அதன் பங்கிற்கு ஒரு அலுவலகத்தை போடு தந்து வேலையை துவங்கிவிட்டது. இதனால் அதிர்ந்து போன ஆதவ் பி.கே வின் ஊழியர்கள் மீது கடுப்பில் சுற்றியுள்ளார். அது மட்டுமின்றி ‘ஐ பேக்’ ஊழியர்கள் 15 -பேரை எந்த காரணமும் சொல்லாமல் ஏற்கனவே வேலையைவிட்டு ஆதவ் அனுப்பிவிட்டார் என்ற குற்றச்சாட்டும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
புதிய அலுவலகத்தை துவங்கியதோடு மட்டுமல்லாம், ‘சிம்பிள் சென்ஸ்’ என்ற நிறுவனத்தோடு இணைத்து ஆட்சேர்ப்பு வேலையிலும் ஈடுபட்டு வருகிறார் பி.கே. இதனால் ரத்த கொதிப்பான ஆதவ் “நான்தான் தவெக -ன் தேர்தல் வியூக செயலாளர், நான் சொல்லுவதை மட்டும் கேளுங்கள் “ என ஐ பேக் நிறுவனத்திற்கு செய்தி அனுப்பியுள்ளார். ஆனால் இதனை கொஞ்சமும் மதிக்காத பி.கே டீம் “ நாங்கள் பிரஷாந்த் கிஷோர் மூலம் விஜய்யிடம் இனிமேல் டீல் செய்துகொள்கிறோம்” என்று பேசியுள்ளனர். இதனால் செம்ம அப்செட்டில் இருக்கிறார் ஆதவ்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்