திருப்பரங்குன்றத்திற்கு திடீர் விசிட் அடித்த திருமாவளவன்; பரபரக்கும் திருப்பரங்குன்றம்..! பாஜக -விற்கான எச்சரிக்கையா!?

தவாத சக்திகள் இந்த பிரச்சினையை பெரிதாக்க கூடாது தமிழ்நாட்டில் இதை வைத்து மதத்தின் அடிப்படையில் வன்முறைக்கு வித்திட கூடாது ...
thirumavalavan in thiruparangundram
thirumavalavan in thiruparangundrammmtv
Published on
Updated on
1 min read

மதவாத சக்திகள் இந்த பிரச்சினையை பெரிதாக்க கூடாது தமிழ்நாட்டில் இதை வைத்து மதத்தின் அடிப்படையில் வன்முறைக்கு வித்திட கூடாது என்று விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பிலே நான் வேண்டுகோள் விடுகிறேன். -திருமாவளவன் பேட்டி

சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவருமான தொல் திருமாவளவன் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார் அதைத்தொடர்ந்து அருகில் உள்ள ஸ்கந்தர் பாதுஷா அவூலியா பள்ளிவாசலில் திருப்பரங்குன்றம் மலை குறித்த பிரச்சினைகளை பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கேட்டறிந்து வருகிறார். 

இதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள அருள்மிகு சோமப்பா சுவாமிகள் திருக்கோவிலுக்கு செல்ல உள்ளதாக தகவல். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் சர்ச்சைக்கு பிறகு மீசிக தலைவர் திருமாவளவன் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு பள்ளிவாசல் நிர்வாகிகளை சந்தித்திருப்பது திருப்பரங்குன்றம் பகுதியில் மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தொல் திருமாவளவன் கூறுகையில்:

தர்கா மலை உச்சியிலே இருக்கிறது அதேபோல, இந்துக்கள் வழிபாடு செய்கிற காசி விஸ்வநாதர் ஆலயமும் இதே மலையின் உச்சியில் இருக்கிறது. இரண்டு தரப்பு மக்களும் ஒரே பாதையில் சென்று நெல்லித்தோப்பு என்ற இடத்தில் பிரிந்து தனித்தனியாக தங்களின் வழிபாட்டு தளங்களுக்கு செல்வது வாடிக்கையான ஒன்று. மலைக்கு அடியிலே பழனி ஆண்டவர் கோயில் இருக்கிறது, திருப்பரங்குன்றம் முதல் படைவீட்டு முருகன் கோவில் இருக்கிறது, ஒருவருக்கொருவர் சகோதரத்துவமாக வாழ்ந்து வருகிறார்கள். ஆனால் சில மதவாத அமைப்புகள் இதனை தலையீடு செய்து இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையிலே பகையை வளர்க்க முயற்சிக்கிறார். 

அண்மைக்காலமாக இது தமிழகத்தில் பேசு பொருளாக மாறி இருக்கிறது எனவே இந்த பகுதியில் உள்ள மக்களை சந்திக்க வேண்டும் என்கிற ஆவலில் நான் இன்றைக்கு திருப்பரங்குன்றம் வருகை தந்தேன். 

முருகன் கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து விட்டு இந்த மலை உச்சியில் இருக்கிற தர்காவுக்கு செல்லலாம் என்று வந்தோம் ஆனால் நேரம் உச்சி வேலையாக இருப்பதால் நெடுந்தூரம் மலை ஏற முடியாத ஒரு சூழலில் இந்த அடிவாரத்திலேயே இரு தரப்பு பிரதிநிதிகளையும், இந்து சமூகத்தை சார்ந்த பிரதிநிதி தமிழன் திமுக கவுன்சிலர் இருக்கிறார். சமூக நல்லிணக்கம் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தேன். தங்கள் இடையில் இருந்த பகை இல்லை என்பதை தெளிவு படுத்தினார்கள்.

ஆகவே மதவாத சக்திகள் இந்த பிரச்சினையை பெரிதாக்க கூடாது தமிழ்நாட்டில் இதை வைத்து மதத்தின் அடிப்படையில் வன்முறைக்கு வித்திட கூடாது என்று விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பிலே நான் வேண்டுகோள் விடுகிறேன். அதை வலியுறுத்தி இன்று மாலை மதுரையிலே நடைபெறுகிற மனித சங்கிலி போராட்டத்துடன் நான் பங்கேற்கிறேன் எனக் கூறினார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com