
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜூன் 8 அன்று மதுரை ஒத்தக்கடையில் நடைபெறும் மாநில நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்பதை முன்னிட்டு, அதற்கான முகூர்த்தக்கால் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மேற்பார்வையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் 2026 அரசியல் களம் மிக முக்கியமான ஒன்று.
அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. ஆனலும் திமுக -வை வீழ்த்த இது போதாது என நிச்சயம் எடப்பாடிக்கு தெரியும். அதனால்தான் அதிமுக-வினர் ஒரு நாளைக்கு 2 முறை விஜய் -யை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கின்றனர். ஆனாலும் பெரிதளவில் எந்த மாற்றமும் நிகழ்ந்ததாக தெரியவில்லை.
குருமூர்த்தி - ராமதாஸ் சந்திப்பு!
பாஜக -வின் ஒற்றை குறிக்கோள் திமுக -வை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்பதுதான். இந்தியாவிலே மிகவும் பலம் பொருந்திய ஒரு கட்சி அதன் ஒரு மாநிலத்தில் படுதோல்வியை சந்திப்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்பதை போலவே பாஜக -தலைவர்கள் நடந்துகொள்கின்றனர்.
இதன் விளைவாகவே அவர்கள் கூட்டணி குறித்து இவ்வளோ தூரம் பிரயத்தனப்படுகின்றனர். இந்த நிகழ்வுகள் எல்லாம் எடப்பாடியை மிகவும் சங்கப்படுத்துவதாக சில தகவல்கள் கசிகின்றன.
இந்நிலையில்தான் நேற்று ஆடிட்டர் குருமூர்த்தியும், அதிமுக -வின் சைதை துரை சாமியும் சென்று ராமதாஸை சந்தித்துள்ளனர்.
கட்சி பிளவை சரி செய்து அதிமுக-பாஜக-பாமக கூட்டணியை உருவாக்கவே இந்த பேச்சு வார்த்தை நடந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் சில தினங்களுக்கு முன்பு துக்ளக் பத்திரிகையில் பாமக - பாஜக கூட்டணி குறித்து ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது, அதில் NDA கூட்டணியோடு பாமக இணையாவிட்டால் அது இருதரப்பிலும் சேதத்தை ஏற்படுத்தும் குறிப்பிடப்பட்டிருந்தது, அதன் பேரிலே இன்று இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் குருமூர்த்தி இதனை மறுத்து “ராமதாஸ் எனது நீண்ட நாள் நண்பர், நட்பு ரீதியாகவே அவரை பார்க்க வந்தேன்” - என மழுப்பி இருந்தார்.
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் துக்ளக் இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, “அடுத்த ஆண்டு தேர்தலில் திமுகவை தோற்கடிக்க பாஜகவும், அதிமுகவும் சேர வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், பழனிசாமி போன்ற ஒரு தலைவரை வைத்து கொண்டு இந்த இணைப்பை எப்படி ஏற்படுத்துவது என்பது புரியவில்லை. திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்ற உறுதி பழனிசாமியிடம் இல்லை” என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது இதில் பாமகவை இணைப்பதன் மூலம் இது எடப்பாடியின் வியூகம் அல்ல அமிட்ஷாவின்வியூகம் என புரிந்துகொள்ளலாம்.
நயினார் நாகேந்திரன் பேட்டி!
அமித்ஷா நாளை இரவு மதுரை வருகிறார். நாளை மறுநாள் மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு மாலையில் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார்.அமித்ஷாவை சந்திக்கிறாரா அன்புமணி?அமித்ஷா - அன்புமணி சந்திப்பு குறித்து இதுவரை திட்டம் இல்லை. ராமதாஸ் - அன்புமணி சமரச பேச்சுவாரத்தைக்கு குருமூர்த்தியை பாஜக அனுப்பியதா?
சமரசம் என்ற வார்த்தையில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு.
குருமூர்த்தி நாட்டில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என முயல்கிறார். அவர் ஒரு நலவிரும்பி.
அதிமுக - பாஜக கூட்டணியில் பாமக, தேமுதிகவின் நிலை என்ன?
பாமக எங்கள் கூட்டணியில் இணையும். தேமுதிகவும் எங்கள் கூட்டணியில் இணையும் என நம்பிக்கை உண்டு.
அமித்ஷாவால் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது என முதல்வரின் விமர்சனம் குறித்து...?
திமுகவுக்கு "ஷா" என்றால் பயம். அமித்ஷா தான் மகாராஷ்டிராவில் ஆட்சியை கொண்டு வந்தவர்.
என பேசியுள்ளார். ஆனால் நம் அனைவருக்கும் தெரியும் இது பாமக -வை NDA -வில் இணைக்கு முயற்சி என்பது அப்பட்டமாக தெரிகிறது. “முழுவதும் நனைந்த பிறகு முக்காடு எதற்கு”
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்