
நேற்றைய தினம் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். வரவேற்பு உரையை தொடர்ந்து பேசிய அண்ணாமலை அவர்கள் “10 ஆண்டுகளில் வறுமையை அகற்றியவர் பிரதமர். சார்களும் தம்பிகளும் இருக்கும் போது எப்படி மக்கள் நிம்மதியாக இருக்க முடியும், நான்கு ஆண்டுகளாக பாதுகாப்பற்ற ஆட்சியை நடத்தும் திமுக - வை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். திமுகவை வீட்டுக்கு அனுப்புவதே நமது ஒற்றை இலக்கு” என பேசியுள்ளார்.
அடுத்ததாக பேசிய நயினார் நாகேந்திரன் “பொய்கள் நிறைந்த கட்சி திமுக. மக்களுக்கு பாதுகாப்பற்ற ஆட்சி நடத்தி வரும் கட்சி திமுக. அமித்ஷா என்ன செய்தார் என்று கேட்கும் திமுக அவரை பற்றி சற்று தெரிந்துகொண்டு பேசுங்கள். உங்கள் ஆட்சிக்கு முடிவு கட்ட அமித்ஷா தமிழகம் வந்துள்ளார்.” என கூறியுள்ளார்.
அடுத்ததாக தொண்டர்களிடம் பேசிய அமித்ஷா “ தமிழ் மக்களிடம் வந்து தமிழில் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது. முருகன் மாநாடு மதுரையில் சிறப்பாக நடத்த வேண்டும். இந்த கூட்டம் திமுக ஆட்சியை நிச்சயம் முடிவுக்கு கொண்டு வரும் எனது சிந்தனைகள் தமிழகத்தின் மீது உள்ளது. தமிழக மக்கள் திமுகவை தோற்கடிக்க காத்து கொண்டிருக்கிறார்கள். சிந்தூர் தாக்குதலுக்கு தமிழகத்தில் இருந்து வந்த ஒத்துழைப்பை நான் நினைவு கூறுகிறேன். இன்று இந்திய இளைஞர்கள் உச்சரிக்கும் ஒரு வார்த்தை நமது இந்தியாவின் வான்வெளி தாக்குதல். மறுபடியும் தீவிரவாதிகள் வாலாட்டினால் அவர்கள் அழிக்கப்படுவார்கள் என்பதை சொல்லிக் கொள்கிறேன்.
ஊழல் அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது திமுக. மோடி கொடுக்கும் நிதிகளை கூட மக்களுக்கு ஒதுக்கீடு செய்யாமல் ஊழல் செய்து கொண்டிருக்கிறார்கள். கள்ளச்சாராயத்தால் பல பேர் தமிழகத்தில் இறந்து உள்ளனர். தமிழகத்தில் ஜாதி பிரச்சனையும் பிரிவினைவாதமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளது. தமிழ்நாட்டின் முதல்வருக்கு இவற்றையெல்லாம் பற்றிய அக்கறையோ கவலையோ கிடையாது. பாஜக தொண்டர்களின் ஒவ்வொருத்தருடைய எண்ணம் திமுக ஆட்சியை அகற்றுவதில் தான் இருக்க வேண்டும்” என பேசி தனது உரையை முடித்துள்ளார்.
எடப்பாடி அதிருப்தி!
ஆனால் அமித்ஷாவின் இந்த பேச்சு கட்சிக்குள் சலசப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பல ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட கட்சி, தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி கட்சி, அத்தகைய கட்சியை ஓரங்கட்டிவிட்டு ஆட்சியை கைப்பற்ற பாஜக முயல்கிறது என விமர்சகர்கள் உலர் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பால்
மேலும் திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை கையிலெடுத்து மத பிரிவியையே உண்டாக்க நினைத்தது, ஆனால் பாஜக -விற்கு வற்றி பெற்றுதரக்கூடிய “strategy” - ம் அதுதான். அதே நோக்கோடு தான் அடிக்கடி தமிழகம் வந்து செல்கிறார் அமித்ஷா. ஆனால் “2026 -ல் பாஜக கூட்டணி தான் ஆட்சியை அமைக்கும் என அவர் பேசியிருந்த நிலையில் இதானால் எடபடிக்கும் பாஜக -விற்கும் இடையே முட்டிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.